Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சிறுகதை
ஆதங்கம்
யார் மனம் கல்?
சுமைதாங்கி
- தங்கம் ராமசாமி|ஜனவரி 2008|
Share:
Click Here Enlargeநுரை பொங்கும் காப்பியைப் பிள்ளையின் கையில் கொடுத்தாள் ஜானகி. ஏதோ சிந்தனையுடன் வாங்கிக் கொண்ட ரமேஷ் அம்மாவின் முகத்தை ஏறிட்டான். பார்க்கப் பரிதாபமாகவும் வியப்பாகவும் இருந்தது.

'என்னம்மா உன்னோட பிடிவாதம் எனக்குப் புரியவேயில்லை. நீ ஏன் அமெரிக்காவுக்கு வரமாட்டேன், கிராமத்திலேயே இருப்பேன்னு பிடிவாதமாய் இருக்கே? ஒரே குழப்பமாயிருக்கு' பேச்சிலே ஆதங்கம் தொனித்தது.

'நன்னாச் சொல்லு ரமேஷ். இந்த கிராமத்தில மாட்டையும் வச்சிண்டு வேலைக்காரியும் போட்டுக்காம, தண்ணி இழுத்து வாசல் கொல்லையெல்லாம் பெருக்கித் தெளிச்சு, வீடு பெருக்கி மெழுகி இதெல்லாம் அவசியமா? இல்லே தலையெழுத்தா? வயசான காலத்தில் ஹாய்யா இருக்கறதை விட்டுட்டு' உரத்த குரலில் கத்துகிறார் ராமசுப்பு. ஜானகியின் கணவர்.

'இதோ பாருப்பா நான் பதினேழு வயசில உங்கப்பாவைக் கல்யாணம் பண்ணிண்டு இந்த வீட்டுக்கு வந்தவ. அதிலேர்ந்து நாற்பது வருஷமா இரண்டு நாத்தனார், ஒரு கொழுந்தன், மாமியார், மாமனார்னு எல்லாருக்கும் செஞ்சு உழைச்ச கை இது. சும்மா சோபாவில உட்கார என்னால முடியாது. சாகற வரைக்கும் அது நடக்காது. ஆசைக்கு ஒரு நடை அமெரிக்கா வந்தோம் எல்லாம் பார்த்தாச்சு. இன்னும் என்ன இருக்கு. என்னை யாரும் குத்தம் சொல்ல வேண்டாம். வேணுமானா உங்கப்பாவை அழைச்சிண்டு போ. நா வேண்டாங்கல்லை' ஜானகி கண்டிப்பான குரலில் கூறினாள்.

'ஏதாவது மூளை கெட்டமாதிரி பேசாதே. பேச்சு இருக்கற அளவுக்கு உன் உடம்புல தெம்பு இருக்கோ? போன மாசம் சிவராத்திரியன்னிக்கு முழுப்பட்டினி இருந்துட்டு பிடிவாதமாக சத்துமாவைத் தின்னு ராத்திரியே மயக்கமா விழுந்தே. டாக்டர் வந்து பார்க்கற மாதிரி ஆயிடுத்து' பொருமுகிறார் ராமசுப்பு.

'ஏம்மா உன்னோட நல்லதுக்குத்தானே சொல்றோம். நானும், தம்பி பாஸ்கரும் நியூஜெர்சியில் பெரிய வீடா வாங்கிண்டு, கார் வசதியெல்லாம் பண்ணிண்டு செளகரியமாய் இருக்கறச்சே நீங்க ரெண்டு பேரும் இங்கே இருக்கறது பார்க்கறவாளுக்கும் பேச்சுக்கு இடமாகி விடாதா. எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் உனக்கு ஏன் புரியமாட்டேங்கறது? அப்பாகூட வரதுக்கு ரெடியாத்தான் இருக்கார். உனக்கு என்ன ஆசாரமோ விரதமோ போ... அங்கேயும் உன் இஷ்டப்படி இருக்கலாமே யார் வேண்டாங் கறது? கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் இருக்கப் பழகிக்கணும்.'

'ரமேஷ், வரவேண்டாங்கறது இல்லேப்பா. என்னால அங்கே குளிர்ல தவிச்சிண்டு நாள் கிழமைன்னு இங்கே செய்யற மாதிரி செய்ய முடியாம ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி இருக்கறது ரொம்பக் கஷ்டம். வேலை செய்யாம என்னால இருக்க முடியாது. என் ஜாதகம் அப்படி. ரொம்ப உடம்பு முடியாமப் போனா இருக்கவே இருக்கு. அப்போ வராம என்ன செய்யப் போறோம்' தீர்மானமாகக் கூறிவிட்டு உள்ளே போனாள்.

ராமசுப்புவுக்கு இரண்டு பிள்ளைகள். இருவருமே கல்யாணமாகி நியூஜெர்சியில் இருக்கின்றனர். மூத்தவன் ரமேஷ் கம்ப் யூட்டர் எஞ்சினியர். இளையவன் பாஸ்கர் சார்ட்டர்ட் அக்கெளண்டெண்ட். இரண்டு பேரும் அடுத்தடுத்த ஊர்களில் இருக்கின்றனர். இரண்டு வருஷத்துக்கு ஒருமுறை இந்தியா வந்து போவார்கள்.

'நீயே பாரு ரமேஷ், தினமும் காலையில நாலரை மணிக்கு எழுந்திருந்து வாசல் கொல்லை எல்லாம் தெளிச்சு மாங்கு மாங்குன்னு வேலை செய்யறா. மாடு கறக்கறதுலேர்ந்து எவ்வளவு வேலை செய்யறது! என்ன சொன்னாலும் கேக்கற தில்லை. ஒரு ஆளையாவது போட்டுக்கக் கூடாதா? உஹ¤ம். கேட்கவே மாட்டா.

'இப்பக்கூட பாரு பக்கெட் நிறைய சாணம். கேட்டா, பாய்லருக்கு உருண்டை பண்ணணுமாம். கர்மம். பாதி நாள் படபடப்பு, பிரஷர். வாட்டுகிற வெய்யில்ல சிவன் கோவில், பெருமாள் கோவில்னு பிரதோஷம், ராகுகால பூசை ஒண்ணுவிடாம அலையறா. எனக்கு ஒண்ணுமே புடிக்கலை போ' ராமசுப்பு கூறி முடிப்பதற்குள்...

'ஆரம்பிச்சாச்சா புராணத்தை! போதும் பேசினது. வாப்பா ரமேஷ் சூடா பொங்கலும், கொத்சும் பண்ணியிருக்கேன் சாப்புடு' ரமேஷின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போனாள் ஜானகி.

'அம்மா எனக்கு இப்ப ஒண்ணும் வேண்டாம். பசியேயில்லை. எதுக்கு உடம்பை வருத்திண்டு இதெல்லாம் செய்யறே? நேரத்துக்கு மருந்தெல்லாம் போட்டுக்கறியா? டாக்டர் செக் அப் எல்லாம் போயிண்டிருக்கிறயா? அது சரி, என்னம்மா இவ்வளவு மாவு கிளறி வச்சிருக்கே; வடாத்துக்கா! யாரும்மா கேக்கறா வடாம் எல்லாம். நீ ரொம்ப சிரமப்படுத்திக்கறே' வருத்தத்துடனும் சற்றுக் கோபத்துடனும் ரமேஷ் கூறினான்.

'நீயும் உங்கப்பா மாதிரியே என்னைக் கோவிச்சுக்கறே. உங்களுக்கு அமெரிக்காவில இதெல்லாம் கிடைக்காதே. கொடுத்தனுப்பத்தான் செய்யறேன். மாடியில பிழிஞ்சுடுவேன். நீ ஊருக்குப் போறதுக் குள்ள காய்ஞ்சுடும்.'

'ஐயோ அம்மா! என்ன நீ பேசறே. எங்களுக்கு இண்டியன் ஸ்டோர்ல கிடைக்காத சாமானே இல்லை. நீ ஏன் இப்படி கஷ்டப்படணும்? உனக்கு எப்படி சொல்றதுன்னே புரியலை. நீங்க ரெண்டு பேரும் உடனே யு.எஸ். வரணும். எங்களோட இருக்கணும். நான் விசாவுக்கு ஏற்பாடு செய்யப் போறேன் வேற வழியே இல்லை.'

'போப்பா சும்மா அங்கே வந்து சோபாவே கதின்னு உட்கார என்னால முடியாது. என்னவாவது உளறாதே. ஏதோ நீங்க ரெண்டு பேரும் அப்பா அம்மான்ற ஆசையா இருக்கீங்களே. அதுவே நாங்க செஞ்ச புண்யந்தான்.'

'அம்மா எனக்கு ஒரு ஐடியா தோணறது. பாஸ்கரும் ரொம்பச் சொல்லியிருக்கான். இந்த வீட்டை வித்துட்டு, சென்னையில சின்னதா ஒரு பிளாட் வாங்கிடலாம். பாக்கி பணத்தை பாங்க்ல போட்டுடலாம். வட்டியும் வரும். நானும் தம்பியும் யு.எஸ்.லேர்ந்து வந்தா தங்கறதுக்கு மாடர்னா வசதியாப் பார்த்து வாங்கிடறேன். நீயும் இனிமே இந்த மாடு கன்னுன்னு போராடிண்டு சிரமப்பட வேண்டாம் பாரு. அதுக்காவது நீ ஒத்துக்கறயா?'

'என்னப்பா இப்படி சடார்னு சொல்லிட்டே! ஒங்க தாத்தாவுக்கும் அப்பா காலத்து வீடு. நன்னா வாழ்ந்து ஆகி வந்த வீடு. இதைப் போய் விக்கறதாவது. பைத்தியக்காரத்தனமா இருக்கு' ஜானகி தொண்டை அடைக்கக் கூறினாள்.
'பின்னே என்ன ஒரு வழிக்கும் வர மாட்டேன்கறே. இப்படிப் பழைய வீடு ஆகி வந்தது, அது இதுன்னு சொல்லி கஷ்டப்படத்தான் வேணுமா? தேவையா?'

ராமசுப்பு குறுக்கிட்டார் 'நீ சொல்றது நல்ல பிளான்தான். எனக்குப் பூரண சம்மதம். உங்கம்மாவை எதுவும் கேக்காதே. எப்ப பாரு அவா வீட்டில கல்யாணம் இவா வீட்டில சீமந்தம்னு ஓடிண்டு உடம்பை ஓடா தேய்ச்சிக்கிறா. வயசாயிண்டிருக்கு.

மருமகளுடன் வெளியே கிளம்பின ஜானகியைக் கீழ் ·பிளாட் அம்மா வந்து அழைத்துப் போனார்கள். என்ன விஷயம் என்று அப்பாவும் பிள்ளையும் கீழே இறங்கி வந்தனர். டாக்சியில் ஒரு பெண்ணைத் தாங்கலாக ஏற்றினர்.
சென்னையில் எல்லாம் பிளாட்ல பக்கத்தில இருக்கறவங்களே யாருன்னு கண்டுக்க மாட்டாங்க. அப்பிடித்தான் இவளைக் கொண்டு குடி வைக்கணும். அதுதான் சரிப்பட்டு வரும். ஊர்காரங்களுக்கெல்லாம் உழைச்சுக் கொட்டிண்டு... நல்ல ஐடியா நீ சொன்னது. நாளைக்கே இந்த வீட்டை விற்க ஏற்பாடு செய்.'

'சரியப்பா நான் வீட்டுக்கு ஏற்பாடு செய்துடறேன். என் பிரெண்ட் ஒருத்தன் சென்னையில இருக்கான். அவன் மூலமா ஒரு ·பிளாட்டும் புக் பண்ணிடறேன். இன்னும் இரண்டு மூன்று மாதத்தில நீங்க அங்கே குடித்தனம் போட்டுடலாம். பாஸ்கரும் குழந்தைக்கு முடி இறக்க இந்தியா வரப் போறான். அவனும் உங்களுக்கு வேண்டியதைச் செய்து செட்டில் ஆகி விடலாம். அம்மா திருப்தியா?' ஜானகியை ஏறிட்டுப் பார்த்தான்.

'எனக்கென்னப்பா வந்தது என்னவோ செய். இருந்தாலும் இத்தனை வருஷமா வாழ்ந்த வீட்டை விக்கணுமான்னு மனசு கெடந்து அடிச்சுக்கறது' கண்களில் நீர் தளும்பத் துடைத்துக் கொண்டாள். 'வீணா சென்டிமெண்ட்ஸ் வேண்டாம். ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தாகணும்.

அடுத்த இரண்டு மாதங்களில் நங்க நல்லூரில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றில் இரண்டாவது பகுதியில் ஒரு வீடு புக் பண்ணி கிராமத்து வீட்டையும் விற்று விட்டார் ராமசுப்பு. பாஸ்கரும் அவன் மனைவி உஷாவும் வந்து இருந்து வீட்டுக்கு வேண்டிய சகல வசதிகளையும் செய்து விட்டனர்.

'அப்பாடா அம்மாவுக்கு இனிமே ஊருக்கு உழைக்க வேண்டாம். அக்கடா என்று வீட்டோடு இருக்கலாம். ஜாலியா செள கரியமா இருங்க' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இரண்டு நாளில் பாஸ்கர் யு.எஸ். கிளம்ப வேண்டும். மருமகளுடன் வெளியே கிளம்பின ஜானகியைக் கீழ் ·பிளாட் அம்மா வந்து அழைத்துப் போனார்கள். என்ன விஷயம் என்று அப்பாவும் பிள்ளையும் கீழே இறங்கி வந்தனர். டாக்சியில் ஒரு பெண்ணைத் தாங்கலாக ஏற்றினர். பாஸ்கர் என்ன எனக் கேட்க 'எம்மகதாங்க. பிரசவலி திடீர்னு எடுத்திடுச்சு பெரியவங்களா இருக்காங்களேன்னு உங்க அம்மாவைத் துணைக்கு அழைச்சிட்டுப் போறேன் டெலிவரி ஆனதும் வந்துடுவாங்க. எனக்கும் சமயத்துக்கு மனிதர்கள் யாரும் இல்லை' பயமும் கவலையுமாகக் கூறினாள் அந்த அம்மாள்.

'உஷா உள்ளே எல்லாம் வச்சிருக்கேன், சாப்பிடுங்கோ... நான் போயிட்டு வந்துடறேன்' காரில் ஏறினாள் ஜானகி.

அப்பாவும் பிள்ளையும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நின்றிருந்தனர். மறுநாள் காலையில் குழந்தை பிறந்த செய்தியுடன் வந்தாள் ஜானகி. அப்பாவும் பிள்ளையும் முகம் கொடுத்துப் பேசவேயில்லை. எல்லோரும் சாப்பிட ஆரம்பிக்கவும் டெலிபோன் வந்தது. கல்பாக்கத்தில் ராமசுப்புவின் தங்கைக்கு இருதய அறுவை சிகிச்சை, உதவிக்கு யாரும் இல்லை. உடனே ஜானகியை அனுப்பி வை. செய்தியைக் கேட்ட பாஸ்கர் திகைத்து வாயடைத்து நின்றான்.

'பாவம்டா அவளுக்கு யார் இருக்கா... அவ குழந்தைகளும் வெளிநாட்டில இருக்கா. நாம போய் இருக்க வேண்டாமா? நாளைக்கே உங்களை யு.எஸ். அனுப்பிட்டு நானும் அப்பாவும் கிளம்பறோம்.'

அப்பாவும் பிள்ளையும் ஒருவருக்கொருவர் பார்த்து விழித்தனர்.

அம்மா ஒரு சுமைதாங்கி. அவளுக்கு ஓய்ச்சல் என்பதே இல்லை என்ற பேருண் மையை உணர்ந்த பாஸ்கர் நீண்ட பெருமூச்சு விட்டான்.

தங்கம் ராமசாமி,
சைப்ரஸ், கலிபோர்னியா
More

ஆதங்கம்
யார் மனம் கல்?
Share: 


© Copyright 2020 Tamilonline