தெரியுமா?: சாகித்ய அகாதமி விருது தெரியுமா?: நாஞ்சில்நாடனுக்கு இயல் விருது
|
|
தெரியுமா?: டாக்டர். பிரசாத் ஸ்ரீனிவாசன் |
|
- |ஜனவரி 2013| |
|
|
|
|
|
டாக்டர். பிரசாத் ஸ்ரீனிவாசன் இரண்டாவது முறையாக கிளாஸ்டன்பரியிலிருந்து (கனெக்டிகட்) மாகாணப் பிரதிநிதியாகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். (நேர்காணல் பார்க்க: தென்றல், டிசம்பர் 2010). அவையின் ஒரே மருத்துவரான இவரை உடல்நலம் தொடர்பான விஷயங்கள் குறித்து அவையின் எல்லாத் தரப்பினரும் ஆலோசனைக்கு அணுகுவர் என்பது குறிப்பிடத் தக்கது. லைம் நோய் (Lyme disease) குறித்து ஆராய ஒரு செயற்குழுவை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். மருத்துவச் செலவை அதிகரித்து, மருத்துவ வசதியைக் குறைத்திருக்கக் கூடிய சட்டத் திருத்த மசோதா ஒன்றை இவர் எதிர்த்துப் பேசியதில் அவையின் இரு தரப்பினரும் இவரது கருத்தை ஏற்று அதனைத் தோற்கடித்தனர். பல சேவை நிறுவனங்களும், மருத்துவ நிறுவனங்களும் இவரது பங்களிப்பை அங்கீகரித்து இவரைக் கௌரவித்துள்ளன. பொருளாதாரப் பொறுப்புணர்வோடு செயல்படுதல், பொதுக்கல்வித் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றிற்கான குழுக்களிலும் பங்காற்றி வருகிறார் டாக்டர். பிரசாத். "அண்டை மாநிலங்கள் நன்றாகச் செயல்படுகின்றன. ஆனாலும் கனெக்டிகட்டின் மேம்பாடு எனது குறிக்கோள்" என்கிறார் பிரசாத் ஸ்ரீனிவாசன்.
மேலே காணும் படம் கனெக்டிகட் தோலியல் சிகிச்சைக் கழகமும், கனெக்டிகட் இ.என்.டி. கழகம் மற்றும் கனெக்டிகட் சிறுநீரகவியல் கழகம் ஆகியவை டாக்டர். பிரசாத் ஸ்ரீனிவாசனுக்கு 2012ம் ஆண்டுக்கான 'நலவாழ்வுத் தலைமை' விருதை அளித்தபோது எடுக்கப்பட்டது. இதில் ஸ்ரீனிவாசனுடன் டாக்டர் கென் யானகிசாவா மற்றும் டெபி ஆஸ்பார்ன் ஆகியோர் காணப்படுகின்றனர். |
|
|
|
|
More
தெரியுமா?: சாகித்ய அகாதமி விருது தெரியுமா?: நாஞ்சில்நாடனுக்கு இயல் விருது
|
|
|
|
|
|
|