Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
செப்டம்பர் 2008 : குறுக்கெழுத்துப்புதிர்
- வாஞ்சிநாதன்|செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeகுறுக்காக:
5. ஒரு வண்ண ஸ்வரமின்றி, பொறுப்பின்றிச் செலவழிப்பவன் (2)
6. கொப்பரை தலைசீவி நடுங்கினாலும் வெளியில் உறுதி தோன்ற பொழுதுபோக்கு (6)
7. சாய்த்துத் தள்ளிய விருந்தினரை கவனித்த துணையில்லை (4)
8. பாம்பை மயக்குவது மஹராஷ்டிர முதல்வர் குடும்பம் (3)
9. இறப்பதும் பிறப்பதுமென்ற சுழலில் சிக்கிய பூச்சி (3)
11. செய்யுள் வாசனை அறிந்த பெண்கள் உடுத்துவது? (3)
13. நித்தஞ் சம்பாதிக்காதவனிடம் அடைக்கலம் (4)
16. கபடமறியா நளபாகம் மற்ற மதுபானம் முன்னே வரும் (6)
17. வீங்கு கழி (2)

நெடுக்காக:
1. வருடா அடி ஆந்திரத்தில் பாய்கிறது (4)
2. தோன்றியது முடியாத உயர்ந்த பெண் பாதி துதிக்கை சுழற்றினாள் (5)
3. பல்வரிசை தாரில் காணப்படும் (3)
4. அந்தரத்தில் இரு நடுக்கூடம் புகுந்து ஆரம்பித்துவை (4)
10. ஞாபகத்தில் இல்லாமல் பேசுதல் புரிந்துகொள்ள முடியாது (5)
12. காற்று துள்ள ஆரம்பிக்காத பிள்ளை சாமர்த்தியசாலிதான் (4)
14. நூற்றுக்கு உட்பட்ட பந்தி கணவனின்றி இசைப்பாட்டில் இனிமை கூட்டும் (4)
15. எல்லோருக்கும் தென்னிந்தியப் பெண் (3)
குறுக்கெழுத்துப்புதிர் மற்றும் பிற சொல் விளையாட்டுகளையும் குறித்து ஒரு கூகிள் மடற்குழு தொடங்கப்பட்டுள்ளது. அம் மடற்குழுவில் இப்புதிர்களை முயலும் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறேன். சில சொற்களுக்கு வாசகர்களே குறிப்பு எழுதும் "போட்டியும்" அதில் நடைபெறுகிறது. அவ்வாறு ஒரே சொல்லுக்குப் பலரும் முன்வைக்கும் புதிர்க்குறிப்பில் சிறந்ததை எழுதியவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு அக்டோபர் 2008 தென்றல் குறுக்கெழுத்துப்புதிரில் மூன்று சொற்களுக்கு குறிப்பெழுதும் வாய்ப்பு (அவருடைய பெயருடன்) அளிக்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். kurukkumnedukkum@googlegroups.com என்ற குழுவில் இணைய விரும்புவோர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். சேர்ந்து கலந்து கொள்ள நேரமில்லாதவர் அம்மடல்களைப் படிப்பதற்குத் தடையேதுமில்லை.
vanchinathan@gmail.com

நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை
செப்டம்பர் 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@ tamilonline. com. செப்டம்பர் 15-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

ஆகஸ்டு 2008 புதிர் அரசிகள்/மன்னர்கள்


Share: 




© Copyright 2020 Tamilonline