டென்னசி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா - 2007 SIFA தியாகராஜ ஆராதனை ஸ்ருதி ஸ்வர லயாவின் தியாகராஜ ஆராதனை லாவண்யா தவக்குமார் பரதநாட்டிய அரங்கேற்றம் நீரஜா வெங்கட்: பரதநாட்டிய அரங்கேற்றம் ஜார்ஜியா கர்நாடக இசைச் சங்கம்: கீதா பென்னெட் வீணைக் கச்சேரி லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் தியாகராஜ ஆராதனை சித்ரா விவேக் இந்திய சமுதாய மையத்தின் புதிய நிர்வாக இயக்குனர்
|
|
|
ஜனவரி 27, 2007 அன்று பொங்கல் விழா அட்லாண்டா தமிழ்ச்சங்கத்தில் அன்று மெடோ க்ரீக் உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. இதில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர். ஆங்காங்கே இருந்த
கோலங்களும் ஒரு கிராமவாசியின் வீடு போன்ற அரங்க அமைப்பும் அனைவரையும் தமிழ்நாட்டுக்கே கொண்டு சென்றன. வெள்ளை வேட்டி அணிந்த ஆடவர், வண்ணப்பட்டு உடுத்திய பெண்டிர் மற்றும் பலவித இந்திய
உடைகளில் குழந்தைகள் என்று விழா களைகட்டியிருந்தது.
இந்த விழாவைத் தனது அமுதகானத்துடன் 'சரிகம' இசைக்குழு தொடங்கி வைத்தது. 'For the love of music' என்ற தலைப்புக்கேற்ப, பல அருமையான பாடல்களை வழங்கினர். குறிப்பிடும் வகையில் அமைந்த 'சாந்தி
நிலவ வேண்டும்' பாடல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
'பாஞ்சு பாயுற பட்டம்' என்ற 'சந்திரமுகி' படத்தின் சூப்பர்ஹிட் பாடலுக்கு, குழந்தைகள் பளபளக்கும் உடைகளில் கையில் பட்டங்களுடன் மேடையெங்கும் நடனமாடி காண்போரை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தினர். 'பொங்கல்
வந்தாச்சு' பாடலின் மூலம் தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடுவது எப்படி என்பதைக் கரும்பு, பொங்கல் பானை எல்லாம் வைத்துச் சூரியனையும் மாடுகளையும் வணங்குவதைச் சித்திரித்து காட்டினர் பிள்ளைகள்.
பொங்கலின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் 'நாட்டுப்புற பாட்டு' அமைந்தது. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது போன்ற உழவர் பாடல்களைச் சிறப்பாகப் பாடினர்.
காண்பவரை மகிழ்வித்தது 'காசுமேல' பாட்டின் நடனம். இடையிடையே வந்து போகும் 'வால்பையன்' மற்றும் வேடிக்கையாக ஆடும் ஆண்கள் என்று வியக்கவைத்தது.
பிறகு கல்யாணசுந்தரம் அவர்களுக்கு 'நீண்டநாள் சேவை' விருது வழங்கப்பட்டது. திரு. தணிகாச்சலம் ·பெட்னா சார்பாக ஜூலை 6-8, 2007 ராலேயில் நடைபெறவிருக்கும் இருபதாவது வருடாந்திர தமிழ் மாநாடு பற்றி
விரித்துரைத்தார். தொடர்ந்து '2006 Membership Directory' வெளியிடப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சார்ந்தவரின் வர்த்தக மற்றும் தொண்டு நிறுவனங்களைப் பற்றிய தகவல்களும் அடங்கும். |
|
இடைவேளையைத் தொடர்ந்து ஜொலிக்கும் பொன்னிற உடைகளில் சிறுமியர் ஆடிய பாம்பு நடனம் அனைவரையும் மயக்கியது. டென்னஸி தமிழ்ச் சங்கம் சார்பில் 'வந்தேண்டா பால்காரன்' சூப்பர்ஹிட் பாடலுக்கு ஆடிய
குழந்தைகள் பார்ப்போரைத் தாளம் போட வைத்தனர்.
அடுத்து வந்தது 'கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம்'. சென்ற ஆண்டின் சூப்பர்ஹிட் பாடலான 'வாள மீனுக்கும்' பாடலுக்கு சுட்டிக் குழந்தைகள் முதல் பெரியோர் வரை கல்யாண ஊர்வலத்தைச் சித்திரித்தது அருமை.
2007-ஆம் ஆண்டின் செயற்குழு மற்றும் அறங்காவலர் குழு அறிமுகத்துடன் தொடர்ந்த நிகழ்ச்சி 'இசைத்துளிக'ளுடன் நிறைவு பெற்றது. 'தரங்' கலைப்பள்ளியின் சார்பில் பாடகர்கள் அனைவரின் மனதையும் மகழ்வித்தனர்.
அறுவடைத் திருநாளைக் கொண்டாடும் பைசாகி நடனமாக 'சப்தா' அமைந்தது. ஜொலிக்கும் உடைகளில் இளம் பெண்கள் நளினமாக நடனமாடிச் சென்றனர்.
கே.ஆர். சுந்தரராகவன் |
|
|
More
டென்னசி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா - 2007 SIFA தியாகராஜ ஆராதனை ஸ்ருதி ஸ்வர லயாவின் தியாகராஜ ஆராதனை லாவண்யா தவக்குமார் பரதநாட்டிய அரங்கேற்றம் நீரஜா வெங்கட்: பரதநாட்டிய அரங்கேற்றம் ஜார்ஜியா கர்நாடக இசைச் சங்கம்: கீதா பென்னெட் வீணைக் கச்சேரி லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில் தியாகராஜ ஆராதனை சித்ரா விவேக் இந்திய சமுதாய மையத்தின் புதிய நிர்வாக இயக்குனர்
|
|
|
|
|
|
|