|
|
நீங்களும் நிறையப் படம் எடுக்கிறீர்கள். வளரும் குழந்தை, செல்ல நாய், அன்பான பெற்றோர்கள், நண்பர்கள், வீட்டு விழாக்கள், உல்லாசப் பயணம் என்று எடுத்தபடியேதான் இருக்கிறீர்கள். ஏன் சாப்பிடுவது, தோட்டத்தில் நடப்பது போன்ற அன்றாடச் செயல்களை எடுத்ததாகக் கூட இருக்கலாம். அவற்றில் மிக நன்றாக இருப்பதாக நீங்கள் நினைப்பதை எங்களுக்கு அனுப்புங்கள். எப்போது எடுத்தீர்கள் என்பதைப் பற்றி ஓரிரு வாக்கியம் எழுதுங்கள். மறக்காமல் உங்கள் பெயர், முகவரி எழுதுங்கள். தவறாமல் 'In my home...' என்பதை உங்கள் மின்னஞ்சலின் பொருளாக எழுதுங்கள்.
அனுப்பவேண்டிய முகவரி: thendral@tamilonline.com
வருங்காலத்தில் அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கையைக் குறித்த ஒரு முக்கிய ஆவணமாக அது மாறலாம். தென்றலில் சரித்திரம் பதியுங்கள். |
|
"வாங்க, வாங்க! என் பட்டுப் புடவை நல்லா இருக்கா?":
மிருதுளா மோஹன்குமார்; லாஸ் ஏஞ்சலஸ், கலி.
"என் தம்பி மாதிரியே வாயில வெரலைப் போட்டு, என் பல்லும் கோணாமாணான்னு இருக்கு. அதுதான் வாயை அழுத்தி மூடிக்கிட்டிருக்கேன்":
ஷியாம், பிரணவ்; மோன்மௌத் ஜங்ஷன், நியூஜெர்ஸி.
"புதிய வானம், புதிய பூமி, எங்கும் ஒளிமழை பொழிகிறது!":
ராமச்சந்திரன் கணபதி குடும்பத்தினர்; வீட்டன், இல்லினாய்ஸ். |
|
|
|
|
|
|
|