கலாட்டா 2007 லலித கான வித்யாலயா வழங்கும் 'குரு வந்தனம்'
|
|
நாட்யா டான்ஸ் தியேட்டர், சிகாகோ வழங்கும் 'அலக்ஷ்யா' |
|
- |மார்ச் 2007| |
|
|
|
2007 மார்ச் 15, 16, 17 தேதிகளில் சிகாகோவின் 'நாட்யா டான்ஸ் தியேட்டர்' தனது புதிய படைப்பான 'அலக்ஷ்யா' என்பதை அரங்கேற்ற இருக்கிறது. தாய்-மகள் அணியான ஹேமா மற்றும் கிருத்திகா ராஜகோபாலன்
இதனைத் தயாரித்திருக்கிறார்கள்.
'அலக்ஷ்யா' என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு 'கண்ணுக்குப் புலப்படாத' என்று பொருள். நமது உறவுகளில் ஊடாடும் கண்ணுக்குத் தெரியாத திரைகளுக்கு ஓர் உருவகமாக இச்சொல்லைத் தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
ஒருபுறம் இந்தத் திரை, நமது நற்குணங்களை ஒதுக்கித் தள்ளி, சுயநலத்தின் காரணமாக மற்றவர்களின் துன்பத்துக்குக் காரணமாக இருப்பதை அடையாளப் படுத்துகிறது. அதே நேரத்தில், நம் உடலைப் பாதுகாக்கும்
திரையான தோலைப் போல, நேர்மறையானவற்றை நினைவூட்டி உலகின் நன்மைகளைக் குறித்த பிரக்ஞையைக் கூர்மையாக்குகிறது.
நாட்யா டான்ஸ் தியேட்டரின் நிறுவனரான திருமதி ஹேமா ராஜகோபாலன் சுமார் 35 ஆண்டுகளாகச் சிகாகோ சமுதாயத்துக்குப் பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் கிருத்திகா ராஜகோபாலன் இக்குழுவின்
பாரம்பரியத்துக்குப் பங்களிப்புச் செய்வதோடு நடனக் கல்வியும் புகட்டி வருகிறார்.
மார்ச் 15 அன்று நடன நிகழ்ச்சி முடிந்தபின் கலந்துரையாட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்ச் 17 அன்று மதியம் 2:15 மணிக்கு பெற்றோர்/குழந்தைகள் அசைவுப் பயிலரங்கம் (இலவசம்) நடைபெறும். |
|
நிகழ்ச்சி: 'அலக்ஷ்யா' நாட்டிய நிகழ்ச்சி நாள்: மார்ச் 15,16 & 17, 2007; இரவு 8:00 மணி இடம்: Dance Center of Columbia College, Chicago நுழைவுச் சீட்டுகளைப் பெற: தொலைபேசி: 312.344.8300 அல்லது இணையதளம்: www.dancecenter.org |
|
|
More
கலாட்டா 2007 லலித கான வித்யாலயா வழங்கும் 'குரு வந்தனம்'
|
|
|
|
|
|
|