அப்பாவின் முடி வேதம்
|
|
பிறவிப் பயன் |
|
- |ஜூலை 2003| |
|
|
|
பட்ட மரம் துளிர்க்கும் சுட்ட புண்ணும் ஆறும் பரந்த வானும் சுருங்கும் - ஆனால் பிரிந்த உயிர் திரும்புமா?
நிலாவை வென்று விண்வெளியில் நடந்தான் செவ்வாயில் நீரைக் கண்டு களித்தான் அச்சாக ஆடுகள் அடுகடுக்காய் படைத்தான் - ஆனால் மண்ணில் மரித்த மனிதனை மீட்டானா? |
|
கல்வியும் செல்வமும் வருவது எதுவரை? அதிகாரம் ஆணவம் ஆளுவது எவரெவரை? ஆட்டிவைப்பவன் நம் மேலே இருக்க நீ என்ன? நான் என்ன? நீடித்து இங்கே நிலையாய் நிற்பது தானென்ன? - எனவே இந்தப்பிறவி அரிதென அறிந்திடு இருக்கும் வரையில் இனிதே வாழ்ந்திடு இதயத்தில் மனித நேயத்தை வளர்த்திடு எங்கும் எதிலும் நல்லதே கண்டிடு - பிறவிப் பயனை பின் வருவோர்க்கு உணர்த்திடு. |
|
|
More
அப்பாவின் முடி வேதம்
|
|
|
|
|
|
|