Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | பொது | விளையாட்டு விசயம் | தகவல்.காம் | குறுக்கெழுத்துப்புதிர் | சமயம் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
சினிமா சினிமா | மாயாபஜார் | சிறுகதை | நேர்காணல்
போகிற போக்கில்
Tamil Unicode / English Search
நேர்காணல் - போகிற போக்கில்
திரைப்பட நடிகர் நாசர்
- சங்கர்|பிப்ரவரி 2001|
Share:
Click Here Enlarge'சென்னை ஆன் லைன்' நிறுவனத்திற்கு வருகை தந்த திரைப்பட நடிகர் நாசர், வலைவாசிகளின் கேள்விகளுக்குச் சளைக்காமல் பொறுமையோடு பதிலளித்தார். சுவையான அந்த உரையாடலில், சுவாரஸ்யமான பகுதிகளின் தொகுப்பு...

கனேஷ்: தங்களின் குழந்தைப் பருவம் குறித்து?

நாசர்: செங்கல்பட்டு அருகில் ஒரு கிராமத்தில்... எல்லாக் குழந்தைகளைப் போன்று ஜாலியாக விளையாட்டுதான்... சிறப்பாக ஏதுமில்லை.

கவி : உங்கள் குடும்பத்தைப் பற்றி?

நாசர்: நான், எனது மனைவி, 3 மகன்கள்.

குமார்: நீங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவரா?

நாசர்: ஆமாம்பா... ஆமாம். சென்னையிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள செங்கல்பட்டில் பிறந்தவன் நான்.

வித்யா: தங்களின் கல்வித் தகுதி?

நாசர்: பள்ளியிறுதிப் படிப்பு முடித்த பின்னர் நடிப்புப் பள்ளியில் பயிற்சி.

மில்லு: நடிப்பு தவிர்த்து வேறு துறையில் ஈடுபாடு? (ஓவியம்... அது, இது!)

நாசர்:படிக்கவும், எழுதவும் பிடிக்கும். நாடகங்களும் பிடிக்கும்.

குமார்: நீங்கள் காதல் வயப்பட்டதுண்டா?

நாசர்: ஆம்...கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு நடந்த காதல் திருமணம் எங்களுடையது.

கனேஷ், குமார்: கமலுடன் பணியாற்றிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

நாசர்: நம்மிடையே உள்ள மிகச் சிறந்த நடிகர்களில் கமலும் ஒருவர். மிகுந்த விஷய ஞானம் உள்ளவர். அவரோடு சேர்ந்து நடிப்பதென்பதே சவாலான விஷயம்தான்.

கவி: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து...

நாசர்: மகத்தான கலைஞர். எங்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறார்.
Click Here Enlargeகவி: 'டாக்டர்.அம்பேத்கர்' திரைப்படத்தில், மம்முட்டிக்குப் பதிலாக உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால்?

நாசர்: ஆனந்த அதிர்ச்சி அடைந்திருப்பேன். எனது அத்தனை திறமையையும், உழைப்பையும் செலுத்தி நடித்திருப்பேன்.

ஸ்ரீதர்: நடிகர்களால்தான் சிறந்த அரசியல்வாதியாக முடியுமா? அதை தமிழகத்தின் தலைவிதி எனக் கருதுகிறீர்களா?

நாசர்: எனக்கு அதில் நம்பிக்கையில்லை. பிரபலமாக இருப்பதால் மட்டுமே தலைவராக முடியாது. கணனி வல்லுநர் கூட அரசியல் தலைவராகலாம். ஆனால், அதற்காக நிறைய சிரமப்பட நேரிடும். இன்றைய இளைஞர்கள் அரசியலை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.

சோமா: நீங்கள் சொல்வது தவறு நாசர். இளைஞர்கள் அரசியலைத் தீவிரமாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள்.

நாசர்: வாக்குரிமை என்பது நம் கையில் உள்ள சக்தி வாய்ந்த ஆயுதம். ஆனால், நம்மில் எத்தனை பேர் அதனை முறையாகப் பயன்படுத்துகிறோம்? ஏதாவதொரு கட்சியில் சேர்வதோ அல்லது ஓர் கொள்கையைப் பின்பற்றுவது மட்டுமோ அரசியலாகிவிடாது.

சோமா: வயதான அரசியல்வாதிகள் ஒதுங்கிக் கொண்டு, இளைஞர்களுக்கு வழிவிடலாமே.

நாசர்: நிச்சயமாக. உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

கனேஷ்: இதுவரை எத்தனை படங்களில் நடித்துள்ளீர்கள்?

நாசர்: சுமார் 190 படங்கள் என நினைக்கிறேன்.

கவி: எத்தனை மொழிகளில் நடித்துள்ளீர்கள்?

நாசர்: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி.

கவி: தமிழில் தற்போது நடித்து வரும் படங்கள்?

நாசர்: விரும்புகிறேன், சாமுராய் மற்றும் சிடிசன்.

கணேஷ்: உங்களோட மூக்கு எனக்கு மிகவும் பிடிக்கும்.

நாசர்: என்னுடைய மரபணுக்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

கார்த்திக்: எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நாசர்: நம்மிடையே உள்ள மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். தீவிரமான வாசித்தலை வெகுஜனங்களிடையே எடுத்துச் சென்றவர். ஏராளமான இளம் எழுத்தாளர்களைக் கவர்ந்து முன்னுதாரணமாக விளங்குபவர்.

மில்லியன்: சமீபத்தில் படித்த நாவல்?

நாசர்: கி.ராஜநாராயணனின் 'கோபல்ல கிராமம்'. திரைக்கதை வடிவமாக்கும் முயற்சிக்காகப் படித்து வருகிறேன்.

மில்லியன்: ஒரு புதினத்தை திரைக்கதையாக்குவது குறித்து... குறிப்பாகக் கதாபாத்திரங்கள்.

நாசர்: மிகச் சிரமமான பணி. சிலவற்றை நீக்கவும், சிலவற்றைச் சேர்க்கவும் வேண்டியிருக்கும். தமிழ் திரைப்படங்களில் மிக அரிதாகவே நாவல்கள் கையாளப்படுகின்றன.

எஸ்.டி: ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' நாவல் எப்படி இருக்கிறது?

நாசர்: பல கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.

மில்லு: 'பொன்னியின் செல்வன்' நாடகத்தில் வந்தியத்தேவன் பாத்திரம் தங்களுக்குத் திருப்தியளித்ததா?

நாசர்: நிச்சயமாக. நாடகத்திலிருந்து திரைப்படத்திற்கு வந்தவன் நான். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நாடகத்தில் நடித்தது மிகுந்த மகிழ்வளித்தது.

மில்லு: 'பொன்னியின் செல்வன்' படித்திருக்கிறீர்களா?

நாசர்: ஆம். படித்திருக்கிறேன்.

ரேம்போ: டெட்ராய்டில் உங்களுக்கோர் ரசிகர் மன்றம் தொடங்கட்டுமா?

நாசர்: வேண்டாம் ரேம்போ. இதுவரை எனக்கு ரசிகர் மன்றம் ஏதும் கிடையாது. நல்ல ரசிகன் என்பவன் சிறந்த படைப்பை மட்டுமே ரசிக்க வேண்டும். குறிப்பிட்ட நடிகருக்கு மட்டும் என்று தனது ரசனை வட்டத்தைக் குறுக்கிக் கொள்ளக் கூடாது.

தொகுப்பு: பா.சங்கர்
படங்கள்:ஆப்ரஹாம்
Share: 




© Copyright 2020 Tamilonline