மகேஷ் பூபதி கிராண்ட் ஸ்லாம் சாதனைகள் டென்னிஸ் விதிமுறை மாற்றங்கள்
|
|
பசி·பிக் லை·ப் ஓப்பன் |
|
- சேசி|ஏப்ரல் 2006| |
|
|
|
கலி·போர்னியாவின் இண்டியன் வெல்ஸ் நகரில் நடக்கும் இந்த டென்னிஸ் தொடர் 31-ம் ண்டில் அடியெடுத்து வைக்கிறது. பெண்கள் பிரிவில் இது 18-வது வருடம். நடு அரங்கம் 16,100 பேர் அமர்ந்து பார்க்க வசதி கொண்டது. U.S. ஓப்பன் நடக்கும் ஆர்தர் ஆஷ் அரங்கத்திற்குப் பிறகு டென்னிஸ¤க்கு என்று பிரத்தியேகமாக அமைக்கப் பட்ட அரங்கங்களில் அமெரிக்காவிலேயே பெரிய அரங்கம் இதுதான். வருடந்தோரும் கிட்டத்தட்ட 300,000 பேர் இந்த டென்னிஸ் போட்டிகளைப் பார்க்க வருகிறார்கள்.
இது டென்னிஸ் மாஸ்டர் தொடர் என்று நடக்கும் 10 போட்டிகளில் ஒன்றாகும். இந்தத் தொடரில் வருட ஆரம்பத்தில் நடக்கும் முதல் போட்டி இதுதான். இந்த வருடம் ராஜர் ·பெடரர் ஒற்றையர் ஆட்டத்தில் வென்று, முதன்முறையாக இந்தப் போட்டியில் மூன்று வருடங்கள் தொடர்ந்து வெற்றி பெற்ற சாதனை யைப் படைத்திருக்கிறார். |
|
இந்தப் போட்டியை இங்கிருந்து வேறு நகருக்கு எடுத்துச் செல்ல முயற்சிகள் நடந்தன. கிரிஸ் எவர்ட், பில்லி ஜீன் கிங், பீட் சாம்பிரஸ் போன்ற முற்கால டென்னிஸ் வீரர்கள் மற்ற தொழிலதிபர் களுடன் இணைந்து முதலீடு செய்து அதை நிறுத்தியுள்ளனர். டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபின் பீட் சாம்பிரஸ் டென்னிஸ் போட்டி களில் ஈடுபாடு கொள்வது இதுவே முதன்முறை.
இந்தத் தொடரைப் பற்றிய விவரங் களை http://www.pacificlifeopen.com என்ற தளத்தில் காணலாம். இந்த ஆண்டிலிருந்து போட்டியின் அன்றாடச் சிறப்பு ஆட்டங்களை வீடியோவாக http://www.pacificlifeopen.tv என்ற இணையத் தளத்தில் இலவசமாக ஒளிபரப்புகிறார்கள்.
சேசி |
|
|
More
மகேஷ் பூபதி கிராண்ட் ஸ்லாம் சாதனைகள் டென்னிஸ் விதிமுறை மாற்றங்கள்
|
|
|
|
|
|
|