Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
இறந்தபின்னும் வாழலாம்...
முதியோர் இல்லத்தில் ராஜம் கிருஷ்ணன்
இன்னுமொரு இந்தியருக்கு புக்கர் பரிசு
- அரவிந்த்|நவம்பர் 2008|
Share:
Click Here Enlargeதன்னுடைய முதல் நாவலுக்கே புக்கர் பரிசைத் தட்டிச் செல்லும் மூன்றாவது இந்திய எழுத்தாளர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றிருக்கிறார் அரவிந்த் அடிகா. அவரது ‘த ஒயிட் டைகர்' (The White Tiger) என்னும் நாவலுக்கு இந்த ஆண்டுக்கான மான் புக்கர் பரிசு கிடைத்துள்ளது. 33 வயதாகும் அரவிந்த் சென்னையில் பிறந்தவர். ஆக்ஸ்ஃபோர்டு மற்றும் கொலம்பியாவில் உயர்கல்வி கற்றவர். அடிப்படையில் பத்திரிகையாளரான அரவிந்த் டைம் இதழின் நிருபராக வேலை பார்த்திருக்கிறார்.

தனது பத்திரிகை அனுபவமும், நிருபராக வேலை பார்த்தபோது தான் மேற்கொண்ட பயணங்களும்தான் இந்த நாவல் உருவாகத் துணையாக இருந்தன என்று குறிப்பிடுகிறார் அரவிந்த். சென்னையில் பிறந்து மங்களூரில் வளர்ந்த தனக்கு, இந்தப் பயணங்கள் புதிய பல வாசல்களைத் திறந்து விட்டன என்றும் கூறுகிறார்.

இந்த நாவல் மூலம் நவீன இந்தியாவின் இருண்ட பக்கங்களைப் படம் பிடித்த முதல் நாவலாசிரியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் அரவிந்த், 'நான் ஒரு நாவலாசிரியர், எழுத்தாளர்தான். என்னை ஒரு சமூகப் போராளியாக்கி விடாதீர்கள்' என்று வேண்டுகோள் விடுக்கிறார். ஆனாலும் இந்தியாவை அவலமாகச் சித்திரித்தே பன்னாட்டுப் பரிசு பெறுவதும் ஒரு அருங்கலையாகி விட்டதோ என்ற சந்தேகம் வராமலில்லை.

வி.எஸ். நைபால், அருந்ததி ராய், கிரண் தேசாய் வரிசையில் தனது இந்த நாவல் மூலம் சர்வதேச இலக்கியச் சந்தையின் கவனத்தை இந்தியா மீது திருப்பி இருக்கிறார் அரவிந்த்.
அரவிந்த்
More

இறந்தபின்னும் வாழலாம்...
முதியோர் இல்லத்தில் ராஜம் கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline