|
|
1. ஒரு பெட்டியில் முழுக்கட்டி, முக்கால் கட்டி, அரைக்கட்டி, கால் கட்டி என மொத்தம் 10 தங்கக் கட்டிகள் இருந்தன. அவற்றை தனது மகன்கள் மூவருக்கும் கட்டிகளை வெட்டாமல், சரி சமமாகப் பிரித்துக் கொடுத்தார் தந்தை. எப்படி?
2. 1 முதல் 9 வரையுள்ள எந்த எண்ணையும் 12345679 மற்றும் 9ல் பெருக்கினால் வரும் விடையின் மூலம் தெரிவது என்ன?
3. 7, 5, 8, 4, 9, 3, ? இந்த வரிசையில் அடுத்து வரும் எண் எது, ஏன்?
4. ஒரு பண்ணையில் சில பசுக்களும் சில கோழிகளுமாகச் சேர்த்து மொத்தம் 30 இருந்தன. அவற்றின் கால்களின் எண்ணிக்கை 74 என்றால் பசுக்கள் எத்தனை, கோழிகள் எத்தனை?
5. அது ஒரு நான்கு இலக்க எண். அந்த எண்ணுடன் ஒன்றைக் கூட்டினாலும், அதை 2ஆல் வகுத்து ஒன்றைக் கூட்டினாலும் வரும் விடை வர்க்க எண்களாக இருக்கின்றன எனில் அந்த எண் எது?
அரவிந்த் |
|
விடைகள் 1) பெட்டியில் இருந்த தங்கக் கட்டிகள் = 10
முழுக்கட்டி - 1 முக்கால் கட்டி - 3 அரைக் கட்டி - 5 கால் கட்டி - 1
முதல் மகனுக்கு - நான்கு அரைக் கட்டிகள் = 4 x 0.5 = 2 இரண்டாம் மகனுக்கு - ஒரு அரைக் கட்டி + இரண்டு முக்கால் கட்டி = 0.5 + 2(.075) = 0.5 + 1.5 = 2 மூன்றாம் மகனுக்கு - ஒரு முழுக்கட்டி + ஒரு முக்கால் கட்டி + ஒரு கால் கட்டி = 1 + 0.75 + 0.25 = 2 ஆக, ஒவ்வொருவருக்கும் இறுதியில் 2 முழுக்கட்டிகள் வரும் விதமாகப் பிரித்துக் கொடுத்தார்.
2) 12345679 x 9 = 111111111. இதை 1 முதல் 9 வரையுள்ள எந்த எண்ணால் பெருக்கினாலும் அந்த எண்ணே வரிசையாக வரும். 2 x 12345679 = 24691358 x 9 = 222222222 3 x 12345679 = 37037037 x 9 = 333333333 ........................... ........................... 9 x 12345679 = 111111111 x 9 = 999999999
3) 7, 5, 8 = முதல் எண்ணிலிருந்து இரண்டைக் கழித்தால் இரண்டாம் எண் கிடைக்கிறது (7 - 2 = 5). இரண்டாம் எண்ணுடன் மூன்றைக் கூட்டினால் மூன்றாம் எண் கிடைக்கிறது ( 5 + 3 = 8). மூன்றாம் எண்ணிலிருந்து நான்கைக் கழித்தால் வருவது நான்காம் எண் (8 - 4 = 4). அத்துடன் ஐந்தைக் கூட்ட வருவது ஆறாம் எண் (4 + 5 = 9). அதிலிருந்து ஆறைக் கழிக்க ஏழாம் எண் வருகிறது (9 - 6 = 3). இம்முறையின் படி வரிசையில் தொடர்ந்து வர வேண்டிய எண் = 3 + 7 = 10.
4) பசுக்கள் = x; கோழிகள் = y. அவற்றின் மொத்த எண்ணிக்கை = x + y = 30; x பசுக்களின் கால் எண்ணிக்கை = 4x; y கோழிகளின் கால் எண்ணிக்கை = 2y 4x + 2y = 74; x + y = 30 2x + 2y = 60 (4x + 2y)-(2x + 2y) = 2x = 74 - 60 = 14 x = 7 y = 30 - 7 = 23 கோழிகளின் எண்ணிக்கை = 23; பசுக்களின் எண்ணிக்கை = 7
5) அந்த எண் = 1680
இத்துடன் ஒன்றைக் கூட்ட 1680 + 1 = 1681 = 41 x 41
2ல் வகுத்து ஒன்றைக் கூட்ட = 1680 / 2 = 840 + 1 = 841 = 29 x 29 |
|
|
|
|
|
|
|