டிசம்பர் 2007 : குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்காக

5. கடைசிக் குறிப்பு (2)
6. ஒரு நாட்டுப்புறக் கலை நிலை கொண்ட கார மாற்றம் (6)
7. நகரம் காட்டுப்புறத்தைச் சேர்ந்த மண்ணோடு ஒட்டிச் செல்பவை (4)
8. பாதி அழுகியதால் நறுமணம் பரப்பும் (3)
9. ஜலதோஷத்தால் அவதியுற மது மயக்கத்தில் வாயைத் திறக்காமல் ஒப்புதல் (3)
11. தாளாத ஆசை ஸரி2க3பத2ஸ, ஸத2பக3ரி2ஸ-வில் ஜன்யம் (3)
13. எட்டாத் தொலைவில் சுற்றினாலும் கெப்ளரின் கணக்கில் தப்பவில்லை (4)
16. தலையுள்ளே பதம் ஆடியதில்லை! (6)
17. சன்னியாசியிடம் கெஞ்சிக் கேள் (2)

நெடுக்காக

1. பக்தர் எவெரென்று கேட்பதற்கு முன்பே தாக்கு (4)
2. நலம்தானா? உனது சுழியின்றி இன்பத்தைத் தருவது (5)
3. காவிரி இங்கே காணாமல் போனதென்று காவல்நிலையத்தில் முறையீடு? (3)
4. கட்டுப்பட்டு நடுக் கடல் அமிழ்ந்த ஆடை (4)
10. வாசமலர் சந்தோஷம் அடைய இடையில்லா பூதம் ஏறி வந்தது (5)
12. பழமொழியைப் பின்பற்றுபவர் கட்டுவதில் மடிப்புகளிருக்காதோ? (4)
14. முழுமையில்லாக் கணினியால் சீரமைக்கப்பட்டாலும் பாடுவதற்கு முழுமையானது (4)
15. அமர்த்யா சென்னுக்குப் புகழ் தந்த பரிசு (3)

புதிர் விடைகள் அடுத்த மாத (ஜனவரி 2008) இதழில் வெளிவரும்.

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

கடைசிக் குறிப்பு

நவம்பர் 2007 புதிரில் சில அடிப்படைத் தவறுகள் இருந்தன. கவனித்தவுடன், தென்றலுக்குத் எப்போதேனும் தொடர்பு செய்தவர்க்கெல்லாம் திருத்தத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தேன்.

அச்சுப் பிரதியை மட்டும் படிப்பவர்களுக்கு இத்திருத்தங்கள் கிடைத்திருக்காது. திருத்தப்பட்ட விடைகள் கீழே உள்ளன.
இம்மாதப் புதிரில் முன்பு குறிப்பிட்ட சிமனஸ் விதியைச் சற்றே மீறியிருக்கிறேன். இசையைப் பற்றிய குறிப்புகள் பற்றி ஒரு குறிப்பு. எனக்கும் இசையைப் பற்றித் தெரியாது. இந்த விளையாட்டில் இறங்கியிருப்பதால் இசையில் புழங்கும் சொற் களுக்கு விளக்கம் ஒன்றிரண்டு (சொல்லளவில்) தெரிந்து வைத்திருக்கிறேன். அதனால் இசையறியா தவர்க்கும் ஓரளவு வாய்ப்புள்ளவாறே குறிப்புகளை அமைத்திருக்கிறேன்.
மற்றபடி இம்மாதப் புதிரின் முதற் குறிப்பை முதலில் வைத்ததற்குத் தடையில்லை என்று எண்ணுகிறேன்!

vanchinathan@gmail.com

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை டிசம்பர் 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. டிசம்பர் 25க்குப் பிறகு, விடைகளை www.tamil online.com என்ற சுட்டியில் காணலாம்.

நவம்பர் 2007 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

© TamilOnline.com