சிகாகோ தமிழ் சங்கம் குழந்தைகள் விழா 2008 அபிநயா நாட்டியக் குழு வழங்கிய பரதநாட்டியம் டெலவர் வெல்லி பெருநகர்த் தமிழ் சங்கம் தீபாவளி விழா வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் பூந்தளிர்க் கூட்டம் கொலராடோ தமிழ் சங்கம்: தீபாவளி கொண்டாட்டம் சங்கரா கண் அறக்கட்டளை: பல்சுவை நிகழ்ச்சி அட்லாண்டா பெருநகரத் தமிழ் சங்கம் தீபாவளி கொண்டாட்டம் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு பாரதி தமிழ்ச்சங்கம் தீபாவளி கொண்டாட்டம் கோவினா ஐக்கிய இந்து ஆலயத்தில் முருகன் திருக்கல்யாணம் SIFA: பிரியதர்சினி கோவிந்த் பரதநாட்டியம் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி, டாலஸ்: கர்நாடக இசைக் கச்சேரி ஆஷா நிகேதனுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி TAMFEST 2008
|
|
சாண்டியேகோ தமிழ் சங்கம் மெல்லிசை மழை |
|
- |டிசம்பர் 2008| |
|
|
|
|
நவம்பர் 1, 2008 அன்று சாண்டியேகோ தமிழ்ச் சங்கம் 'மெல்லிசை மழை' ஒன்றை தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ஏற்பாடு செய்திருந்தது. 4S ரான்ச்சில் உள்ள ஸ்டோன் ரான்ச் பள்ளி அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் லாஸ் ஏஞ்சலஸின் 'ஆஷியானா' குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியுடன் சாண்டியேகோ கலைஞர்கள் சிலரும் பங்கு பெற்றனர். ஆஷியானாவின் உத்தரா ராம் மற்றும் ஸ்ரீராம் ஸ்ரீனிவாசனின் குரல்வளத்திற்கு கீபோர்ட் ராஜ் மற்றும் பெர்க்குஷன் மஹேஷ் மிஷ்ரா மெருகேற்றினார்கள். ஸ்ரீராமின் குரலில் 'இளமை இதோ இதோ' பாடல் SPBயை நேரில் அழைத்து வந்ததென்றால், உத்தரா 'ரா ரா' என்று சந்திரமுகியாகவே மாறிவிட்டார்.
இடைவேளைக்குப் பிறகு சாண்டியேகோவின் ரவி ராஜாராமன், சுவாமிநாதன் கணேசன், வீணா பத்மநாபன், ஸ்ரீப்ரியா சந்துரு, அஷ்வின் ராம் ஆகியோர் 'வீரபாண்டிக் கோட்டை', 'வசீகரா', 'பூவே செம்பூவே' ஆகியவற்றை வழங்கினர். அடுத்துப் பாய்ந்தது 'அமெரிகன் ஐடல்' புகழ் ஸ்ரீராம் ரங்கராஜனின் காதல் நதி. இடைவேளைக்குப் பிறகு மீண்டும் 'ஆஷியானா' குழுவினர் ஒரு நீண்ட தொடர்பாடலுடன் நிகழ்ச்சியை முடித்தார்கள். |
|
டேலண்ட்ஃப்யூஸ், ராபின்ஸ்டார் நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்து வழங்கிய மெல்லிசை மழை நான்கு மணி நேரம் பொழிந்தது.
கார்த்தி சம்பத் |
|
|
More