|
|
1. நான்கு ஒன்றுகளைப் பயன்படுத்தி எழுதப்படும் மிகப் பெரிய எண் எது?
2. மூன்று வருடங்களுக்குப் பிறகு சந்திரிகாவின் வயது என்னவாக இருக்கிறதோ அதை மூன்றால் பெருக்கிவரும் விடையிலிருந்து, மூன்று வருடங்களுக்கு முன்னால் சந்திரிகாவின் வயது என்னவாக இருந்ததோ அதை மூன்றால் பெருக்கிவரும் விடையைக் கழித்தால் சந்திரிகாவின் தற்போதைய வயது கிடைக்கும் என்றால் சந்திரிகாவின் வயது என்ன?
3. 12 x 483 = 5796. இந்தச் சமன்பாட்டில் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள அனைத்து எண்களும் இடம் பெற்றுள்ளன. இதே அமைப்பில் உள்ள வேறு சில சமன்பாடுகளை உங்களால் கூற இயலுமா?
4. (8888 - 888)/8=1000;
எட்டு முறை 8 என்ற எண்ணையும் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் போன்ற கணிதக் குறிகளையும் பயன்படுத்தி இதே போன்று 1000 விடையாக வரச் செய்ய வேண்டும். இயலுமா?
5. 153 = 13 + 53 + 33. இதே போன்ற வரிசையில் உள்ள பிற எண்களைக் கூற முடியுமா?
அரவிந்த் |
|
விடைகள் 1) 1111 அல்ல. 11 ^ 11 தான் சரியான விடை. 11 ^ 11 = 285311670611
2) சந்திரிகாவின் தற்போதைய வயது = x
மூன்று வருடங்களுக்குப் பிறகு சந்திரிகாவின் வயது = x + 3; மூன்று வருடங்களுக்கு முன்னால் சந்திரிகாவின் வயது = x - 3;
இரண்டையும் மூன்றால் பெருக்க 3(x + 3) - 3 (x - 3) = x; 3x + 9 - 3x - 9 = x;
x = 18.
மூன்று வருடங்களுக்குப் பிறகு = 18 + 3 = 21; 21 x 3 = 63; மூன்று வருடங்களுக்கு முன்னால் = 18 - 3 = 15; 15 x 3 = 45; ஒன்றிலிருந்து ஒன்றைக் கழிக்க = 63 - 45 = 18
ஆக, சந்திரிகாவின் தற்போதைய வயது = 18.
3) இதே அமைப்பில் பல சமன்பாடுகளை உருவாக்க இயலும். உதாரணத்திற்கு ஒரு சில...
28 x 157 = 4396
18 x 297 = 5346
42 x 138 = 5796
48 x 159 = 7632
....................................
4) பல முறைகளில் இயலும். உதாரணத்திற்கு ஒரு சில...
8(8 x 8 + 8 x 8) - 8 - 8 - 8 = 1000
8 + 8 -------- (8 x 8 x 8 - 8) - 8 = 1000 8
88 - 8 8 + 8 ( --------- ) (8 + --------- ) = 1000 .8 8
888 + 88 + 8 + 8 + 8 = 1000
5) முடியும். 370 = 33 + 73 + 03; 371 = 33 + 73 + 13; 407 = 43 + 03 + 73 |
|
|
|
|
|
|
|