அவல் தயாரிப்புகள் தேங்காய் அவல் மிளகு அவல் பருப்பு உசிலி அவல் அவல் பொங்கல் வெல்ல அவல் அவல் கேசரி அவல் தோசை அவல் பக்கோடா அவல் கட்லெட்
|
|
|
தேவையான பொருட்கள்: அவல் - 1 கிண்ணம் காரட் - 1 பீன்ஸ் - 6 உருளைக் கிழங்கு - 1 பச்சை மிளகாய் - 2 அல்லது 3 கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப கொத்துமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி எண்ணெய் - தாளிக்க வெங்காயம் - 1 பட்டாணி - கொஞ்சம் |
|
செய்முறை: முதலில் அவலை உப்புப் போட்டு ஊற வைக்கவும். உருளைக் கிழங்கை தோல் சீவி விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்து உளுத்தம்பருப்பு சிவந்து வரும் போது மிளகாய், வெங்காயம் மற்றும் காய்கறிகளைப் அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிது உப்பையும் அதில் போடவும். (காய்கறிகளுக்காக)
நன்றாக வதங்கியதும் அதில் அவலைப் போட்டு நன்கு வதக்கவும். மசாலாபொடி போட்டு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கவும். அவல் நன்றாக வெந்தவுடன் இறக்கி அதில் கொத்துமல்லி, கருவேப்பிலை நறுக்கி போடவும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
அவல் தயாரிப்புகள் தேங்காய் அவல் மிளகு அவல் பருப்பு உசிலி அவல் அவல் பொங்கல் வெல்ல அவல் அவல் கேசரி அவல் தோசை அவல் பக்கோடா அவல் கட்லெட்
|
|
|
|
|
|
|