கணிதப்புதிர்கள்
1. ஒரு கூண்டில் சில மைனாக்களும், சில முயல்களும் அடைக்கப்பட்டிருந்தன. அவற்றின் தலையை எண்ணினால் 20 வருகிறது. கால்களை எண்ணினால் 48 வருகிறது. மைனாக்கள் எத்தனை, முயல்கள் எத்தனை?

2. ஒரு பையில் சில ஆரஞ்சுப் பழங்கள் இருந்தன. அவற்றை இரண்டு, மூன்று, நான்கு என்ற கணக்கில் கூறுகளாக்கினால் ஒவ்வொரு கூறுக்குப் பின்னரும் ஒரு பழம் மிஞ்சுகிறது. ஆனால் ஐந்து கூறுகளாக ஆக்கினால் மீதம் ஏதுமில்லை. பையில் இருந்த பழங்களின் எண்ணிக்கை என்ன?

3. ராமு கடையில் கார் பொம்மை ஒன்றையும், பேட்டரியையும் 12 டாலருக்கு வாங்கினான். பேட்டரியை விட கார் பொம்மையின் விலை 10 டாலர் அதிகம் என்றால் பொம்மை விலை எவ்வளவு, பேட்டரி விலை எவ்வளவு?

4. நூறு கேள்விகள் கொண்ட தேர்வில் கலந்து கொண்ட கீதா, சிலவற்றிற்குச் சரியாகவும் சிலவற்றிற்குத் தவறாகவுமாக அத்தனை கேள்விகளுக்கும் பதிலளித்தாள். தேர்வு முடிவில் அவள் 85 மதிபெண்கள் பெற்றிருந்தாள். அவளுடைய ஒவ்வொரு தவறான விடைக்கும் 2 மதிப்பெண் கழிக்கப்பட்டது என்றால் அவள் எத்தனை கேள்விகளுக்கு சரியான விடையளித்தளிருப்பாள்?

5. 1, 100, 3, 81, 5, ... வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com