Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் விழா
மிச்சிகன் தமிழ் சங்கம் கிறிஸ்துமஸ் விழா
குமான் பரிசளிப்பு விழா
சம்ஹிதா கடியாலாவின் கச்சேரி
MACA தமிழ்ச் சங்கம்: கொத்தமங்கலம் சுப்பு நூற்றாண்டு விழா
அம்பிகா கோபாலன் பரதநாட்டியம்
சிகாகோ தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம்
மஸாசுசெட்ஸில் 'ராகமஞ்சரி 2009'
கதிரி கோபால்நாத் சாக்ஸபோன் இசை
சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருவிழா
சக்தி சுந்தர் கர்நாடக இசை அரங்கேற்றம்
அழகு சிதம்பரம் பரதநாட்டிய அரங்கேற்றம்
சிகாகோ தங்க முருகன் விழா
- பூமா சுந்தர்|ஜனவரி 2010|
Share:
Click Here Enlargeடிசம்பர் 12ம் தேதி இல்லினாய்ஸில் உள்ள லெமாண்ட் ஸ்ரீராமர் கோவிலில் தங்க முருகன் விழா விமரிசையாக நடந்தது. உற்சவ மூர்த்தி திருமுருகனை கல்யாண கோலத்தில் கருவறையிலிருந்து விழா மேடைக்குக் கொண்டு வரும்போது, பாடிய திருப்புகழ் பாடல்களும் சிறுவர்களின் காவடி ஆட்டமும் மிக அருமை. சந்திரசேகர குருக்கள் கந்தனைப்பற்றி உரையாற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். பழனியாண்டவராக வேடம் பூண்ட சிறுவன் ஆத்மநாதன் இவ்விழாவில் முக்கியப் பங்கேற்றான். இவ்விழாவில் 288 குழந்தைகள் பங்கேற்றனர். இது சென்ற ஆண்டைப் போல இரு மடங்கு. குழந்தைகளுக்கு நேர்த்தியாகப் பயிற்சி கொடுத்து அரங்கேற்றிய ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

"இது முருகன் தானே நடத்திக் கொள்ளும் திருவிழா" என்கிறார் விழாவின் பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன். சி.எஸ். ஐங்கரன், அனிதா கிருஷ்ணனுடன் இணைந்து முருகன் பாடல்களாகத் தொகுத்து வழங்கிய மெல்லிசை ரசிக்கத் தக்கதாக இருந்தது. வள்ளி கல்யாணத்தில் நவரஸம் பாடல் தொகுப்பு, விநித்ரா ராஜகோபாலனின் நெஞ்சை அள்ளும் நாட்டியம், வைதேகி குழுவினரின் அறுபடை வீடு பற்றிய நாடகம், சுமேஷ் சுந்தரேசன் மற்றும் பவிஷ் பட்டர் சுத்தத் தமிழில் பேசி நடித்த, 'தந்தைக்கு மந்திரம்' நாடகம் மற்றும் பிற கலைநிகழ்ச்சிகள் அருமை.

12 மணி நேரத்துக்கும் மேலாக நிகழ்ச்சிகளைத் தொய்வின்றித் தொகுத்தளித்த புவனா, உமாபதி, சுபத்ரா, ராமசாமி, முத்து, குழலி, புஷ்பா, குமார், ஷோபனா, பூமா ஆகியோரும், தாளவாத்ய உதவி செய்த ஆத்ரேய நாதன், சஞ்சய் சுப்ரமணியன், சாஸ்திரி ஆகியோரும் பாராட்டுக்குரியவர்கள். தேவகி ராமன், சிவராமன், வனமூர்த்தி, வைதேகி, சுந்தர், ராஜகோபாலன், ஹரி சங்கர், வேலாயுதம், கலை, சோமு மற்றும் கடலூர் குமார், பத்மநாபன், ஆர்.சங்கரன், சந்திரசேகர், மகேஸ்வரி, சிவசுப்ரமணியன், ரகுராமன், உமா, டாக்டர் ராதா, கிருஷ்ணன், ஆனந்தி சுந்தரம், ஜி. உமா, ராமசாமி, வெங்கடேச குருக்கள், பண்டிட் சத்யகோபால் ஆகியோர் இவ்விழா சிறப்பாக நடக்க உதவினர்.
பூமா சுந்தர்,
சிகாகோ
More

அட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் விழா
மிச்சிகன் தமிழ் சங்கம் கிறிஸ்துமஸ் விழா
குமான் பரிசளிப்பு விழா
சம்ஹிதா கடியாலாவின் கச்சேரி
MACA தமிழ்ச் சங்கம்: கொத்தமங்கலம் சுப்பு நூற்றாண்டு விழா
அம்பிகா கோபாலன் பரதநாட்டியம்
சிகாகோ தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம்
மஸாசுசெட்ஸில் 'ராகமஞ்சரி 2009'
கதிரி கோபால்நாத் சாக்ஸபோன் இசை
சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருவிழா
சக்தி சுந்தர் கர்நாடக இசை அரங்கேற்றம்
அழகு சிதம்பரம் பரதநாட்டிய அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline