Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2006 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | பயணம் | புதுமைத்தொடர் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
உதவும் கரங்கள்: 'கலாட்டா 2006'
'க்ரியா க்ரியேஷன்ஸ்' வழங்கும் நாடகம் கடவுளின் கண்கள்
'ஸ்டேஜ் ·ப்ரண்ட்ஸ்' வழங்கும் ரகசிய சினேகிதியே
நியூ யார்க்கில் தமிழர் திருவிழா-2006
இந்திரா பார்த்தசாரதி வழங்கும் நாடகப் பயிற்சிப்பட்டறை
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம்
- பாகிரதி சேஷப்பன்|ஏப்ரல் 2006|
Share:
Click Here Enlargeதீண்டத்தகாதவர்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்களைச் சென்ற நூற்றாண்டில் கடவுளின் குழந்தைகள் என்ற பொருள் தரும் "ஹரிஜன்" என்ற பெயரிட்டுப் போற்றி, அவர்களோடு ஆலய நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்றவர் மகாத்மா காந்தி. ஆனால், பதினோராம் நூற்றாண்டி லேயே ஒடுக்கப்பட்ட மக்களைத் திருக் குலத்தார் என்று போற்றி, மேல்கோட்டை திருநாராயணபுரக் கோவிலில் முதல் மரியாதை அவர்களுக்கென்று உரித்தாக்கிய எம்பெருமானார் ராமானுஜர்.

சரித்திர நாயகர்களின் முக்கியத்துவத்தை உறுதிசெய்யும் துலாக்கோல் மனிதாபி மானம்தான் என்ற கண்ணோட்டத்தில் 11-ம் நூற்றாண்டுத் தமிழகத்தின் ஞானப் பெருமகன் ராமானுஜரை எடைபோடுகிறார் நாடகாசிரியர் இந்திரா பார்த்தசாரதி. சடங்கு நியதிகளுக்கும் ராமானுஜரின் புரட்சிக் கருத்துகளுக்குமான மோதலைச் சித்தரிக்கும் இந்த நாடகத்தை கலி ·போர்னியா வாழ் தமிழர்களின் கண் ணோட்டத்தில், முதன்முறையாக அமெரிக்கா வில் அரங்கேற்றுகிறது பாரதி நாடக மன்றம்.

மகாகவி பாரதியின் 'பாஞ்சாலி சபதம்', பாரதியின் வரலாற்றைத் தழுவிய 'அக்கினிக் குஞ்சு', கணிதமேதை ராமானுஜரைப் பற்றிய 'எண்ணங்கள்' ஆகிய நாடகங்களை அரங்கேற்றிய பெருமை கொண்டது பாரதி நாடக மன்றம். பாகீரதி சேஷப்பன் மற்றும் ரூபன் துணையோடு மணி மணிவண்ணன் இயக்கும் இந்த நாடகத்தில் 'Its Diff' தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா, '·பெர்மா' கிருஷ்ணன் ஆகியோருடன் பல தேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். ஸ்ருதி ஸ்வர லயா கலைஞர்கள் பாடல் களுடன் "தில்லானா" புகழ் முகுந்த் நரசிம்மன் இசையமைப்பில் நாடகம் அரங்கேறுகிறது. சிறப்பு விருந்தினரான இந்திரா பார்த்தசாரதியின் முன்னிலையி லேயே மேடையேறப் போவது நாடகத்துக்கு மேலும் பெருமைசேர்க்கிறது.

ஏப்ரம் 9, 2006 அன்று மதியம் 3 மணிக்கு, ·புட் ஹில் காலேஜ் ஸ்மித்விக் அரங்கத்தில் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்திருக்கும் 'சித்திரைக் கொண்டாட்டம்' நிகழ்ச்சியில் தான் ராமானுஜர் நாடகம் அரங்கேறுகிறது. கலி·போர்னியா தமிழ்க் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பாட்டு மையத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாக இதனைத் தமிழ் மன்றம் நடத்துகிறது.

நாடக அரங்கேற்றத்தைத் தொடர்ந்து ராகலயா இசைக்குழுவினரின் "என்றென்றும் புன்னகை" இன்னிசை நிகழ்ச்சி இடம் பெறுகிறது. ராகலயா இசைக்குழு, ராஜாமணி, ஸ்ரீதரன் மைனர், ஜெயஸ்ரீ சுந்தரேசன், ரங்கா கணபதி ஆகியவர்களால் உருவாக்கப்பட்டது. குன்னக்குடி வைத்திய நாதன் அவர்களின் மகன் ஸ்ரீதரன் வைத்தியநாதன் இந்நிகழ்ச்சியில் கீபோர்ட் வாசிக்க டெட்ராய்ட்டிலிருந்து வருகிறார். "விறுவிறுப்பான பாடல்களுடன் அனைத்து வயது மக்களையும் ஆடிப்பாடி மகிழ்விப் போம்" என்று உறுதி கூறுகின்றனர் ராகலயா குழுவினர். "நேயர் விருப்பம்" நிகழ்ச்சிகள் போல் வளைகுடாப் பகுதித் தமிழ் நேயர் களின் விரும்பி அழைத்ததைப் பதிவு செய்து ஒலிபரப்பவிருப்பது இந் நிகழ்ச்சியின் தனிச் சிறப்பு.

மக்கள் தரும் நிதி கலி·போர்னியா தமிழ்க் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பாட்டு மைய நிதிக்குப் போய்ச் சேரும்.
சித்திரைக் கொண்டாட்டம்
நாள்: April 9, 2006, ஞாயிறு
நேரம்: மாலை 3 மணிக்கு
இடம்: Smithwick Theater
Foothill College 12345, El Monte Road, Los Altos,
CA 94022

நுழைவுக் கட்டணம்:
Platinum Circle: $50 [உறுப்பினர் தள்ளுபடி $10]
Gold Circle: $25 [உறுப்பினர் தள்ளுபடி $5]
Silver Circle: $15 [உறுப்பினர் தள்ளுபடி $2]

விவரங்களுக்கு:
தில்லை குமரன் (408) 857.0181
மணி மணிவண்ணன் (510) 796.2433
ராஜா மணி (510) 396.1720
TS ராம் (510) 406.0047

பாகீரதி சேஷப்பன்
More

உதவும் கரங்கள்: 'கலாட்டா 2006'
'க்ரியா க்ரியேஷன்ஸ்' வழங்கும் நாடகம் கடவுளின் கண்கள்
'ஸ்டேஜ் ·ப்ரண்ட்ஸ்' வழங்கும் ரகசிய சினேகிதியே
நியூ யார்க்கில் தமிழர் திருவிழா-2006
இந்திரா பார்த்தசாரதி வழங்கும் நாடகப் பயிற்சிப்பட்டறை
Share: 




© Copyright 2020 Tamilonline