Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ஆர்த்தி வெங்கடேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
கன்ஸாஸ் நகர தமிழ்ச் சங்கம் கோடை விழா
கனெக்டிகட் இந்திய சுதந்திர தின விழா
வருணிகா ராஜா பரதநாட்டிய அரங்கேற்றம்
டெலவர் பெருநில வேலி தமிழ்ச் சங்கம் (TAGDV) கோடைச் சுற்றுலா
மேக்னா சக்ரவர்த்தி பரதநாட்டிய அரங்கேற்றம்
டொரோண்டோவில் பாபநாசம் சிவன் இசைவிழா
ரம்யா, அஞ்சலி சகோதரிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரேயா ராமச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
டொராண்டோ வரசித்தி விநாயகர் கோவில் அருணா சாய்ராம் ஆடிப்பூரக் கச்சேரி
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் பேரா. சுப. வீரபாண்டியன் உரை
மிசௌரி தமிழ்ச்சங்கம் வசந்த விழா
சுருதி அரவிந்தன் பரதநாட்டிய அரங்கேற்றம்
- கீதா பாஸ்கர்|செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeஆகஸ்ட் 30, 2008 அன்று தீபா மகாதேவனின் நடனப்பள்ளி மாணவி சுருதி அரவிந்தனின் நடன அரங்கேற்றம் ஃப்ரீமாண்ட் ஜாக்ஸன் அரங்கில் நடைபெற்றது. புஷ்பாஞ்சலியுடன் தொடங்கி, விநாயகர் மீதான விருத்தக் காட்சி. தொடர்ந்தது ‘அலாரிப்பு'. அலாரிப்பு என்றால் மலர்ந்து வரும் மொட்டு என்று பொருள். திருப்புகழ் வரிகளுக்கு அலாரிப்புச் செய்து, இனிய விருந்து படைத்தார் சுருதி. அடுத்து, பத்மஸ்ரீ தண்டாயுதபாணி பிள்ளையின் இயக்கத்தில் அழகான ஜதி கோர்வைகளும் ஸ்வர கோர்வைகளையும் கொண்ட நிருத்ய அமைப்பில் இருக்கும் ஜதிஸ்வரத்திற்குப் பாங்குடன் ஆடி மகிழ்வித்தார். பின்னர் ஆபோகி ராக முதல் பாதி வர்ணத்தில் ‘எனது அன்னையை எப்பொழுதும் மறக்க மாட்டேன்' என்றும், பிற்பாதியில் 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்றும் மனமுருகி ஆடினார். இவ்வர்ணத்தில் அமைந்த ஜதிகளை தன் குரு தீபா மகாதேவனின் சொல்லுக்கு ஏற்ப அற்புதமாக ஆடினார்.

அடுத்துத் தொடர்ந்த மகாகவி பாரதியாரின் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை' பாடலுக்குத் தத்ரூபமாக ஆடி, கோகுல கிருஷ்ணனின் பிள்ளை விளையாட்டையும் குறும்புகளையும் தன் முக பாவங்களிலேயே மிக அற்புதமாக உணர்த்தினார். அடுத்து ஈசன் பொற்பாதம் தூக்கி ஆடிய ஆட்டத்தை அற்புதமாக ஆடி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து கிராமிய மெட்டில் அமைந்த ‘மாடு மேய்க்கும் கண்ணா' பாடலை யசோதையாகவும், கண்ணனாகவும் மாறிமாறி ஆடினார். நளினகாந்தி ராகத்தில் அமைந்த தில்லானா விறுவிறுப்பாக இருந்தது. ஆறுமுகம் கொண்ட திருமுருகனை வர்ணித்து அவர் ஆடிய ஆட்டம் அற்புதம். இறுதியாக திருமூலரின் திருமந்திரப் பாடலில் அமைந்த பாடல் வரிகளைப் பாடி ஆடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் சுருதி அரவிந்தன்.
தீபா மகாதேவன் (நட்டுவாங்கம்), ஈஷ்வர் கிருஷ்ணன் (வாய்ப்பாட்டு), ரமேஷ்பாபு (மிருதங்கம்), சுபா நரசிம்மன் (வயலின்), ராதாகிருஷ்ணன் ராமச்சந்திரன் (புல்லாங்குழல்) ஆகியோர் நிகழ்ச்சிக்குப் பக்கபலமாக அமைந்தனர். 11 வயதான சுருதி அரவிந்தன், கடந்த நான்கு ஆண்டுகளாக குரு தீபா மகாதேவனிடம் நடனம் பயின்று வருகிறார். குரு மெச்சிய சிஷ்யையாக நடனத்தைத் தொடர்ந்து செய்துவருகிறார்.

கீதா பாஸ்கர்
More

ஆர்த்தி வெங்கடேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
கன்ஸாஸ் நகர தமிழ்ச் சங்கம் கோடை விழா
கனெக்டிகட் இந்திய சுதந்திர தின விழா
வருணிகா ராஜா பரதநாட்டிய அரங்கேற்றம்
டெலவர் பெருநில வேலி தமிழ்ச் சங்கம் (TAGDV) கோடைச் சுற்றுலா
மேக்னா சக்ரவர்த்தி பரதநாட்டிய அரங்கேற்றம்
டொரோண்டோவில் பாபநாசம் சிவன் இசைவிழா
ரம்யா, அஞ்சலி சகோதரிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரேயா ராமச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
டொராண்டோ வரசித்தி விநாயகர் கோவில் அருணா சாய்ராம் ஆடிப்பூரக் கச்சேரி
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் பேரா. சுப. வீரபாண்டியன் உரை
மிசௌரி தமிழ்ச்சங்கம் வசந்த விழா
Share: 




© Copyright 2020 Tamilonline