Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிரிக்க சிரிக்க
நானொரு மேடைப் பாடகன்
- வற்றாயிருப்பு சுந்தர்|ஜனவரி 2012||(1 Comment)
Share:
நண்டு சிண்டெல்லாம் 'மும்பே வா அம்பே வா' என்று ராகமாகப் பாடும் பாடல்கள் இப்போதெல்லாம் யூட்யூபில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. சுருதி சுத்தமாகப் பாடுகின்றன வாண்டு கள். இதில் முக அபிநயம் வேறு! நாமெல்லாம் 'ச்சோ ச்வீட்!’ என்று புளகாங்கிதம் அடைந்து கொள்கிறோம். இதெல்லாம் அநியாய ஓர வஞ்சனையா கத்தான் எனக்குப் படுகிறது. நானெல் லாம் அதே நண்டு சிண்டாக இருந்த போது பாடிய "ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா" பாட்டுக்கு விளக்குமாற்றடி (இலக்கணம்: முதல் மூன்றடி, முதுகில் முவ்விளார்; ஈற்றடி உள்ளங்கையில்) தான் கிடைத்தது. பாட்டி தலையடித்துக் கொண்டே புலம்பிக்கொண்டு அடுக்க ளைக்குப் போக, தாத்தா கொல்லைப் புறத்தில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு யாரையாவது வைது கொண்டி ருக்கையில் திண்ணை தட்டிக் கதவைத் தாண்டிய மெயின் தகரக் கதவில் புளிய மரத்துக் குச்சிகளால் டங்கு டகர டங்கு டகர என்று நாராசமாக 1000 வாட்டுக்கும் மேலான ஒலியில் எத்தனை பாடல்கள் பாடியிருக்கிறேன் தெரியுமா? பாராட்டத் தான் ஆளில்லை.

வற்றாயிருப்பு நடுத்தெருவில் வீனஸ் இசைக்குழு என்று ஒன்றை மணி ஐயர் வைத்திருந்தார். அவர் மகன் டிரம்ஸ் வாசிக்க, மகள் பாடுவார். மணி ஐயர் தபலா, மிருதங்கம், மோர்சிங் என்று ஏழெட்டு வாத்தியங்களைச் சுற்றி வைத் துக்கொண்டு பாட்டுக்குத் தகுந்தபடி அஷ்டாவதானம் செய்வார். மெய்யா லுமே குடும்ப ஆர்க்கெஸ்ட்ரா என்றால் அதுதான்.

கடைத்தெரு மேடைக்குப் பின்புறம் இருந்த முத்தாலம்மன் கோவிலின் ஆண்டுத் திருவிழாவில் பந்து, பலூன், பஞ்சு மிட்டாய், ஜங்ஜங்கென்று பொம்மை ஜிஞ்சா அடிக்க பட்டை பட்டையாய் மூங்கிலில் சுற்றியிருக்கும் ஜவ்வு மிட்டாய் போக, இரவில் வீனஸ் இசைக்குழுவின் நிகழ்ச்சிதான் ஹை லைட். மணி ஐயரின் மகள் "செல்லாத்தா செல்ல மாரியாத்தா" என்று டிரம்ஸ் அதி ரப் பாடும்போது கைதட்டலும் விசில் களும் தூள் பறக்கும். எனக்கும் லேசாக அருள் வருவதுபோல பிரமையெழும். வற்றாயிருப்பில் ஆர்க்கெஸ்ட்ரா என்பது காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுவதைப் போல--எப்போதாவது நிகழும் அபூர்வம். அது நிகழும்போது சுற்று வட்டார மக்கள் எல்லோரும் வந்து குவிந்துவிடுவார்கள்.

வீனஸ் இசைக்குழு கொஞ்சம் பிரபலமாகி அம்மன் பாடல்களிலிருந்து அடுத்த நிலைக்குச் சென்று சினிமாப் பாடல்கள் பாட ஆரம்பித்தார்கள். அது எண்பது களின் ஆரம்பத்தில். வெள்ளைப் பிள்ளையார் கோவில் தாண்டி, அரிசன மக்கள் குடியிருப்புக்கு முன்பாக ஒரு சிறிய பேருந்து நிலையம் இருந்த நினைவு. கூமாப்பட்டி செல்லும் பேருந்துகள் உள்ளே மெதுவாக நுழைய நடத்துனர் படியில் நின்றுகொண்டு ஜீவன் போவது போல விசிலடித்துக் கொண்டேயிருக்க, ஏற இறங்க யாருமில்லாவிட்டால் அப்படியே வெளியேறிச் சென்றுவிடும். நிறையப் பன்றிகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிக்கும். அந்த இடத்தில் நடந்த இரவுக் கச்சேரி ஒன்று நன்றாக நினைவிருக்கிறது. ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து பாடகர்கள் வந்திருந்தார்கள். பயணங்கள் முடிவதில்லை படத்திலிருந்து மணி யோசை கேட்டு எழுந்து பாடலை அட்டகாசமாக அதே இருமல் தொண்டைச் செருமலுடன் பாடினார் அந்தப் பாடகர். கடைவாயிலிருந்து ரத்தம் வருகிறதா என்று கிலியுடன் அவர் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அதற்குப்பின் எத்தனையோ கச்சேரிகள் - சுற்று வட்டாரத்தில் எதையும் விட்டதாக நினைவில்லை. திரையில் நிழலாகத் தோன்றும் பாத்திரங்கள், பதிவுசெய்யப் பட்ட வசனங்கள், பாடல்களைப் பார்த்தே பழகிய ரசிகர்களுக்கு, நிஜத்தில் பாடல் கேட்கையில் எழும் பரவசம் வித்தியாசமானது. "அப்படியே டிஎம்எஸ் மாரியே பாடறாண்டா!" போன்ற ஆச்சரியங்கள் சுவையானவை. ஆர்க்கெஸ்ட்ரா துவங்குவதற்கு ஓரிரு மணி நேரத்துக்கு முன்னதாக மேடை அமைப்பு, ஒலி யமைப்பு எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்க நாங்களெல்லாம் கூடிவிடுவோம். ஒவ்வொரு வாத்தியக்காரராக வந்து அவரவரர் வாத்தியத்தை இசைத்துச் சரிபார்ப்பதைப் பார்ப்பதும் கேட்பதும் பெரிய திரில். டங் டங் டொய்ங் டொய்ங் செக் செக் மைக் டெஸ்டிங் என்று சிதற லாகக் கேட்டுக்கொண்டிருக்க திடீரென்று அனைவரும் ஒருமித்து ஆர்க்கெஸ்ட்ராவின் பிரத்யேக அறிமுக சங்கீதத்தை இசைத்துப் பாடி நிகழ்ச்சியைத் துவங்கும் போது புல்லரிக்கும். அடுத்து என்ன பாடல் வரும் என்று தெரியாது ரொம்பப் பரபரப்பாக இருக்கும். வற்றாயிருப்பு போன்ற பெருங்கிராமத்தில் பெண்களுக்கு அதிகபட்ச மேக்கப் பாண்ட்ஸ் பவுடர்தான். ஆர்க்கெஸ்ட்ரா பாடகிகள் "திருத்தமான மேக்கப்" (இந்த வார்த்தை களை அடிக்கடி பயன்படுத்திய எழுத்தாளர் யார்? மறந்து போச்) அணிந்து வருவது ஆர்க்கெஸ்ட்ராவுக்குக் கூடுதல் அழகு.

தொண்ணூறுகளில் பெப்ஸியில் பணி புரிந்த போது வருடாவருடம் பெப்ஸி ஆண்டு விழா ஒன்று நடத்தி Top Floor லிருந்து Shop Floor வரை அனைத்துத் தொழிலாளர்களையும் குடும்பத்தோடு அழைத்து நாள்முழுதும் பல்வேறு விளை யாட்டுகள், நிகழ்ச்சிகள் என்று நடத்திக் கொண்டிருந்தார்கள். முனைவர் ஞான சம்பந்தனை அழைத்து ஒரு ஷிtணீஸீபீ-uஜீ சிஷீனீமீபீஹ் நிகழ்ச்சி நடத்தினோம். "பசங்கள் ளாம் சேர்ந்து கிரிக்கெட் மேச்சு பாத்துக் கிட்டுருந்தாய்ங்க. சச்சின் செஞ்ஜுரி போட்டு மேச்ச நம்ம செயிச்சுட்டோம். அதெப் பாத்துட்டு ஒருத்தெஞ் ஜொன் னான். என் லைஃப்லயே இந்த மாரி ஒரு மேச்ச பாத்ததில்லடா-ன்னான்" என்று சொல்லிவிட்டு கொஞ்சம் இடைவெளி விட்டு "அந்தப் பையனுக்கு ரெண்டு வயசு!" என்றதும் அரங்கமே வெடிச் சிரிப்பு சிரித்தது, சரமாரியாக நகைச் சுவைச் சரவெடிகளைக் கொளுத்திப் போட்டு ஒரு மணிநேரத்திற்குப் பின்பு அவர் நிறுத்திய பிறகும் சிரிப்புகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அப் போது அவர் தொலைக்காட்சியி லெல்லாம் அவ்வளவாக வந்ததில்லை.
அப்படி ஒரு ஆண்டு விழாவுக்குத் தொழிலாளர்களின் ஏகோபித்த வேண்டு கோளுக்கு இணங்கி மதுரையிலிருந்து ஒரு ஆர்க்கெஸ்ட்ராவை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தொழிலாளர் களை அதில் பங்குபெற வைத்தாலென்ன என்று எச்ஆர் மேலாளருக்குத் தோண, ஆர்க்கெஸ்ட்ராவிலிருந்து இருவர் கீ போர்ட், கிட்டார் சகிதமாக ஒரு வாரம் தொழிற்சாலை கேன்ட்டீனில் பிரசன்ன மாகி, எங்கள் சுருதி, தாள, குரல் பேதங் களுடன் மாரடித்தார்கள். எனக்கு பால் யப் பருவ ஒன் மேன் ஆர்க்கெஸ்ட்ராவா கப் பாடியதெல்லாம் நினைவுக்கு வர, உள்ளங்கை குறுகுறுக்க பெயர் கொடுத்து விட்டேன். காதலுக்கு மரியாதை படத் தில் வரும் தாலாட்ட வருவாளோ பாடல். கீ போர்டுகாரர் மொத்தப் பாடலின் தாளம் இசை எல்லாவற்றை யும் முதலிலேயே பதிவு பண்ணி வைத் துக்கொண்டு இடது கையால் விசை யொன்றைக் கப்பலோட்டுவது போல மேலும் கீழும் அசைத்துக் கொண்டிருக்க முதன்முறையாக ஒலி வாங்கியைப் பிடித்து கேன்ட்டீனில் பயிற்சி செய்தது நினைவிருக்கிறது. ஆண்டுவிழா நடந்தது பசுமலை தாஜ் ஹோட்டலில்.

நிகழ்ச்சியன்று ஏராளமான கூட்டம். அட்டகாசமான மேடை. ஆர்க்கெஸ்ட்ரா குழுத் தலைவர் வந்து நான் உள்ளிட்ட நான்கு தற்காலிகப் பாடகர்களிடம் "நாங்க ரெண்டு பாட்டு பாடிட்டு நடு நடுவுல உங்களை ஒவ்வொருத்தரா கூப்பிடுவோம். வந்து பாடுங்க" என்றார். கல்லெறியைத் தவிர்ப்பதற்காக அந்த ஏற்பாடு என்று நினைத்துக்கொண்டேன். நன்றாகத் தெரிந்த பாட்டுதான் - இருந்தாலும் மறந்துவிடக் கூடாதென்று ஒரு சிறிய காகிதத்தில் பாடல் வரிகளை எழுதி வைத்துக்கொண்டேன். திடீரென்று என் பெயரைச் சொல்லி அழைக்க மேடையேறினேன். கைகால்கள் உதற, காது மடல்கள் சூடாக, இதயம் படபடக்க - காதலன் முதற் காதலியை... சே... காதலியை முதன்முறையாகச் சந்தித்தது போல ஜுரமாக உணர்ந்தேன். பாடலின் ஆரம்ப இசை ஒலிக்கத் துவங்க ஒரு கையை நடுங்குவதைத் தவிர்க்க கால் சராய் பைக்குள் விட்டுக்கொண்டேன். கனமான ஒலிவாங்கி இன்னொரு கை நடுக்கத்தைக் குறைக்க ஒரு வழியாகப் பாடி முடித்தேன். அப்துல் ஹமீது மாதிரி பாடல்களை அறிவித்துக் கொண்டிருந்தவர் அவர் மாதிரியே "அந்தப் பாடலை அருமையாகப் பாடிய சுந்தருக்குப் பாராட்டு" என்று உரக்கச் சொன்னதும் அதைத் தொடர்ந்த கைதட்டல் விசில் களும் கேட்காமல் காதுகள் அடைத்துக் கொண்டு சகஜ நிலைக்குத் திரும்ப நீண்ட நேரமாயிற்று. அதற்கப்புறம் வேறு எந்த வாய்ப்புமில்லாது தமிழ்கூறும் நல்லு லகம் ஒரு சிறந்த பாடகனை இழந்தது.

பாட வராவிட்டாலும் அதற்காகப் பாடும் ஆர்வத்தை விடாமல் குழந்தை களைத் தூங்கப் பண்ணுவதற்கு வாரத்தில் மூன்று நான்கு நாட்களாவது மெல்லிசாக இரவுக்கு வலிக்காமல் பாடுவதுண்டு. அவர்கள் முறைப்படி கர்நாடக சங்கீதம் நாலைந்து வருடங்களாகக் கற்றுக் கொண்டு வருகிறார்கள். நன்றாகப் பாடுகிறார்கள். இப்போது கொஞ்சம் விவரம் தெரிந்து விட்டது. முன்பெல் லாம் நித்தம் இரவில் "டாடி - ஆயர் பாடி மாளிகையில் பாடுங்க" என்று சொல்லி நான் முதல் சரணம் முடிக்கு முன்னரே தூங்கிப் போய்விடுவாள் சின்னவள் துர்கா. சமீப நாட்களில் முதல் வரியை முடிப்பதற்குள் "Dad. You're way off Sruthi" என்கிறாள். நாக்கு மேலண்ணத் தில் ஒட்டிக் கொண்டு அடுத்த வரிக்குப் போக முடிவதில்லை!

எனக்கு வாழ்நாள் பூராவும் எவ்வளவு பாடினாலும் அலுத்துக்கொள்ளாது குற்றம் சொல்லாது கேட்டுக்கொள்ளும் ரசிகக் கண்மணிகளாக பாத்ரூம் சுவர்கள் மட்டும்தான் மிஞ்சும்போல.

வற்றாயிருப்பு சுந்தர்,
பாஸ்டன்
Share: 
© Copyright 2020 Tamilonline