ராதா கல்யாண உற்சவம் 'அம்மா' மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம் 'சங்கீத சாகரா' டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா வாசிங்டன் வட்டாரத்தில் திருக்குறள் கருத்தரங்கம் சற்குரு வித்யாலயாவின் ஆண்டு விழா மிசெளரி தமிழ் சங்கம்: பட்டிமன்றம் ஃப்ரீமாண்டில் சிவாவிஷ்ணு ஆலய கும்பாபிஷேகம்
|
|
நிருத்யாஞ்சலி தியாகராஜரின் பஞ்சரத்தினக் கீர்த்தனை நாட்டிய நாடகம் |
|
- சரஸ்வதி தியாகராஜன்|ஜூலை 2006| |
|
|
|
நிருத்யாஞ்சலி நடனப்பள்ளியினர் சென்ற மாதம் Plainsboro Community Middle School, Plainsboro New Jerseyயில் தியாகராஜரின் பஞ்சரத்தினக் கீர்த்தனை நாட்டிய நாடகத்தை வழங்கினர். கலைமாமணி ரம்யா ராம்நாராயண் அவர்கள் வடிவமைத்திருந்தார். இதில் இவருடன் 16 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர். இம்மாதிரி புதுமையான நாட்டிய நாடகத்தை வடிவமைத்து அரங்கேற்றி திறம்பட செய்துள்ளதை CMNAவின் தலைவர் டாக்டர் பி.என்.அருணா அவர்கள் பாராட்டினார்.
அபிநயம் கலந்த நிருத்யத்துடன் அளித்த இந்த நிகழ்ச்சி மிகுந்த மனநிறைவு தந்ததுடன் அருமையாகவும் இருந்தது. கலைமாமணி ரம்யா ராம்நாராயண் அவர்கள் தனித்து ஆடிய 'சாதிஞ்சென', 'எந்தரோ மகானுபாவலு' என்ற இரு கீர்த்தனங்களுக்கான நடனங்களும் அற்புதம். 'சாதிஞ்சென' என்ற கீர்த்தனத்திற்கு இவர் ஆடிய அழகு இந்த கலையில் இவருக்கு உள்ள ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தியதுடன் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வெளிப்படுத்தியது. ரசிகர்களின் கரகோஷமே நிருத்யாஞ்சலி நடனப் பள்ளியினரின் திறமைக்கு சான்று. இந்த நிகழ்ச்சியில் திரு உபேந்த்ர சிவுகுலா, ப்ளெயின்பரோவின் மேயர் திரு பீட்டர் கான் டு, வெஸ்ட் வின்ஸர் மேயர் திரு சிங்-ஃபூ ஹ்ஸே மற்றும் வெஸ்ட் வின்ஸர் பள்ளி நிர்வாகத்தின் தலைவர் திரு ஹேமந்த் மரதே ஆகியோரை இந்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினர் மேற்சபை உறுப்பினர் (Senator) ராபர்ட் மெனெட்டெஸ் கெளரவித்தார். |
|
கலைமாமணி ரம்யா ராம்நாராயண் அவர்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும் இந்த பஞ்சரத்தின கீர்த்தனங்களில் உள்ள இனிமையும், சொற்களின் ஆழமும் இவற்றை நாட்டிய நாடகமாக வடிவமைக்க அடிகோலியதாக கூறினார். மேலும், ஓஇவற்றை நடனக்கலையின் மூலம் எடுத்து சொல்லும் போது இந்த கீர்த்தனங்கள் அதிக அளவில் மக்களை சென்று அடைய முடிகிறதுஔ என்றார்.
தமிழில் சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
ராதா கல்யாண உற்சவம் 'அம்மா' மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம் 'சங்கீத சாகரா' டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா வாசிங்டன் வட்டாரத்தில் திருக்குறள் கருத்தரங்கம் சற்குரு வித்யாலயாவின் ஆண்டு விழா மிசெளரி தமிழ் சங்கம்: பட்டிமன்றம் ஃப்ரீமாண்டில் சிவாவிஷ்ணு ஆலய கும்பாபிஷேகம்
|
|
|
|
|
|
|