கடைசிக் குறிப்பு
நவம்பர் 2007 புதிரில் சில அடிப்படைத் தவறுகள் இருந்தன. கவனித்தவுடன், தென்றலுக்குத் எப்போதேனும் தொடர்பு செய்தவர்க்கெல்லாம் திருத்தத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தேன்.
அச்சுப் பிரதியை மட்டும் படிப்பவர்களுக்கு இத்திருத்தங்கள் கிடைத்திருக்காது. திருத்தப்பட்ட விடைகள் கீழே உள்ளன.
இம்மாதப் புதிரில் முன்பு குறிப்பிட்ட சிமனஸ் விதியைச் சற்றே மீறியிருக்கிறேன். இசையைப் பற்றிய குறிப்புகள் பற்றி ஒரு குறிப்பு. எனக்கும் இசையைப் பற்றித் தெரியாது. இந்த விளையாட்டில் இறங்கியிருப்பதால் இசையில் புழங்கும் சொற் களுக்கு விளக்கம் ஒன்றிரண்டு (சொல்லளவில்) தெரிந்து வைத்திருக்கிறேன். அதனால் இசையறியா தவர்க்கும் ஓரளவு வாய்ப்புள்ளவாறே குறிப்புகளை அமைத்திருக்கிறேன்.
மற்றபடி இம்மாதப் புதிரின் முதற் குறிப்பை முதலில் வைத்ததற்குத் தடையில்லை என்று எண்ணுகிறேன்!
vanchinathan@gmail.com
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை டிசம்பர் 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. டிசம்பர் 25க்குப் பிறகு, விடைகளை www.tamil online.com என்ற சுட்டியில் காணலாம்.
நவம்பர் 2007 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்குறுக்காக: 5. உளி 6. பனிக்கட்டி 7. அதர்ம 8. போர்வை 9. திருகு 11. புகல் 13. விக்கல் 16. சிறகொடிந்த 17. வடு
நெடுக்காக: 1. அளிந்த 2. சபர்மதி 3. மக்கு 4. இட்டார் 10. குவிந்தகை 12. கற்றது 14. கருவறை 15. குடிசை
புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது
www.tamilonline.com/thendral/PuthirHelp.aspx என்ற வலைத்தளத்தையோ பார்க்கவும்.
நவம்பர் 2007 புதிர் அரசிகள்1. ஹேமா இலக்குமிநாராயணன், அட்லாண்டா
2. ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ·ப்ரீமோண்ட், கலி.,
3. முரளி ஸ்வாமிநாதன்,
சரியான விடை அனுப்பிய மற்றவர்:குன்னத்தூர் சந்தானம், சென்னை
இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.