கணிதப்புதிர்கள்
1. ஒரு பெட்டியில் முழுக்கட்டி, முக்கால் கட்டி, அரைக்கட்டி, கால் கட்டி என மொத்தம் 10 தங்கக் கட்டிகள் இருந்தன. அவற்றை தனது மகன்கள் மூவருக்கும் கட்டிகளை வெட்டாமல், சரி சமமாகப் பிரித்துக் கொடுத்தார் தந்தை. எப்படி?

2. 1 முதல் 9 வரையுள்ள எந்த எண்ணையும் 12345679 மற்றும் 9ல் பெருக்கினால் வரும் விடையின் மூலம் தெரிவது என்ன?

3. 7, 5, 8, 4, 9, 3, ?
இந்த வரிசையில் அடுத்து வரும் எண் எது, ஏன்?

4. ஒரு பண்ணையில் சில பசுக்களும் சில கோழிகளுமாகச் சேர்த்து மொத்தம் 30 இருந்தன. அவற்றின் கால்களின் எண்ணிக்கை 74 என்றால் பசுக்கள் எத்தனை, கோழிகள் எத்தனை?

5. அது ஒரு நான்கு இலக்க எண். அந்த எண்ணுடன் ஒன்றைக் கூட்டினாலும், அதை 2ஆல் வகுத்து ஒன்றைக் கூட்டினாலும் வரும் விடை வர்க்க எண்களாக இருக்கின்றன எனில் அந்த எண் எது?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com