Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
தானாக ஓடிய சரக்கு ரயில்
இளமையில் கல்
முதியோர் புறக்கணிக்கப்படுவதைத் தடுக்கச் சட்டம்
விறுவிறுப்பான குஜராத் தேர்தல்
ஓயாத மருத்துவச் சர்ச்சை
- அரவிந்த்|ஜனவரி 2008|
Share:
Click Here Enlarge'திரைப்படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளை அனுமதிக்கக் கூடாது. சிகரெட், பான் போன்றவை உபயோகிப்பதைத் தடுக்க வேண்டும்' என்று அடிக்கடி மக்கள் நலனை முன்னிறுத்தித் திட்டங்களை அறிவிப்பவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ். இந்த முறை அவர், 'மருத்துவ மாணவர்கள் கட்டாயமாக கிராமப் புற சேவை செய்தாக வேண்டும். அதற்காக மருத்துவப்படிப்பு ஐந்தரை ஆண்டுகளிலிருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தப்படும்' என்று புதிய அறிவிப்பை வெளியிட, அது புதிய போராட்டத்துக்கு வித்திட்டுவிட்டது. இந்தியா முழுவதிலும் மருத்துவ மாணவர்கள் கல்விக்கால நீட்டிப்பை எதிர்த்து உண்ணாவிரதம், மறியல் என்று போராட்டத்தில் இறங்கி விட்டார்கள். 'நாங்கள் கல்வியை முடித்தபின் எங்களுக்கு கிராமப்புறத்தில் பணி நியமனம் செய்யுங்கள், நாங்கள் போகிறோம்' என்கிறார்கள் மாணவர்கள். இந்நிலையில், மாணவர்களைப் போராடுமாறு சில அரசியல் கட்சிகள் தூண்டி வருகின்றன என்று ராமதாஸ் அறிக்கை வெளியிட, கம்யூனிஸ்ட்டுகள் அதனை இல்லையென்று மறுக்க, பிரச்னை மேலும் சிக்கலானது. ஆனாலும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ மனை, டெல்லியில் இருக்கும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் (AIIMS) ஆகியவற்றின் நிர்வாகங்களில் புகுந்து அவர் செய்திருக்கும் குழப்பங்கள் நாட்டுக்கு நன்மையைத் தராது.
அரவிந்த்
More

தானாக ஓடிய சரக்கு ரயில்
இளமையில் கல்
முதியோர் புறக்கணிக்கப்படுவதைத் தடுக்கச் சட்டம்
விறுவிறுப்பான குஜராத் தேர்தல்
Share: 




© Copyright 2020 Tamilonline