|
|
கற்பனைக் கெட்டாத உயரத்தில் வானில் கல்பனா செய்தனள் விண்வெளி ஆராய்ச்சி புவிக்கு அவள் திரும்பிவிட்டால் போய்விடும் இன்றோடு நமது ஆட்சி நூறுகோடி இந்தியர் பெறுவர் மாட்சி வையகம் பாடிடும் இவளது புகழ்ச்சி எழுவரும் இறங்கினால் இதிகாசம் உருவாகும் விண்ணுலக இரகசியம் வேரோடு வீழுமென வானவர் செய்தனரோ சூழ்ச்சி!!
விண்கலம் மண்ணோக்கி புறப்பட கண்ணை கசக்கி கண்னியில் கண்டனர் நாடே போற்றும் நாசா விஞ்ஞானிகள் கூடாது இம்முமுயற்சி திருவினையாகவென கூடிச்சதி செய்ததோ இயற்கை! கலம் சில நொடிகளில் கரைசேரும் களிப்புடன் வெற்றியே என நினைக்க வெடித்துச் சிதறிய விண்கலக் காட்சி விட்டகலுமோ மனதை! அய்யகோ என்னே அதிர்ச்சி!! |
|
கல்லுள் தேரைக்கு நீர் தந்து கருவில் உருவுக்கு உயிர் தந்து மண் மரத்துக்கும் மழை தந்து காலம் காலமாய் காத்தவன் இன்று ஆலகாலமாய் ஆனது அடுக்குமா?
வடுவூர் கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|