அரைநூற்றாண்டுக்குப் பிறகு விமானம் எப்படி இருக்கும்! காற்றிலேறி அவ் விண்ணையும் சாடுவார் குண்டு துளைக்காத ரயில் எஞ்சின்
|
|
அடித்து ஆடும் மகாலட்சுமி |
|
- அரவிந்த்|செப்டம்பர் 2008| |
|
|
|
|
தந்தை முகுந்த்குமாருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. தாய் இல்லத்தரசி. நான்கு மகள்கள். குடும்பத்தைக் காப்பாற்ற பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார் ஏழைத் தந்தை. சொற்ப வருவாய் உள்ள ஏழைக்குடும்பம். இவர்களின் பெண் மகாலட்சுமி இன்று சர்வதேச ஜூனியர் செஸ் சாம்பியன். துபாய், கஜகிஸ்தான், இரான், வியட்நாம், இராக், துருக்கி, சிங்கப்பூர் என்று நாடுகளில் இருந்து போட்டிக்கு வந்திருந்தவர்களை எல்லாம் புறங்கண்டு தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் மகாலட்சுமி. இந்தியாவின் சார்பாகச் சென்ற ஒரே பெண்ணும் இவர் தான்.
'என்கூட அப்பா, அம்மா யாரும் வரலை. பத்து நாட்கள் தனி ஆளா ஒன்பது பேரோட விளையாடினேன். டிஃபன்ஸ் ஆடறதைவிட ஸ்ட்ரைக்கிங் தான் எனக்குப் பிடிக்கும். எடுத்தவுடனேயே எதிராளியை பயமுறுத்திடணும். அப்பத்தான் அடுத்த மூவ் செய்றதுக்கு ரொம்ப நேரம் எடுத்துப்பாங்க. அதுக்குள்ள நாம தயாராயிடலாம். அப்படித்தான் நான் ஜெயிச்சேன்' என்று தன் வெற்றியின் ரகசியத்தைப் போட்டுடைக்கும் மகாலட்சுமி, ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். ஏழை தான் ஆனால் கோழை அல்ல என்று நிரூபித்திருக்கும் இது போன்ற சாதனைச் சிறுமிகளிடம் தான் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது. |
|
அரவிந்த் |
|
|
More
அரைநூற்றாண்டுக்குப் பிறகு விமானம் எப்படி இருக்கும்! காற்றிலேறி அவ் விண்ணையும் சாடுவார் குண்டு துளைக்காத ரயில் எஞ்சின்
|
|
|
|
|
|
|