ஆனந்த் வெங்கடகிருஷ்ணனின் கர்நாடக இசை அரங்கேற்றம் குமாரி அம்ருதாபார்த்தசாரதி அரங்கேற்றம் உதவிக் கரங்களை நீட்டிய பிலட்ல்பியா சமூகத்தினர் ஸ்ருதி ஸ்வர லயா நிகழ்வுகள் லஷ்மி நாராயணா இசைப்பள்ளி பிள்ளையார் சதுர்த்தி கலைநிகழ்ச்சி
|
|
லட்சுமி சாஸ்திரியின் பரதநாட்டிய அரங்கேற்றம் |
|
- |அக்டோபர் 2006| |
|
|
|
கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அன்று Palo Alto விலுள்ள கப்பர்லி தியேட்டரில் நடந்த லட்சுமியின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிக சிறப்பாக நடந்தது.
முதலில் ஹம்சநாதத்தில் தொடங்கிய புஷ்பாஞ்சலியுடன் தொடர்ந்து ஹம்சத்வனி யில் கணேச ஸ்துதியுடன்கூட விறுவிறுப்பாக தொடர்ந்தது. மேலும் ஜதிஸ்வரம், வாசஸ் பதியில் வர்ணமும் வெகு விறுவிறுப்பாக இருந்தது. நல்ல தாளக்கட்டு, அபிநயபாவம், நல்ல நளினமான அசைவுகள் இவை நடனத்திற்கு களைகட்டின.
பூர்வி கல்யாணியில் அமைந்த ஆனந்த நடமாடுவார், ஜெயா துர்காதேவி, ரேவதியில் தில்லானா, மாடு மேய்கும் கண்ணா ஆகியவை தொடர்ந்தன. மாடு மேய்கும் கண்ணா நடனத்தில் லட்சுமி சின்னக் குழந்தை கண்ணனாகவே மாறி குழந்தையாக துள்ளித் துள்ளி ஆடி சபையோரை மிக்க மகிழ்வித்தாள். காவடிச்சிந்துவிற்கு பிறகு மங்களத்துடன் நடனம் நிறைவுற்றது.
குரு விஷால் ரமணியின் தேர்ந்த பயிற்சியி னால் இந்த அரங்கேற்ற விழா மிக கச்சிதமாக அமைந்தது என்பது உண்மை.
நட்டுவாங்கம் ஸ்ரீ மதுரை ஆர்.முரளிதரன், வாய்பாட்டு ஸ்ரீமுரளி பார்த்தசாரதி, மிருதங்கம் ஸ்ரீ எம்.தனஞ்சயன், வயலின் ஸ்ரீ என்.வீரமணி போன்றோர்களின் மிகத் தேர்ந்த இசை யமைப்பில் நடனம் மிகச் சிறந்திருந்தது என்றால் அது மிகையாகாது. |
|
நடனத்தில் பல இடங்களில் இந்த சிறிய பெண் லட்சுமியின் நளினமும், அசைவுகளும் சபையோரின் பலத்த கைத்தட்டல்கள் பெற்றன.
நடன அரங்கேற்றம் என்பதால் சில குறைகளை தவிர்த்து பல நிறைவுகளைப் பார்க்கும் போது லட்சுமி சாஸ்திரியின் முன்னேற்றப் பாதை தெளிவாகவே தெரிகிறது.
கூடிய சீக்கிரமே லட்சுமி சாஸ்திரியின் நிகழ்ச்சிகள் வருவது நிச்சயம்.
இந்நிகழ்ச்சிக்கு இன்னொரு சிறப்பாக அமைந்தது நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் வழங்கிய உணவு வகைகள்.
மங்களா |
|
|
More
ஆனந்த் வெங்கடகிருஷ்ணனின் கர்நாடக இசை அரங்கேற்றம் குமாரி அம்ருதாபார்த்தசாரதி அரங்கேற்றம் உதவிக் கரங்களை நீட்டிய பிலட்ல்பியா சமூகத்தினர் ஸ்ருதி ஸ்வர லயா நிகழ்வுகள் லஷ்மி நாராயணா இசைப்பள்ளி பிள்ளையார் சதுர்த்தி கலைநிகழ்ச்சி
|
|
|
|
|
|
|