Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | அமெரிக்க அனுபவம் | அஞ்சலி
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
பாரதி தமிழ்ச் சங்கத்தின் இரண்டு விழாக்கள்
உதவும் கரங்களுக்காக 'கும்கா'
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருநாள்
10வது தமிழ் இணைய மாநாடு
தெற்காசிய இதய மையம் அளிக்கும் சிவப்பு இரவு-2011
- கதிரவன் எழில்மன்னன்|மார்ச் 2011|
Share:
மார்ச் 12, 2011 அன்று தெற்காசிய இதய மையம் சிவப்பு இரவு (Scarlet Night) எனப்படும் பல்சுவை நிகழ்ச்சி ஒன்றை சான் ஹோஸே மாநாட்டு மையத்தில் (San Jose Convention Center, 150 W. San Carlos St, San Jose) மாலை 6:00 மணி முதல் நடத்தவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஸான் கப்ரான்ஸிஸ்கோ தொலைக் காட்சியில் விளையாட்டு நிருபராக ஆரம்பித்துத் தற்போது செய்தித் தொகுப்பாளராக முக்கியப் பதவி பெற்றுள்ள ராஜ் மத்தாய் அவர்கள் தலைமை வகிக்கிறார்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம் மற்றும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தெற்காசியர்களிடையே இதய நோய், பிற இனத்தவரை விட அதிகமாகக் காணப்படுகிறது என்பது உலக உடல்நல அமைப்பு (World Health Organization-WHO) தரும் தகவல். இன்னும் சில வருடங்களுக்குள் உலகில் இதய நோயால் பாதிக்கப் பட்டோரில் 60 சதவிகிதம் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று WHO கூறுகிறது. இதை ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக நிறுவப்பட்ட, லாபநோக்கற்ற சேவை அமைப்பே தெற்காசிய இதய மையம் (Soutth Asian Heart Center).

தகவல் பரப்பல், முன்பரிசீலனை, வாழ்முறை மாற்றங்கள் மற்றும் இதயநலம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற அம்சங்களை ஒருமுனைப்பாக சமூகத்தில் பரப்பி, மிக வேகமாகத் தெற்காசியரிடையே அதிகரித்து வரும் இதயம் மற்றும் இரத்தக் குழாய் நோயைக் கட்டுப்படுத்தும் கடும் முயற்சியில் இந்த மையம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது.

விழா அரங்கில் ப்ளாக் ஜேக், ரூலட், போக்கர் போன்ற பலதரப்பட்ட அதிர்ஷ்ட விளையாட்டுக்கள் கொண்ட கஸினோ உள்ளது. வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும் நிதின் காந்தின் நகைச்சுவை உண்டு. இனியதொரு விருந்து படைக்கப்படும். அது மட்டுமல்ல அதன் பிறகு பிரபல சலீம் ஞியி கோத்தளிக்கும் திரையிசைக்கு நடனமாடி மகிழலாம்.
இந்நிகழ்ச்சி இதய மையத்தின் பணிகளுக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. இதற்கு நீங்கள் பல விதங்களில் உதவலாம். $125 அல்லது $200 அனுமதிச் சீட்டு வாங்கலாம். $1100-இலிருந்து $2500 வரை உள்ள உணவு மேஜைகளை எடுத்துக் கொண்டு நன்கொடை அளிக்கும் உறவினர் அல்லது நண்பர்களை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கலாம். பலதரப்பட்ட கொடையாளராகும் (Sponsor) வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்ல, நிகழ்ச்சியில் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்று உதவலாம்.

நன்கொடை மற்றும் சேவை வாய்ப்புகளுக்குத் தொடர்புகொள்ள:
இணையம்: www.southasianheartcenter.org;
மின்னஞ்சல்: info@southasianheartcenter.org
தொலைபேசி: 650.940.SAHC (650.940.7242)

கதிரவன் எழில்மன்னன்
More

பாரதி தமிழ்ச் சங்கத்தின் இரண்டு விழாக்கள்
உதவும் கரங்களுக்காக 'கும்கா'
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருநாள்
10வது தமிழ் இணைய மாநாடு
Share: 




© Copyright 2020 Tamilonline