|
கணிதப்புதிர்கள் |
|
- அரவிந்த்|நவம்பர் 2009| |
|
|
|
1. ஒரு கூண்டில் சில மைனாக்களும், சில முயல்களும் அடைக்கப்பட்டிருந்தன. அவற்றின் தலையை எண்ணினால் 20 வருகிறது. கால்களை எண்ணினால் 48 வருகிறது. மைனாக்கள் எத்தனை, முயல்கள் எத்தனை?
2. ஒரு பையில் சில ஆரஞ்சுப் பழங்கள் இருந்தன. அவற்றை இரண்டு, மூன்று, நான்கு என்ற கணக்கில் கூறுகளாக்கினால் ஒவ்வொரு கூறுக்குப் பின்னரும் ஒரு பழம் மிஞ்சுகிறது. ஆனால் ஐந்து கூறுகளாக ஆக்கினால் மீதம் ஏதுமில்லை. பையில் இருந்த பழங்களின் எண்ணிக்கை என்ன?
3. ராமு கடையில் கார் பொம்மை ஒன்றையும், பேட்டரியையும் 12 டாலருக்கு வாங்கினான். பேட்டரியை விட கார் பொம்மையின் விலை 10 டாலர் அதிகம் என்றால் பொம்மை விலை எவ்வளவு, பேட்டரி விலை எவ்வளவு?
4. நூறு கேள்விகள் கொண்ட தேர்வில் கலந்து கொண்ட கீதா, சிலவற்றிற்குச் சரியாகவும் சிலவற்றிற்குத் தவறாகவுமாக அத்தனை கேள்விகளுக்கும் பதிலளித்தாள். தேர்வு முடிவில் அவள் 85 மதிபெண்கள் பெற்றிருந்தாள். அவளுடைய ஒவ்வொரு தவறான விடைக்கும் 2 மதிப்பெண் கழிக்கப்பட்டது என்றால் அவள் எத்தனை கேள்விகளுக்கு சரியான விடையளித்தளிருப்பாள்?
5. 1, 100, 3, 81, 5, ... வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
அரவிந்த் |
|
விடைகள் 1. மைனாக்கள் = a ; முயல்கள் = b என்க.
a + b = 20 ------ 1.
மைனாக்களுக்கு 2 கால்கள்; முயல்களுக்கு 4 கால்கள்
2a + 4b = 48 ------ 2
= 2(a + 2b) = 48;
= a + 2b = 48/2 = 24
சமன்பாடு இரண்டிலிருந்து ஒன்றைக் கழிக்க
a + 2b = 24 ( - ) a + b = 20 b = 4;
a + b = 20; a + 4 = 20; a = 20 - 4 = 16
ஆகவே மைனாக்கள் 16; முயல்கள் 4.
2. கூடையில் இருந்த பழங்களின் எண்ணிக்கை = 25
அவற்றை இரண்டிரண்டு கூறாக வைத்தால் = 2 x 12 = 24; மீதம் ஒன்று வருகிறது. மூன்று மூன்று கூறாக வைத்தால் = 3 x 8 = 24; மீதம் ஒன்று இருக்கிறது. நான்கு நான்கு கூறாக வைத்தால் = 4 x 6 = 24; மீதம் ஒன்று வருகிறது. ஐந்து ஐந்து கூறாக வைத்தால் = 5 x 5 =25; மீதம் ஒன்றுமில்லை. ஆகவே கூடையிலிருந்த ஆரஞ்சுப் பழங்களின் எண்ணிக்கை = 25 (75, 125.... என ஐந்தின் அடுக்குகளும் விடைகளாக வரலாம்)
3. கார் பொம்மை + பேட்டரி = $12; பேட்டரியின் விலையை விட கார் பொம்மையின் விலை $10 அதிகம் என்றால் பேட்டரியின் விலை - 1 $ கார் பொம்மையின் விலை - 11 $
4. சரியான கேள்வி = x தவறான கேள்வி = y
x + y = 100 ; x - 2y = 85; இரண்டையும் கூட்ட x + y = 100 x - 2y = 85 - 3y = 15 y = 5.
ஒவ்வொரு தவறான கேள்விக்கு இரண்டு மதிப்பெண் வீதம் கழிக்க = 5*2 = 10; 95-10 = 85; ஆக தவறான கேள்வி = 5; சரியான கேள்வி = 95. மொத்தம் = 100 கேள்விகள்.
5. முதல் வரிசை 1, 3, 5 எனத் தொடர்கிறது. அடுத்து 100, 81 என்று செல்கிறது.
100 = 10^2 81 = 9^2 என சதுர எண்ணின் இறங்கு வரிசையாகச் செல்கிறது. ஆகவே அடுத்து வர வேண்டியது 8^2 = 64. |
|
|
|
|
|
|
|