வளைகுடாவில் ஒய்.ஜீ. மகேந்திரனின் இரட்டை மகிழ்ச்சி ஸ்ருதி ஸ்வர லயாவின் கோடை பிரயாணம் (Summer Tour) அன்னப்பூர்ணா, ஷாலினி அரங்கேற்றம் அரங்கேற்றம் - கல்பா விசுவநாதன் டெலாவர் தமிழ்ச் சங்கத்தின் திருமறைப் பாடல் கச்சேரி! சன்தீப் நாராயணனின் அநாயாசமான சஞ்சரிப்புகள்
|
|
சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம் |
|
- ஷகிலா பானு .N|ஆகஸ்டு 2006| |
|
|
|
சுவாமி சுகபோதானந்தா அவர்கள் ஜூன், ஜூலை மாதத்தில் சான் ·ப்ரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் பல சொற்பொழிவு மற்றும் குழுவாக மலை ஏறும் நிகழ்ச்சிகளை (hiking) வழங்கினார்.
சன்னிவேல் சனாதன தர்ம கேந்திராவில் சுவாமி சுகபோதானந்தா "சிறப்பான வாழ்வில் - பகவத் கீதையின் பங்கு" - Personal Excellence through Bhagavad Gita என்பது பற்றி உரையாற்றினார்.
நம் எல்லோருக்கும் தெரிந்த விதிமுறை - Law of cause and effect. நாம் பரீட்சையில் மார்க் எடுக்க வேண்டுமானால் நன்றாகப் படிக்க வேண்டும் - இது மாதிரியான முயற்சியும் விளைவும் சேர்ந்து வரும் விதிமுறை.
நம் அனைவருக்கும் அவ்வளவாக பிடி படாமல் இருக்கும் விதிமுறை - Law of blessing. நமது முயற்சிக்கும் முன்பே பலன் நம்மைத் தேடி வரலாம். நமது ஒத்துழைப்பும், ஒரு திறந்த மனப்பான்மையும் இருந்தால் நமது வாழ்வில் இந்த விதிமுறை இயங்க ஆரம்பிக்கும் - என்பது.
இதற்கு அர்த்தம், ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கிக் கொண்டு கடவுளின் அனுகிரகத் தால் இந்தக் குலுக்கலில் நான் லட்சாதிபதி யாகி விடுவேன் என்று வேலையை ராஜினாமா செய்து விட்டு வருவது அல்ல.
அது நமது வாழ்வின் மிகப்பெரிய அடி என்று நாம் நினைத்திருந்தது - சில காலத்தில் மிகச் சிறப்பான அதிர்ஷ்டமாக மாறிவிடுவது - மாதிரி. மிகப் பயந்திருந்த வேலை நீக்கம் சிறப்பான வரவேற்புள்ள ஒரு புதுக் கம்பெனிக்கு நம்மை முதலாளியாக மாற்றியது போல. இதைத்தான் Law of blessing என்பது. இன்னும் சிறிது விளக்க வேண்டுமானால் இந்த பிரபஞ்சத்திற்கும் நமக்கும் உயிர்க் கொடி போன்று ஒரு தொடர்பு இருக்கிறது என்பதையும், நமது வாழ்வில் நாம் மேலே மேலே உயர்ந்து செல்ல இயற்கை நமக்கு எல்லா வழிகளையும் காட்டுகிறது என்பதை யும் உணருவது ஆகும்.
நாம் வாழ்வில் இரண்டு முறைகளில் இயங்கலாம். ஒன்று - கீ கொடுத்த பொம்மை போன்று - ஒரு இயந்திரத் தனத்துடன் நாம் இயங்கலாம் - இதனை இயந்திர மையம் - என்று கூறலாம்.
இரண்டாவது நாம் செய்யும் ஒவ்வொரு வேலையையும் நமது முழு கவனத்தோடு, விழிப்புணர்வோடு செய்வது. இதனை காந்த மையம் - என்று கூறலாம்.
நாம் நமது வாழ்க்கையில் சிறிது சிறிதாக இந்த காந்த மையத்திலிருந்து செயல் பட ஆரம்பித்தோமானால் Law of blessing-ஐ உணர ஆரம்பிப்போம் என்கிறார் - சுவாமிஜி.
மௌவுண்ட்டன் வியூவில் உள்ள EastWest Bookstore-ல் சுவாமிஜி தனது விற்பனையில் சாதனை படைத்த "புதிய கோணத்தில் வாழ்க்கையை எண்ணிப் பார்" (Looking at Life differently) - புத்தகத்தைப் பற்றி உரை யாற்றினார். (இந்தப் புத்தகம் தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழிகளிலும் கிடைக்கிறது.)
Worry management, anger management, hurt management - கவலை, கோபம், மனக்காயம் இவை நம்மை கட்டுப் படுத்தாமல், இவற்றை நம் கட்டுக்குள் வைப்பது எப்படி என்று ஒரு மினி வாழ்க்கை கலை போதனை செய்து விட்டார் - இந்த சுகபோதானந்தா சுவாமிஜி அவர்கள். |
|
கவலை - என்பது நாம் சாய்வு நாற்காலியில் எப்போதும் ஆடிக் கொண்டே இருப்பதைப் போன்றது என்கிறார். சாய்வு நாற்காலியில் ஆடும் போது நாம் ரொம்ப பிஸியாக இருப்பதாக உணருவோம். ஆனால் இருந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட நகர்ந்து இருக்க மாட்டோம். கவலைப் பட்டு நம் நேரத்தைக் கடத்தும் நேரத்தில் இது தானே நடக்கிறது. இந்த worry energy - நம்மை sucking energy - என்பதைப் புரிந்து சூழ்நிலையை எதிர் கொள்ள நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். நமது காருக்கு இன்ஸ¥ரன்ஸ¥ம் எடுக்காமல் விபத்தானால் என்ன செய்வது என்றும் கவலை பட்டுக் கொண்டே இருப்பது யாருக்கு நன்மை கொடுக்கும் - நீங்களே சொல்லுங்கள்.
பலபேருடைய கவலை "தனக்கு பொசுக் என்று கோபம் வந்துவிடும்" - என்பது. சுவாமிஜி கூறுகிறார் - சூழ்நிலைக்கு ஏற்ற விகிதத்தில் கோபம் வருவது - சரியான கோபம். மாறான விகிதத்தில் வரும் கோபம் - தவறான கோபம். சோகமும், கோபமும் - ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஏதோ கடந்த காலத்தின் சோகம் இன்னும் உங்கள் மனத்தை அழுத்திக் கொண்டிருப்பது - இந்த மாறான விகிதத்தில் வரும் கோபத்திற்கு காரணம். அது என்ன என்பதை அறிந்து, அதை நிவர்த்திக்க முயற்சி செய்யச் சொல்கிறார், சுவாமிஜி.
மனக்காயம் - வருவதற்கு முக்கிய காரணம் - நாம் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு எதிர் பார்ப்பு வைத்திருப்பது. அந்த எதிர்பார்ப்பு கை கூடாத போது, அது மனக்காயமாக உருமாறுகிறது. மன்னிக்கும், ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உங்கள் மனக்காயத்திற்கான மிகச்சிறந்த மருந்து.
தினசரி - தியானத்தில் ஈடுபடுவது, நல்ல சத்சங்கங்களில் பங்கு பெறுவது - இவை யெல்லாம் நாம் வாழ்வில் மிகச்சிறந்த விழிப்புணர்வோடு, காந்த மையத்திலிருந்து நம்மை இயங்க வைக்கும்.
Prasanna Trust-ன் சத்சங்கங்கள் மாதம் இருமுறை bayarea வில் நடைபெறுகிறது. இதில் தியானம், சுவாமிஜியின் பல தலைப்புகளில் வந்த வீடியோக்கள் - முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கு எந்த கட்டணமும் கிடையாது. இதன் நேர விபரங்கள் Life-USA-Chapter - yahoo groupல் வெளியிடப் படுகின்றன. இதில் உறுப்பினராவதற்கு life-usa-chapter-subscribe@yahoogroups.com என்று empty mail அனுப்பினால் போதுமானது. சுவாமிஜியைப் பற்றி மேலும் விபரம் அறிய: www.swamisukhabodhananda.org
N. ஷகிலா பானு |
|
|
More
வளைகுடாவில் ஒய்.ஜீ. மகேந்திரனின் இரட்டை மகிழ்ச்சி ஸ்ருதி ஸ்வர லயாவின் கோடை பிரயாணம் (Summer Tour) அன்னப்பூர்ணா, ஷாலினி அரங்கேற்றம் அரங்கேற்றம் - கல்பா விசுவநாதன் டெலாவர் தமிழ்ச் சங்கத்தின் திருமறைப் பாடல் கச்சேரி! சன்தீப் நாராயணனின் அநாயாசமான சஞ்சரிப்புகள்
|
|
|
|
|
|
|