|
|
|
1. ஒன்று முதல் ஒன்பது வரையான எண்கள் மீண்டும் வராமல், அவற்றைச் சிற்றிலக்கங்களாகக் கொண்ட எண்களைக் கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ, வகுத்தோ கூட்டுத்தொகை நூறு வருமாறு செய்ய வேண்டும். முடியுமா?
2. ஒருவரிடம் மொத்தம் 8100 டாலர் பணம் இருந்தது. அதில் மூன்றில் ஒரு பங்கை முதல் மகனுக்குப் பிரித்துக் கொடுத்தார். மீதித் தொகையில் மூன்றில் ஒரு பங்கை இரண்டாவது மகனுக்குப் பிரித்துக் கொடுத்தார். இவ்வாறு அவர் தொடர்ந்து தனது மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்தது போக எஞ்சிய 1600 டாலரை, தனது ஒரே பேரனுக்குக் கொடுத்தார் என்றால், அவருடைய மகன்களின் எண்ணிக்கை என்ன, ஒவ்வொருவருக்கும் கொடுத்த தொகை எவ்வளவு?
3. ராமுவிடம் சில புத்தகங்கள் இருந்தன. அவன் அவற்றை முறையே 3 புத்தகங்கள் வீதம் அடுக்கியதில் ஒரு புத்தகம் எஞ்சியது. அவ்வாறே 4, 5, 6 என அடுக்கினாலும் ஒரு புத்தகம் எஞ்சியது. ஆனால் 7 புத்தகமாக அடுக்கியதில் எதுவுமே மீதம் இருக்கவில்லை. அப்படியென்றால் ராமுவிடம் இருந்த புத்தகங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
4. 4736 - இந்த எண்ணுடன் எந்த எண்ணைச் சேர்த்தால் இது சதுர எண்ணாக மாறும்?
அரவிந்தன் |
|
விடைகள்
1. 986 -754 -132 = 100 123 - 45 - 67 + 89 = 100 47(3/6) + 52(9/18) = 100
2. தந்தையிடம் இருந்த மொத்தத் தொகை - 8100 டாலர். அதில் மூன்றில் ஒரு பங்கு = 8100/3 = 2700; முதல் மகனுக்குக் கிடைத்தது 2700 டாலர்; எஞ்சிய தொகை = 8100-2700 = 5400; அதில் மூன்றில் ஒரு பங்கு = 5400/3 = 1800; இரண்டாவது மகனுக்குக் கிடைத்தது = 1800 டாலர்; எஞ்சிய தொகை = 5400-1800 = 3600; அதில் மூன்றில் ஒரு பங்கு 3600/3 = 1200; மூன்றாவது மகனுக்குக் கிடைத்தது = 1200; எஞ்சிய தொகை = 3600-1200 = 2400; அதில் மூன்றில் ஒரு பங்கு = 2400/3 = 800; நான்காவது மகனுக்குக் கிடைத்தது = 800; எஞ்சிய தொகை = 2400-800 = 1600; பேரனுக்குக் கிடைத்தது = 1600 டாலர். ஆக மகன்களின் எண்ணிக்கை நான்கு. அவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட தொகைகள் முறையே 2700, 1800, 1200, 800.
3. புத்தகங்களின் எண்ணிக்கை 301 3 புத்தகங்கள் வீதம் அடுக்கியதில் 3 X 100 = 300 போக மீதம் எஞ்சி இருப்பது ஒன்று 4 புத்தகங்கள் வீதம் அடுக்கியதில் 4 X 75 = 300 போக மீதம் எஞ்சி இருப்பது ஒன்று 5 புத்தகங்கள் வீதம் அடுக்கியதில் 5 X 60 = 300 போக மீதம் எஞ்சி இருப்பது ஒன்று 6 புத்தகங்கள் வீதம் அடுக்கியதில் 6 X 50 = 300 போக மீதம் எஞ்சி இருப்பது ஒன்று 7 புத்தகங்கள் வீதம் அடுக்கியதில் 7 X 43 =301 மீதம் எதுவும் எஞ்சி இருக்கவில்லை; ஆகவே புத்தகங்களின் எண்ணிக்கை 301.
4. சேர்க்க வேண்டிய மிகக் குறைந்தபட்ச எண் = 25 4736 + 25 = 4761 4761 = 69 X 69 ஆகவே 4736ஐ சதுர எண்ணாக மாற்றச் சேர்க்க வேண்டிய மிகக் குறைந்த பட்ச எண் = 25.
|
|
|
|
|
|
|
|