Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | முன்னோடி | தமிழக அரசியல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா? | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
Tamil Unicode / English Search
மாயாபஜார்
தேங்காய் அவல்
மிளகு அவல்
வெஜிடபள் அவல்
பருப்பு உசிலி அவல்
அவல் பொங்கல்
வெல்ல அவல்
அவல் கேசரி
அவல் தோசை
அவல் பக்கோடா
அவல் கட்லெட்
அவல் தயாரிப்புகள்
- தங்கம் ராமசாமி|நவம்பர் 2006|
Share:
Click Here Enlargeகிருஷ்ணன் தன் பால்ய நண்பன் குசேலனிடம் கேட்காமலே எடுத்து ருசித்த அவல் பற்றிய கதையை அனைவரும் அறிவர். சிறுவர் முதல் அனைவருக்கும் விருப்பமான அவலில் இருந்து சில சமையல் குறிப்புகள்...

புளி அவல்

தேவையான பொருட்கள்:
அவல் - 1 கிண்ணம்
புளி - 1/2 எலுமிச்சம் அளவு
வெங்காயம் - 1
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் பொடி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
உப்பு - தேவைக்கேற்ப
கருவேப்பிலை,
கொத்துமல்லி - சிறிதளவு
எண்ணெய்(தாளிக்க) - சிறிதளவு
செய்முறை:
அவலை புளி தண்ணீரில் விட்டு உப்பும் போட்டு ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் போட்டு வெடிக்கவிடவும். கடுகு வெடித்து, பருப்புகள் சிவந்து வரும் நேரத்தில் வெங்காயத்தை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்கு வெந்ததும் மஞ்சள் பொடி போட்டு, புளியில் ஊற வைத்த அவலையும் சேர்த்து நன்றாக வதக்கவும். புளி வாசனை போகட்டும். பிறகு கொத்துமல்லி, கருவேப்பிலையை பொடி பொடியாக நறுக்கி அதில் போடவும்.

புளி அவல் இப்போது ரெடி. சில நேரங்களில் புளிக்கு பதிலாக எலுமிச்சம்பழம் சாறுகூட விட்டுச் செய்யலாம்.

தங்கம் ராமசாமி
More

தேங்காய் அவல்
மிளகு அவல்
வெஜிடபள் அவல்
பருப்பு உசிலி அவல்
அவல் பொங்கல்
வெல்ல அவல்
அவல் கேசரி
அவல் தோசை
அவல் பக்கோடா
அவல் கட்லெட்
Share: