நாட்டிய பேரொளி மறைந்தது
|
|
|
நம் வளைகுடா பகுதியில் சிவமணி மாமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட, திரு காமேஸ்வரன் சிவமணி அவர்கள், 1973-ம் வருடம் அமெரிக்காவிற்கு வந்தார். தன் குடும்பத்துடன் வளைகுடா பகுதிக்கு 1986-ம் வருடம் குடிபெயர்ந்தார். அப்போதிலிருந்து, அவரும் அவர் மூலமாக அவருடைய குடும்பத்தினரும், இங்கு வாழும் தமிழ் குடும்பங்களை தனது இசை மற்றும் பிற சமூக சேவையினால் தனதாக்கினர். அவருடைய இல்லத்தில் இசை நிகழ்சி வழங்குவதை இங்குள்ள கலைஞர்கள் மிகவும் பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதினர். பலர் தனது இசைப் பயணத்தை இவர் இல்லத்தில் துவக்கியும் உள்ளனர். தன்னுடைய குறையாத சக்தியினால் இந்த சமூகத்திற்கு ஒரு தனி மனிதன் பெறுவதைவிட அதிகம் அளித்தவர். இந்தியாவிருந்து வரும் இசை கலைஞர்களுக்காக தன் இல்லக்கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருந்தார். |
|
SIFA மற்றும் தமிழ் மன்றத்தின் தலைமை பொறுப்பிலிருந்தவர். பல இடங்களில், இசை விழா நடப்பதற்கு மூல காரணமாக இருந்தவர். அவருக்கு துணையாக மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். தேவி உபாசகரான அவர், நவராத்திரி இரவில், தேவியின் புகழ் பாடும் இசையை கேட்டுக் கொண்டே இவ்வுலகைவிட்டு மறைந்தது மனித நம்பிக்கையை மீறிய ஒரு அசாதாரண நிகழ்வு.
அனுராதா சுரேஷ்; தமிழ் வடிவம்: சிவகுமார் நடராஜன். |
|
|
More
நாட்டிய பேரொளி மறைந்தது
|
|
|
|
|
|
|