Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
Tamil Unicode / English Search
பொது
ஒபாமா வருகிறார், பராக்! பராக்!
சர்ஜன் ஜெனரல் டாக்டர் சஞ்சய் குப்தா?
எஸ்.வைத்தீஸ்வரனுக்கு 'விளக்கு' விருது
கனடாவில் அறிஞர் அண்ணா தபால்தலை வெளியீடு
துக்கடாக்களில் துணுக்கு வெடிகள்
அம்பைக்கு இயல் விருது
- அ. முத்துலிங்கம்|பிப்ரவரி 2009|
Share:
Click Here Enlarge2008ம் ஆண்டுக்கான 'இயல் விருது' தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளராக அறியப்படும் 'அம்பை'க்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனை விருது, கேடயமும் 1500 டாலர் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே. கணேஷ், வெங்கட் சாமிநாதன், லண்டன் பத்மநாப ஐயர், ஜார்ஜ் எல். ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் போன்றவர்களைத் தொடர்ந்து இவ்விருதுக்கு உரியவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அம்பை பெண்ணிய எழுத்தாளர்களில் தனித்து நிற்பவர்.

நாற்பது வருடங்களுக்கு மேலாகத் தன் செயல்பாட்டை எழுத்துக்கும், சிறுகதைகளுக்கும் மட்டுமென்றில்லாமல் இலக்கியத்துக்கு அப்பால் பெண்கள் வாழ்க்கையை வேறு வடிவங்களுக்கும் இட்டுச் சென்றதில் வெற்றி கண்டவர். மரபார்ந்த பெண்ணுக்கு கொடுக்கப்படும் மதிப்புகளை அவர் மறுத்தாலும், தன் சுதந்திரத்தைத் தானே தேடிக்கொள்ளும் பெண்ணின் உரிமைக்காகப் பேசினாலும், அவர் பெண்மையை மறுத்த பெண்ணியவாதி அல்லர். கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமும் தெரிந்தவர். அவருடைய எழுத்து தனித்துவம் வாய்ந்தது. அது வெளிப்படுத்தும் பெண்ணியம் அவருக்கு முந்திய மரபின் அடியொற்றி எழுதிய பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டது. கலையாக வெளிப்பாடு பெற்றுள்ள முதல் பெண்ணியக் குரல் என்று அம்பையினுடையதைச் சொல்லலாம்.

அம்பையின் நூல்கள்: 'அந்தி மாலை' (நாவல்), 'சிறகுகள் முறியும்' (1976), 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' (1988), 'காட்டில் ஒரு மான்' (2000), 'வற்றும் ஏரியின் மீன்கள்' (2007), ஆங்கில மொழிபெயர்ப்பில் A Purple Sea (1992), In a Forest, a Deer (2006) ஆகியவையாகும். இவை தவிர 'தமிழிலக்கியத்தில் பெண்கள்' என்ற Face Behind the Mask (1984) ஆங்கில ஆராய்ச்சி நூல். 'பயணப்படாத பாதைகள்' - ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு. 'சொல்லாத கதைகள்' - சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு.
SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அம்பை அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார். Dr. C.S. Lakshmi என்ற தன்னுடைய இயற்பெயரில் The Hindu, The Economics and Political Weekly, The Times of India போன்ற பத்திரிகைகளில் அம்பை அவ்வப்போது எழுதி வருகிறார்.

விருது வழங்கும் விழா ரொறொன்ரோ பல்கலைக்கழக அரங்கில் வழக்கம் போல வரும் மே மாதம் நடைபெற விருக்கிறது.

அ. முத்துலிங்கம்
More

ஒபாமா வருகிறார், பராக்! பராக்!
சர்ஜன் ஜெனரல் டாக்டர் சஞ்சய் குப்தா?
எஸ்.வைத்தீஸ்வரனுக்கு 'விளக்கு' விருது
கனடாவில் அறிஞர் அண்ணா தபால்தலை வெளியீடு
துக்கடாக்களில் துணுக்கு வெடிகள்
Share: 




© Copyright 2020 Tamilonline