BATM குழந்தைகள் தினம் அபிநயாவின் 'Jwala-The Immortal Flame' பல்லவிதாவின் 'விவ்ரித்தி-2011' சங்கரா கண் அறக்கட்டளை நிதிக்காகப் பல்லவியின் 'கண்மணியே' மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் வருகை
|
|
|
|
|
நவம்பர் 16, 2011 தொடங்கி ஜனவரி 15, 2012 வரை, சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் உள்ள லிவர்மோர் சிவ விஷ்ணு கோவிலில் ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமிக்கு மகர விளக்கு மற்றும் மண்டல வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. பக்தர்கள் கார்த்திகைத் திங்கள் விருச்சிக நாளன்று (நவம்பர்-16) மாலை அணிந்து விரதம் துவங்குவர். 41 நாட்களுக்குப் பின்னர் (டிசம்பர்-25) இருமுடி எடுத்து முடிப்பர்.
நவம்பர் 19, 2011 அன்று மாலை 4:30 மணிக்கு, சபரிமலை யாத்திரை செல்லவிருப்போரும், லிவர்மோர் ஆலயத்தில் இருமுடி பூஜை செய்து சுவாமி ஐயப்பனை வணங்கவிருப்போரும் மாலை அணிந்து விரதத்தைத் துவங்குவர். அன்று சங்கல்பம், அபிஷேகம், அர்ச்சனை, மாலையணிவித்தல், பஜனை, செண்டையுடன் தாலப்பொலி, மங்கள ஆரத்தி, அன்னதானம் நடைபெறும்.
பின்னர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 5:00 மணி அளவில் (நவம்பர் 26; டிசம்பர் 3, 10) வாராந்திர பஜனை, தீபாராதனை நடைபெறும். அன்று மண்டல விரதம் துவங்க மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. டிசம்பர் 17 மாலை 4 மணிக்கு ஐயப்ப ஸ்வாமிக்கு லட்சார்ச்சனை மற்றும் சாஸ்தாப்ரீதி நடைபெறும். டிசம்பர் 25 அன்று மண்டல விரத வழிபாடு நிறைவுபெறும். அன்று காலை 9:00 மணிக்கு இருமுடி கட்டுதல், சங்கல்பம், அபிஷேகம், அர்ச்சனை, பஜனை, மங்கள ஆரத்தி, அன்னதானம் நடைபெறும்.
ஐயப்ப மகர சங்கராந்தி பூஜை ஜனவரி 15 அன்று மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது. அன்று சபரிமலையிலிருந்து நெய் அபிஷேக பிரசாதம் மற்றும் விபூதி பிரசாதம் பக்தர்களுக்கு அளிக்கப்படும். சிவ விஷ்ணு ஆலய பக்தர்களை இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்படி அழைக்கிறோம். |
|
விரத மாலை அணியவும், லட்சார்ச்சனை முதலியவற்றுக்கு சங்கல்பம் செய்துகொள்ளவும் மேலும் தகவலுக்கும்:
பிரசாத் ராமகிருஷ்ணன்: 408-705-8172; prasad.ramki@gmail.com ரவி தேவராஜ்: 650-302-3612; ravi.devaraj@gmail.com சுதாகர் தீவி: 925-518-5421; sudhakardeevi@gmail.com விஜய் கோபால்: vijaygopal99@yahoo.com மனோஜ் எம்பிரான்திரி: kapish@gmail.com இணையதளம்: www.ayyappasamaaj.org
பிரசாத் ராமகிருஷ்ணன், கலிஃபோர்னியா |
|
|
More
BATM குழந்தைகள் தினம் அபிநயாவின் 'Jwala-The Immortal Flame' பல்லவிதாவின் 'விவ்ரித்தி-2011' சங்கரா கண் அறக்கட்டளை நிதிக்காகப் பல்லவியின் 'கண்மணியே' மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் வருகை
|
|
|
|
|
|
|