Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
சிறுகதை
நடேசன் பூங்கா பொலிவுடன் இருக்கிறது
கோமேதகக் கண்கள்
ரொட்டி அய்யா
வாழையிலை
சுத்தப் பட்டிக்காடு!
கரையும் கோலங்கள்
- லக்ஷ்மி சுப்ரமணியன்|ஜூலை 2011|
Share:
டெலிஃபோன் மணி அடித்தது. ஒரு மணி நேரம் அடம் பிடித்துவிட்டு ஒரு வழியாக அப்பொழுதுதான் தூங்கி இருந்தான் சஞ்சீவ். ஃபோன் பேசினால் எழுந்து விடுவானோ என்ற பயத்தில் வாய்ஸ் மெஸேஜ் தட்டிவிட்டாள் அபிநயா. ஃபோனில் அவளது பள்ளித்தோழி கவிதா. "ஹே அபி, எப்படி இருக்க... நான்தான் கவி பேசறேன். ரொம்ப நாளாச்சு பேசி உன்னோட. இன்னிக்கு நவம்பர் 14, குழந்தைகள் தினம் இல்ல. நம்ப ஸ்கூல் டைம்ல என்ஜாய் பண்ணினது ஞாபகம் வந்தது. நீ ஃப்ரியா இருக்கும்பொழுது கூப்பிடு. உன் குட்டிப் பையன் சஞ்சீவ்க்கும், உன் ஹஸ்பண்ட் கிரிக்கும் ஹை சொல்லு. பை."

இதைக் காதில் வாங்கியபடி அமைதியாக அமர்ந்திருந்த அபிநயா, தன்னுடைய பள்ளிப் பருவத்தை நினைத்தபடி கண்மூடிச் சாய்ந்தாள். வேலையை விட்டுவிட்டு, அமெரிக்கா வந்து, குழந்தை பெற்று, குடும்பத் தலைவியாக பாட்லக், பிக்னிக், ஸ்நோ வெதர் என்ற வட்டத்தினுள் சிக்கி, கற்பனைக் கனவுகளைத் தொலைத்து விட்டதை எண்ணிப் பெருமூச்சு விட்டபடி வாய்ஸ் மெசேஜை சேவ் செய்துவிட்டு, ஞாபகமாக இந்த முறை ஃபோன் திரும்பப் பண்ணிடனும் என்று நினைத்தாள் அபி.

மாலை சஞ்சீவ் ஒளிந்து விளையாடியபோது உள்ளே அபி போட்டிருந்த ரங்கோலிக் கோலத்தைப் பார்த்துவிட்டு, "இது என்னது அம்மா க்ரேயான் கலரிங் போட்டிருக்கே" என்றான்.

"க்ரேயான் கலரிங் இல்ல சஞ்சு, இதுக்குப் பேர் ரங்கோலி. நான் ஸ்கூல் படிக்கும்பொழுது ரங்கோலி போட்டு பிரைஸ் எல்லாம் வாங்கி இருக்கேன்."

"ஹே, என்ன விஷயம் இன்னிக்கு ரங்கோலி எல்லாம் போட்டிருகே?" கேட்டபடி கிரி வந்தான்.

"மதியம் என் ஃபிரெண்டு கவிதா போன் பண்ணினா. ஒரே பழைய ஞாபகம். அதான் சும்மா போட்டேன். இனிமே டெய்லி போடலாம்னு இருக்கேன். கவிக்குகூட நாளைக்கு ஃபோன் ரிடர்ன் பண்ணனும். ரொம்ப நாளாச்சு பேசி."

"ஃபிரெண்டுன்ன உடனே ஞாபகம் வருது அபி, என்னோட பழைய ஆஃபீஸ் ஃபிரெண்டு ஜீவாவோட பேமிலி தாங்க்ஸ் கிவிங் வீக் எண்ட் இங்கே வராங்களாம். நம்ம எல்லோரும் சேர்ந்து லாங் டிரைவ் எங்கயாவது போயிட்டு வரலாம்" என்றான் கிரி.

"ஓ கட்டாயமா. அவங்க பையன் துருவ்க்குக் கூட மூணு வயசில்ல. சஞ்சீவுக்கு நல்ல ஜாலியா இருக்கும்."

"ஆமாம். அப்புறம் ரங்கோலி ரொம்ப நல்லா இருக்கு. தினமும் போடு"

*****


"கிரி ஸ்நோ ஷவல் எடுத்து டிரைவ் வே க்ளீன் பண்ணியாச்சா? ஃப்ளைட் மிஸ் பண்ணாம இருக்கணும்னா கொஞ்சம் சீக்கிரமா கிளம்பணும். கிறிஸ்துமஸ் டைம் இல்ல. ஃபிளைட் கேன்சலேஷன் எல்லாம் இருக்கும். பனிவேற ரொம்பப் பெய்யுது."

"எல்லாம் முடிச்சாச்சு. போனை வாய்ஸ் மெசேஜ் போட்டுட்டுக் கிளம்பலாம்."

"சஞ்சீவ், என்னடா பண்ற உள்ளே. வா, வந்து ஷூ போட்டுக்கோ. இதென்ன கையெல்லாம் ஒரே கலர் கலரா இருக்கு?"

"உன்னோட க்ரேயான் கலரிங் சும்மா தொட்டு பார்த்தேன். அது கைல ஒட்டிண்டுது."

"அய்யோ, கடவுளே சட்டைல வச்சுக்காம கழுவு சீக்கிரமா. டாக்ஸி வந்துடும் இப்போ" சொல்லிக்கொண்டே பூஜை அறைக்குச் சென்ற அபி, பாதி கலைந்த கோலத்தைப் பார்த்துவிட்டு நியூ இயருக்குப் புதுக்கோலம் போடணும்" என்று யோசித்தபொழுது, "ஹே அபி உன்னோட ஃபிரெண்டு கவி வாய்ஸ் மெசேஜ் ஒண்ணு இருக்கு" என்றபடி கிரி வந்தான்.

"அது பழசு கிரி. ஊருக்குப் போயிட்டு வந்து அவளுக்கு போன் பண்ணனும்."

*****


"அம்மா, இதப் பாத்தியா... ஸ்கூல்ல நான் பண்ணின வேலன்டைன் கார்ட். இது உனக்குத்தான் அம்மா."

"நல்லா இருக்கு சஞ்சுக் குட்டி. தேங்க்யூ" என்ற அபி, "மூணு வயசில இந்தக் குழந்தைகளை இதெல்லாம் ஏன் பண்ண வைக்கறாங்க ஸ்கூல்ல" என்று கேட்டபடி வந்த கிரியிடம், "உங்களுக்குத் தெரியுமா? நம்ம எதுத்த அபார்ட்மெண்ட் மது பேமிலி இந்தியா போறாங்களாம். பிராஜக்ட் முடிஞ்சு போச்சாம்" என்றாள்.

"அய்யோ நமக்கு நல்ல பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்ஸா இருந்தாங்க இல்ல..."

"ஆமாம் கிரி, ரொம்ப மிஸ் பண்ணுவேன் அவங்கள. அவங்களுக்கு பேக்கிங் ஹெல்ப் இதெல்லாம் நிறைய இருக்கு. நான் பண்றேன்னு சொல்லி இருக்கேன்."

"இந்த ஐ.டி. வேலைய நம்பவே முடியாது. ஒண்ணும் நிலை இல்ல" என்றான் கிரி.

"இந்தியா போனா என்ன? இப்பெல்லாம் vonage போன் வந்த பிறகு எல்லோரோடயும் டெய்லி பேசலாம்" சொல்லும்பொழுதே நாலு மாதமாக ரிடர்ன் செய்யாத கவிதாவின் வாய்ஸ் மெசேஜ் மனதை உறுத்தியது. வேலை மறதியால் முக்கால் வாசி கலைந்திருந்த கோலம் கண்ணை உறுத்தியது.

*****
"அபி, டின்னர் சூப்பரா இருந்தது" இது கிரி.

"ஆமாம் கிரி. நாளைக்கு மது ஃபேமிலி ஊருக்கு போயிடுவாங்க. இப்பதான் ஒரு மாசம் முன்னாடி கிளம்பறோம்னு சொன்ன மாதிரி இருந்தது. அதுக்குள்ள நாள் ஓடிப் போச்சு" என்றாள் அபி.

"ஆமாம். நான் வீடு க்ளீன் பண்ண ஹெல்ப் பண்றேன்" என்றபடி வாக்யூம் செய்தான் கிரி.

"இந்தப் பசங்க பாரு... ஒரே கலர் பண்றேன்னு கார்பெட் எல்லாம் ரங்கோலி. ஆமாம் நீகூட ரங்கோலி போடறேன்னு ஆரம்பிச்சியே அது என்ன ஆச்சு?" என்று கேலி செய்தான் கிரி.

"ஆமாம் ஏதோ நான் சும்மா உட்கார்ந்து இருக்கற மாதிரி. நான் ரங்கோலி போட்ட அன்னிக்கு போன் செய்த கவிதாவோட ஃபோன்கால் கூட இன்னும் நான் ரிடர்ன் பண்ணல. ஒரே பிஸி. இவங்க ஊருக்குப் போனப்புறம் நேரம் கிடைக்கும். அப்போ எல்லாம் செய்யறேன்" என்றாள் அபி.

*****


டெலிபோன் மணி அடித்தது. ஃபோன் எடுத்த அபி, "ஹாய் மது ஊருக்கு பத்திரமா போயாச்சா? வெரி குட். நாங்க எல்லோரும் ரொம்ப மிஸ் பண்றோம் உங்கள. ம். டெய்லி ஃபோன் பண்றேன். பை" என்று சொல்லியபடி பூஜை மேடையைத் துடைத்தாள்.

"இன்னிக்குக் கோலம் போட்டவுடனே கவிக்கு போன் பண்ணணும் என்று நினைத்தபடி கவியின் நம்பரை டயல் செய்யும் போது, சஞ்சீவியின் அழுகைக் குரல் இன்னொரு அறையில் கேட்க, பெருமூச்சு விட்டபடி ஃபோனை அமர்த்திவிட்டு சஞ்சீவிடம் ஓடினாள் அபி.

*****


மறுபடி ஃடெலிபோன். "அப்பப்பா... காத்தாலேர்ந்து எத்தன ஃபோன் இன்னிக்கு" என்று கூறியபடி எடுத்த கிரி, "ஹாய் கவிதா எப்படி இருக்கீங்க... ஹாப்பி தமிழ் நியூ இயர். இதோ அபி கிட்ட தரேன்" என்று சொல்லி ஃபோனைக் கொடுத்தான். ஆறு மாசமாக போனை ரிடர்ன் செய்யவில்லை என்ற குற்றவுணர்வுடன் ஃபோனை வாங்கிய அபி, "ஹலோ" என்று சொல்லுமுன், " ஹே அபி எப்படி இருக்கே.. உடம்பெல்லாம் சௌக்யமா? பிரச்னை எதுவும் இல்லையே" என்ற அக்கறையான கேள்விக்கு பதில் கூறும் பொழுதே கண்ணைக் கரித்தது அபிக்கு.

"நல்லாத்தான் இருக்கேன் கவி"

"இல்லே. எப்பவும் போன் ரிடர்ன் பண்ணாம இருக்க மாட்டே நீ. இந்தவாட்டி பண்ணலைன்னதும் கவலையா இருந்தது."

தோழியின் பாசம் மனதை உருக்க, சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தபோது இனிமேல் எத்தனை வேலை இருந்தாலும் சில உறவுகளையும், கனவுகளையும் தொடர்வது என்ற முடிவுடன் மீண்டும் புதிய ரங்கோலி கோலத்தைப் போட ஆரம்பித்தாள் அபி.

பக்கத்து அறையில் இருந்து கிரி குரல் கொடுத்தான்.

"நம்ம பழைய எதிர்வீட்டு மது தமிழ் நியூ இயர் விஷ் பண்ணி மெயில் அனுப்பியிருக்காங்க. நீ பேசி ஒரு மாசம் ஆகல. இன்னிக்குக் கால் பண்ணிடு அபி."

"போன் பண்ணனும் கிரி" என்று சொல்லி முடிக்குமுன், "அம்மா, என்னோட பர்த்டே பார்ட்டி எப்போ வரது?" என்று கேட்டபடி வந்தான் சஞ்சீவ்.

"ஒரு வாரம் இருக்கு சஞ்சு. நிறைய பேரைக் கூப்பிடலாம்" என்று சொல்லிவிட்டு கிரியிடம், "நிறைய பார்ட்டி வேலை இருக்கு கிரி. அப்புறம் க்ளீனிங் வேலை. இதெல்லாம் முடிஞ்ச பிறகு மதுவுக்கு ஃபோன் பண்றேன்" என்று சொல்லி, அபி விட்ட பெருமூச்சில் அவளது ரங்கோலி சற்றே கலையத் துவங்கியது.

லக்ஷ்மி சுப்ரமணியம்,
மின்னசோட்டா
More

நடேசன் பூங்கா பொலிவுடன் இருக்கிறது
கோமேதகக் கண்கள்
ரொட்டி அய்யா
வாழையிலை
சுத்தப் பட்டிக்காடு!
Share: 


© Copyright 2020 Tamilonline