|
கணிதப் புதிர்கள் |
|
- அரவிந்த்|ஆகஸ்டு 2012| |
|
|
|
1. சங்கர் 8 கேக்குகளை 4 நிமிடத்தில் சாப்பிட்டு விடுவான். காயத்ரி 9 கேக்குகளை 6 நிமிடத்தில் சாப்பிட்டு விடுவாள். இருவரும் சேர்ந்து 21 கேக்குகளைச் சாப்பிட எத்தனை மணிநேரம் ஆகும்?
2. கீதாவின் தாத்தாவினுடைய வயதின் இரண்டடுக்கையும் சீதாவினுடைய பாட்டியினுடைய வயதின் இரண்டடுக்கினையும் கூட்டினால் 9266 வருகிறது. தாத்தா வயதின் இரண்டடுக்கிலிருந்து பாட்டி வயதின் இரண்டடுக்கைக் கழித்தால் 816 வருகிறது. தாத்தா, பாட்டியின் வயது என்ன?
3. வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்? 1, 1, 4, 8, 9, 27...... ?
4. A, B என்ற இருவரிடமும் இருக்கும் டாலரின் எண்ணிக்கை 60/- Cயிடம் இருக்கும் தொகையில் ஐந்தில் ஒரு பாகம் மட்டுமே Aயிடம் இருக்கிறது. Bயை விட அதிகமாக 7 மடங்கு தொகை Cயிடம் உள்ளதென்றால், A, B, C மூவரிடமும் இருக்கும் தொகை எவ்வளவு?
5. ராமு, சோமுவிடம் 5:7 என்ற விகிதத்தில் சில சாக்லெட்டுகள் இருந்தன. ராமுவின் தாத்தா இருவரிடமும் மேலும் ஐந்து சாக்லேட்டுக்களைக் கொடுத்தார். இப்போது அவை 3 : 4 என்ற விகிதத்தில் மாறி விட்டன. ராமு, சோமுவிடம் இருந்த சாக்லேட்டுக்களின் எண்ணிக்கை என்ன?
அரவிந்த் |
|
விடைகள் 1. சங்கர் 8 கேக்குகளை 4 நிமிடத்தில் சாப்பிட்டு விடுகிறான் எனில் அவன் 1 நிமிடத்தில் சாப்பிடும் கேக் = 8/4 = 1/2 காயத்ரி 9 கேக்குகளை 6 நிமிடத்தில் சாப்பிட்டு விடுகிறாள் எனில் அவள் 1 நிமிடத்தில் சாப்பிடும் கேக் = 9/6 = 3/2
இருவரும் சேர்ந்து 1 நிமிடத்தில் சாப்பிடும் கேக் = 8/4 + 9/6 = (24+18)/12 = 42/12 = 21/6 இருவரும் சேர்ந்து 1 நிமிடத்தில் 21ல் 6 பங்கைச் சாப்பிடுவார்கள் என்றால், அவர்களுக்கு 21 கேக்குகளைச் சாப்பிட ஆகும் நேரம் 6 நிமிடங்கள்.
2. தாத்தாவின் வயது = x; பாட்டியின் வயது = y
x2 + y2 = 9266 (+) x2 - y2 = 816 ---------------------------- 2x2 = 10082 x2 = 10082/2 = 5041 x = 71 தாத்தாவின் வயது = 71
பாட்டியின் வயது = y2 = (x2 + y2) - x2 = 9266 - 5041 y2 = 4255 y = 65 பாட்டியின் வயது = 65
3. வரிசை 12, (1 x 1 = 1); 13, (1 x 1 x 1 = 1); 22, (2 x 2 = 4); 23 (2 x 2 x 2 = 8); 32 (3 x 3 = 9); 33 (3 x 3 x 3 = 27) என்ற வசையில் அமைந்துள்ளது. இதன்படி அடுத்து வர வேண்டிய எண் = 42 = ( 4 x 4 = 16); 42 = 4 x 4 x 4 = 64. ஆக அடுத்து வர வேண்டிய எண் 16 மற்றும் 64
4. A + B = 60; A = x என்றால், C = 5x; B = C/7 = 5x/7 A + B = 60 = x + 5x/7 = 60 = 12x/7 = 60 12x = 7 x 60 = 420 x = 35 ஆக, Aயிடம் இருப்பது $35/- Bயிடம் இருப்பது = 60 - A = 60 - 35 = $ 25 Cயிடம் இருப்பது = C = A x 5 = 35 x 5 = $ 175
5. ராமு. சோமுவிடம் இருந்த சாக்லேட்டுகளின் எண்ணிக்கை = 5:7
தாத்தா கொடுத்தது = 5 5x + 5; 7x + 5 = 3 : 4 4(5x + 5) = 3 (7x + 5) 20x + 20 = 21x + 15 x = 5
ராமுவிடம் இருந்த சாக்லேட்டுக்களின் எண்ணிக்கை = 5 x 5 = 25; சோமுவிடம் இருந்த சாக்லேட்டுக்களின் எண்ணிக்கை 7 x 5 = 35. தாத்தா கொடுத்த ஐந்து சாக்லேட்டுக்களைச் சேர்க்க = 25 + 5 = 30; 35 + 5 = 40 = 30 : 40 = 3 : 4 |
|
|
|
|
|
|
|