டென்னசி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா - 2007 SIFA தியாகராஜ ஆராதனை ஸ்ருதி ஸ்வர லயாவின் தியாகராஜ ஆராதனை லாவண்யா தவக்குமார் பரதநாட்டிய அரங்கேற்றம் நீரஜா வெங்கட்: பரதநாட்டிய அரங்கேற்றம் கிரேட்டர் அட்லாண்டா தமிழ்ச் சங்கம்: பொங்கல் திருவிழா - 2007 லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் தியாகராஜ ஆராதனை சித்ரா விவேக் இந்திய சமுதாய மையத்தின் புதிய நிர்வாக இயக்குனர்
|
|
ஜார்ஜியா கர்நாடக இசைச் சங்கம்: கீதா பென்னெட் வீணைக் கச்சேரி |
|
- பத்ரி|மார்ச் 2007| |
|
|
|
பிப்ரவரி 11, 12, 2007 தேதிகளில்அட்லாண்டாவில் இருக்கும் ஜார்ஜியா கர்நாடக இசைச் சங்கம் (CAMAGA) தனது பதினோராவது 'Great Composers' தினத்தைக் கொண்டாடியது. அதன் இரண்டாவது நாள்
நிகழ்ச்சியாக திருமதி கீதா பென்னெட்டின் வீணை கச்சேரி நடைபெற்றது. திரு ராம் ஸ்ரீராம் (மிருதங்கம்), திரு சுரேஷ் கோதண்டராமன் (கஞ்சிரா) சிறப்பாகப் பக்கம் வாசித்தனர்.
விறுவிறுப்பான ஸ்ரீராக வர்ணதோடு கச்சேரியை ஆரம்பித்து, தீட்சிதரின் 'பஞ்ச மாதங்க முக' என்ற மலஹரி ராக கிருதியை அடுத்து வாசித்தார். மேடைகளில் அதிகம் கேட்கப்படாத 'அனாதுடனு கானு' என்ற தியாகராஜரின்
இருபதாவது மேளகர்த்தா நடபைரவியின் ஜன்யமான 'ஜிங்கலா' என்ற அபூர்வ ராக கிருதியை கீதா வாசித்தார். அடுத்து வந்த 'ஹம்சாநந்தி' ராக ஆலாபனையில் அந்த ராகத்தின் அழகையும் நுணுக்கங்களையும் காட்டினார்.
தொடர்ந்து வந்தது, மிக பக்திபூர்வமான 'ராம மந்திரவ ஜபிஸோ' என்ற புரந்தரதாஸர் கிருதி. வாசிப்பதற்கு முன்னால் அந்தப் பாடலின் பொருளை ரசிகர்களுக்கு விளக்கிச் சொன்னது மிகவும் சிறப்பு. அந்த பாட்டிற்கு
விறுவிறுப்பான அருமையான கல்பனை ஸ்வரங்களைக் கொடுத்தவர் தொடர்ந்து தன் தந்தை டாக்டர் எஸ். ராமநாதனுக்கு மிகவும் பிரியமான சுப்ரமணிய பாரதியின் 'ஊழிக்கூத்து' பாட்டை பாடிக் கொண்டே வாசித்தார். இந்த பாடலின் அமைப்பும் தாளக்கட்டும் ரசிகர்களுக்கு மிக பிடித்தது என்பது அவர்களது பலத்த தலையாட்டலில் தெரிந்தது. |
|
அடுத்து வந்த 'மரிவேறே' என்ற சியாமா சாஸ்திரியின் கிருதிக்கு கீதா வாசித்த ராக ஆலாபனையும் பாட்டை அவர் கையாண்ட விதமும் அவரது ஆழ்ந்த, தெளிவான ஞானத்தைக் காட்டின. புரந்தரதாஸரின் சுத்த தன்யாஸி
'நாராயணா'வுக்குப் பின் தியாகராஜரின் காம்போதி ராக 'ஓ ரங்கசாயி'க்கு ராக ஆலாபனை, தான மாலிகையுடன் கிருதியை மிக அழகாக கையாண்டார். டாக்டர் ஸ்ரீராமும், சுரேஷ¤ம் எல்லா கிருதிகளுக்கும் உணர்ந்து
வாசித்ததோடு தனி ஆவர்த்தனத்தின் போது லயத்தில் தங்கள் திறமையையும் காண்பித்தார்கள். கல்கியின் 'காற்றினிலே வரும் கீதம்', பாரதியின் 'சின்னஞ்சிறு கிளியே', அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து ஆகியவற்றுக்குப் பின் பாபனாசம் சிவனின் மத்யமாவதி ராக 'கற்பகமே' கிருதியுடன் கச்சேரி நிறைவுற்றது. பத்ரி, அட்லாண்டா |
|
|
More
டென்னசி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா - 2007 SIFA தியாகராஜ ஆராதனை ஸ்ருதி ஸ்வர லயாவின் தியாகராஜ ஆராதனை லாவண்யா தவக்குமார் பரதநாட்டிய அரங்கேற்றம் நீரஜா வெங்கட்: பரதநாட்டிய அரங்கேற்றம் கிரேட்டர் அட்லாண்டா தமிழ்ச் சங்கம்: பொங்கல் திருவிழா - 2007 லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் தியாகராஜ ஆராதனை சித்ரா விவேக் இந்திய சமுதாய மையத்தின் புதிய நிர்வாக இயக்குனர்
|
|
|
|
|
|
|