ஒரு சாதம் இரண்டு ஸ்வீட்! தேங்காய் திரட்டுப் பால்
|
|
|
|
|
தேவையான பொருட்கள் தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம் ரவை - 1/2 கிண்ணம் பால் - 1 கிண்ணம் சர்க்கரை - 1 1/2 கிண்ணம் ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி நெய் - 1/2 கிண்ணம் முந்திரிப் பருப்பு - 8 கேசரிப் பவுடர் - 1 சிறிய கரண்டி
செய்முறை தேங்காயைப் பால்விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ரவையை வறுத்துக் கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவிட்டு அதில் ரவையைப் போட்டு வேகவைத்து, அரைத்த தேங்காய் விழுதைப் போட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இடையிடையே நெய் விட்டு கேசரிப் பவுடர், ஏலப்பொடி தூவவும். நன்றாகச் சுருண்டு வரும்போது முந்திரி வறுத்துப் போட்டுத் தாம்பாளத்தில் நெய் தடவிக் கொட்டிச் சமப்படுத்தவும். ஆறியதும் வில்லைகளாகப் போட்டுக் கொள்ளவும். மிகச் சுவையான அல்வா இது. |
|
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், கலிஃபோர்னியா |
|
|
More
ஒரு சாதம் இரண்டு ஸ்வீட்! தேங்காய் திரட்டுப் பால்
|
|
|
|
|
|
|