தென்றல் இணையாசிரியர் அரவிந்த் சுவாமிநாதனுக்கு புதுக்கோட்டை இலக்கியப் பேரவை விருது மீண்டும் கவனம் பெறும் நீல பத்மநாபன் குடியரசு தின விருதுகள் யார் இவர்? வேலை வாய்ப்பு தரும் உடல்மருந்தியல் உற்பத்தி சான்றிதழ்க் கல்வி அரிசோனா தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்
|
|
|
மிச்சிகனின் ஆன் ஹார்பரில் வசிக்கும் கௌசல்யா சப்தரிஷியின் முதல் ஆங்கில நாவலான 'The TamBrahm Bride' வெளியாகியுள்ளது. பிரபல தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி அண்மையில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் இதன் முதல் பிரதியைக் கொடுக்க, சென்னை வரலாற்றாசிரியர் எஸ். முத்தையா அதைப் பெற்றுக்கொண்டார். கிழக்குப் பதிப்பகத்தின் 'Indian Writing' பிரிவு இதனை வெளியிட்டுள்ளது.
தமிழக பிராமணக் குடும்பங்களில் நடக்கும் பெண்பார்க்கும் படலத்தை (அதிலும் NRI என்றால் கேட்கவேண்டுமா!) நகைச்சுவையாகச் சித்திரிக்கும் இந்த நூலை எழுதியுள்ள கௌசல்யா பிறந்தது சென்னையில் என்றாலும் வளர்ந்தது டெல்லியில். கொலராடோ பல்கலைக்கழகத்தில் இதழியலில் எம்.ஏ. பெற்றுள்ள கௌசல்யா எழுதியவை வாஷிங்டன் டைம்ஸ், ஹிந்துயிசம் டுடே, இண்டியா அப்ராட் உட்படப் பல அமெரிக்க, இந்திய வெளியீடுகளில் இடம் பெற்றுள்ளன. முதல் நூல் வெளியீடே அமர்க்களமாக நடந்துவிட்ட உற்சாகத்தில் இருக்கிறார் கௌசல்யா.
இந்த நூலை வாங்க: http://nhm.tracwork.com/language/English
மதுரபாரதி |
|
- |
|
|
More