தங்க முருகன் விழா 2006 வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற பொங்கல் விழா நந்தலாலாவின் நிதி திறட்டும் இசை விழா சின்மயா மிஷன் மாணவர்கள் பக்திபாடல்கள் வெளியீட்டு விழா ஹாரிஸ்பர்க், பென்சில்வேனியாவில் தியாகராஜ ஆராதனை விழா கவியரசு கண்ணதாசனுக்கு அமெரிக்க மண்ணில் விழா தமிழகத்திற்கு உதவ முன் வரும் யூஸ்டன் தமிழர்கள்
|
|
அரங்கம் நிறைந்த அட்டகாசமான தேனிசை மழை! |
|
- |பிப்ரவரி 2007| |
|
|
|
சென்ற அக்டோபர் மாதம் 14ஆம் தேதி சிகாகோ தமிழ்ச் சங்கம் லெமாண்ட் கோயிலில் 'தேனிசை விழா' ஏற்பாடு செய்திருந்தது. சென்ற வருட இசைவிழாவின் வெற்றியின் காரணமாகவோ என்னவோ, விழா ஆரம்பிக்கும் முன்பே அரங்கம் நிரம்பத் தொடங்கியது.
தமிழ்த் தாய வாழ்த்துடன் தொடங்கிய விழாவை சிகாகோவின் முன்னணிப் பாடகர் ரவிசங்கர் ''தோகை இளமயில்'' பாடி விழாவை ஆரம்பித்து வைத்தார். அடுத்து வந்த 'பரத் & பரத்' ஜோடி "வாடா வாடா" பாடலைப் பாடி அரங்கத்தை அதிர வைத்தார்கள். சிறுமி திவ்யா ஆனந்தன் ''ஒவ்வொரு பூக்களுமே'' பாடலைப் பாடி உணர்சசி மிகு உச்சரிப்பால் அனைவரையும் வியக்க வைத்தார். பின் வந்த ஸ்ரீகாந்த ''மச்சான் பேரு மதுரை'' பாடலைப் பாடி அனைவரையும் அசத்தினார். ஸ்ரீராம் & ஜோதி ''சுட்டும் விழிச் சுடரே'' பாடலைப் பாடி அனைவரையும் தாளம் போட வைத்தனர். டென்னசியிலிருந்து வந்திருந்த ஐங்கரன் ''தேவன் கோயில்'', ''ஜேஜே'', ''மெளனமே'' மற்றும் ''ஆசைக் கனவே'' (ஜெயஸ்ரீயுடன்) போன்ற பாடல்களைப் பாடி விழாவைச் சிறப்பித்தார்.
'கண்ணும் கண்ணும் நோக்கியா'' பாடல் பாடிய ரங்கா, ஸ்வேதா அனைவர் மனத்தையும் கொள்ளைக் கொண்டனர். ''கானாகுயில்'' பவித்ரா, 'சீனா தானா'', ''ஆட வரலாம்'' பாடல்களைப் பாடி அனைவரையும் கிறங்கடித்தார்.
ரமாரகுராமன், ''ஏதோ எண்ணம் வளர்த் தேன..'' ''என்ன என்ன வார்த்தைகளோ..'' பாடல்களைப் பாடி வந்திருந்தோரை மயக்கியதோடு, டாக்டர் சேவியருடன் சேர்ந்து ''அன்புள்ள மான்விழியே'' பாடலைப் பாடி கடந்த கால நினைவுகளை அசைப் போடச் செய்தார். அவர் பாடலுக்கு டாக்டர் சுப்ரமணியன் ஜோடி மிருதுவான மெதுநடன மாடியது மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. ''மைனாவே மைனாவே'' பாடலை பிரேமாவும், அபிநயாவும் சேர்ந்துப்பாடி கைதட்டல் பெற்றார்கள். |
|
பின் வந்த அந்நியன் படப்பாடலுக்கு சிறப்ப நடனம் ஆடிய சிறுமிகள் இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்து அரங்கத்தை அதிர வைத்தார்கள். தன் தனித் திறமையை வெளிப்படுத்திய சரண்யா, ''நெஞ்சாங்கூட்டில்'' பாடி எல்லோர் நெஞ்சிலும் இடம் பிடித்த ரவிச்சந்திரன், ''சம்திங் சம்திங்'' கேட்ட இனியவர் பிரசாந்த், ''ச்சீ ச்சீ'' பாடி கிலுகிலுப்பு ஊட்டிய பவித்ரா, ''என்னுயீர் தோழி'' பாடல் பாடி பழைய நினைவுகளுக்கு புத்துயிர் கொடுத்த டாக்டர் சூர்யா, 'வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும்'' கல்யாணம் செய்து வைத்த ரங்கா குழு வினரும் பெரும் பாராட்டைப் பெற்றார்கள்.
பாடகர்களை அறிமுகப்படுத்தியவர்கள் இடையிடையே நகைச்சுவை துணுக்கு களையும் பாடல், படம் பற்றி விவரங்களையும் கூறி அரங்கத்தை சுவராஸ்யப்படுத்தினார்கள். பாடியவர்களில் பெரும்பாலோருக்கு இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரிதான தேனிசை மழையைத் தந்த ரகுராமன், டோ னி சூசை மற்றும் சீனிகுருசாமி யின் உழைப்பு வீண்போகவில்லை. தலைவர் வீராவின் நன்றியுரையுடன் இனிதே முடிந்த இசைவிழா இனிவரும் விழாக்களுக்கு தமிழ்ச் சங்கம் இனிதான அடிக்கல்லை நாட்டி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.chicagotamilsangam.org ராம் ரகுராமன் 815.436.3135 வீரா வேணுகோபால் 847.910.3684 முத்துசாமி 847.800.8793
கல்பனா முத்து, ஜோலியட் ரகு |
|
|
More
தங்க முருகன் விழா 2006 வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற பொங்கல் விழா நந்தலாலாவின் நிதி திறட்டும் இசை விழா சின்மயா மிஷன் மாணவர்கள் பக்திபாடல்கள் வெளியீட்டு விழா ஹாரிஸ்பர்க், பென்சில்வேனியாவில் தியாகராஜ ஆராதனை விழா கவியரசு கண்ணதாசனுக்கு அமெரிக்க மண்ணில் விழா தமிழகத்திற்கு உதவ முன் வரும் யூஸ்டன் தமிழர்கள்
|
|
|
|
|
|
|