IFAASD நடத்தும் சான் டியேகோ இசைவிழா ஜப்பான் சுனாமி நிவாரணத்திற்கு அமிர்தானந்தமயி மைய இசை நிகழ்ச்சிகள் BATM சித்திரைக் கொண்டாட்டம் 2011 செயிண்ட் லூயிஸ் இந்திய நடன விழாவில் நாட்யா நடனப் பள்ளி கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை சான்டியேகோ தமிழ்ப் புத்தாண்டு விழா NETS சித்திரை விழா நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருவிழா ஈஷா அறக்கட்டளை வழங்கும் 'Inner Engineering with Sadhguru' பாரதி தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு விழா
|
|
சிகாகோ கணேச காயத்ரி ஆலய இசை விழா |
|
- |ஏப்ரல் 2011| |
|
|
|
|
|
மே 1, 2011 அன்று மதியம் 3:00க்கு சிகாகோ இசை விழா என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளனர். இதில் கர்னாடக இசை மட்டுமல்லாமல் திரையிசையும் இடம்பெறும். இந்த நிகழ்ச்சி புதிதாக அமைந்துள்ள சிகாகோ ஸ்ரீ கணேச காயத்ரி ஆலயத்தின் பொது மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதி திரட்டும் முகமாக நடத்தப்படுகிறது.
இந்த இசைவிழாவில் கர்நாடிகா சகோதரர்கள் டாக்டர் சசிகிரண்-கணேஷ் ஆகியோரின் கச்சேரி நடைபெறும். தவிர, சுபஸ்ரீ தணிகாசலம் பங்கேற்கிறார். இதில், ரவி, ராகவேந்திரா, மாறன், லக்ஷ்மி, ரவிசங்கர், வித்யா ஆகியோர் தமிழ், தெலுங்குப் பாடல்களை பாடுவார்கள். இவர்கள் ஹரியுடன் நான், ராகமாலிகா, கர்நாடிக் ஐடல் போன்ற நிகழ்ச்சிகளில் தேர்வு பெற்றவர்கள்.
சிகாகோவில் தேவி வழிபாட்டிற்கென அமையப் பெற்ற ஸ்ரீ கணேச காயத்ரி ஆலயம் தனிச்சிறப்பு மிக்கது. வேண்டுவோர்க்கு வேண்டுவதை வழங்கும் ஸ்ரீ கணபதியும், ஸ்ரீ காயத்ரியும் இணைந்த ஓர் ஆலயம் உலகில் வேறு எங்கும் இல்லை என்றால் அது மிகையில்லை. இவ்வாலயத்தில் சிறுவர் முதல் வயது முதிர்ந்தோர் வரை கிருஷ்ண யஜுர் வேதம் பயின்று வருகிறார்கள். 1986 முதல் வேதத்தை எல்லோருக்கும் கற்பித்து வருகிறார் ஸ்ரீ சந்திரசேகர குருக்கள். 2010ல் அக்டோபர் மாதம் பௌர்ணமி அன்று தொடங்கப்பட்ட இவ்வாலயம், லாக்போர்ட்டில் மூன்று ஏக்கர் நிலத்தில் 1000 அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கே பொதுமக்களுக்கு வாகனங்கள் நிறுத்தும் வசதி, மழை நீரைத் தேக்க வசதி, கழிவு நீர் வெளியேற வசதி, ஊனமுற்றோருக்கு எளிதாக வந்து செல்ல வசதி என்பது போலப் பல வசதிகளைச் செய்து தர வேண்டியுள்ளது. இவையெல்லாம் பொதுமக்களின் நன்கொடையால்தான் நடைபெற வேண்டும். இதற்காக நிதி திரட்டும் குழு ஒன்று சோமு, ராதிகா மோகன், மீனா சுபி, டாக்டர் சசிகலா ராமமூர்த்தி, ரகுராம் மற்றும் பலரை அங்கத்தினர்களாகக் கொண்டு பணியாற்றி வருகிறது.
மேலும் தகவலுக்கு: www.GaneshaGayathriTemple.org |
|
நாள்: மே, 1, 2011 நேரம்: மாலை 3:00 முதல் இரவு 8:30 மணிவரை இடம்: போலிங்ப்ரூக் (Bolingbrook) ஹைஸ்கூல் ஆடிடோரியம், 360, ரெய்டர் வே, போலிங் ப்ரூக் - 1L 60440. நுழைவுச்சீட்டு: $100, $50 (VIP), $25 & $7 (5-10 வயதுள்ள சிறார்); 5 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு இலவசம்.
இது தவிர பல்லாயிரக் கணக்கில் நன்கொடை அளித்து பிளாட்டினம், தங்கம், வெள்ளி என்ற பிரிவுகளில் புரவலாகும் வாய்ப்புகளும் உண்டு.
தொடர்புகொள்ள: சோமு: 630-696-8003 (tsomu@hotmail.com), மீனா - 847-885-2790 மோஹன் - 630-822-5625 ரகு - 815-955-7794 சுந்தர் - 630-881-7859, அமர் - 312-953-8942 ராமமூர்த்தி - 630-267-9958
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
IFAASD நடத்தும் சான் டியேகோ இசைவிழா ஜப்பான் சுனாமி நிவாரணத்திற்கு அமிர்தானந்தமயி மைய இசை நிகழ்ச்சிகள் BATM சித்திரைக் கொண்டாட்டம் 2011 செயிண்ட் லூயிஸ் இந்திய நடன விழாவில் நாட்யா நடனப் பள்ளி கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை சான்டியேகோ தமிழ்ப் புத்தாண்டு விழா NETS சித்திரை விழா நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருவிழா ஈஷா அறக்கட்டளை வழங்கும் 'Inner Engineering with Sadhguru' பாரதி தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு விழா
|
|
|
|
|
|
|