|
ஏப்ரல் 2011: ஜோக்ஸ் |
|
- ஹபீப்|ஏப்ரல் 2011| |
|
|
|
தொண்டன்: என்ன தலைவா? உடம்பெல்லாம் கட்டாயிருக்கு! அரசியல்வாதி : இப்பதான் ஒரு 'கட்ட' பஞ்சாயத்துக்குப் போயி சமாதானம் பண்ணிட்டு வர்றேன்
*****
நண்பர்: உங்க பையன் ரொம்ப நல்லா தமிழ் பேசுவானே, இப்ப என்ன ஆச்சு? தந்தை: அதுவா? லீவுக்குச் சென்னைக்குப் போயிட்டு இப்பத்தான் திரும்பி வந்திருக்கான்.
*****
கீதா: கம்ப்யூட்டர் முன்னாடி நின்னுக்கிட்டு ஏன் உங்க மாமியார் இப்படி கத்தறாங்க? மாலா: ம்.... அவங்க லண்டன்ல இருக்கற சின்ன மருமகளோட விடியோ சாட்ல சண்டை போட்டுக்கிட்டிருக்காங்க.
***** |
|
தரகர்: பையன் பேரு பழனி. அவன் பேர்ல தமிழ்நாட்ல பல ஏக்கர் நிலமிருக்கு! பெண் வீட்டார்: அப்படியா! அது சரி, பையனுக்கு சொந்தமா எவ்வளவு நிலமிருக்கு?
*****
ஹபீப், மிச்சிகன் |
|
|
|
|
|
|
|