|
எங்கள் குடும்பத்தில் 56 பேர்! - கௌசல்யா |
|
- தமிழ்மகன்|டிசம்பர் 2000| |
|
|
|
நீங்கள் ஏன் சென்னையிலேயே வீடு வாங்கித் தங்குவதற்கு முயற்சி செய்யவில்லை?
ஏங்கூட என் அப்பா அம்மா யாரும் வர மாட்டார்கள். வீடு வாங்கினாலும் அதைப் பார்த்துக்க ஆள் இல்லை. அதனால் வாங்கவில்லை. எங்க குடும்பம் கூட்டுக் குடும்பம். மொத்தம் 56 பேர். எல்லாரையும் சென்னைக்குக் கூட்டிக்கிட்டு வர முடியாது. நான் மட்டும் வந்துட்டுப் போறதுதான் சுலபம்.
உங்க அண்ணன் தம்பி யாரும் கூட வருவதில்லையா?
இல்லை. அவர்களுக்கு வேறு வேலைகள் இருக்கின்றன.
தமிழ்ச் சினிமாவில் நீங்கள் நடிக்க வந்ததைப் பற்றிச் சொல்லுங்கள்?
நான் ஒரு மாடலாக இருந்தேன். மாடலிங்ல உள்ள போட்டோவைப் பார்த்து என்னைச் சினிமாவுக்குத் தேர்வு பண்ணினாங்க. நான் முதலில் மலையாளத்தில்தான் நடித்தேன். பாலச்சந்திர மேனன் கூட முதல் படம் நடித்தேன். அந்தப் படத்தோட பெயர் ‘ஏப்ரல் நைன்டீன்த்’
‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தில் அந்தக் கதாபாத்திரத்தோட குரல் ரொம்ப நன்றாகயிருந்தது. நேரில் பார்க்காத காதலனுக்கு அவளுடைய குரல்தான் ஒரே அறிமுகம். அது உங்கள் சொந்தக் குரலா?
ஐயோ! கண்டிப்பாக இல்லை.
இப்ப வேற எந்தப் படத்திலாவது சொந்தக் குரலில் பேசியிருக்கீங்களா?
இல்லை. ஏன்னா என்னோட குரல் மைக் முன்னாடி போய் நின்னாலே மாறிடும். அது எப்படி என்று தெரியவில்லை. அதனால என் குரல் எனக்குப் பிடிக்காது.
‘வானத்தைப் போல’ படத்தின் வெற்றி விழாவில் பேசினீர்களே?
அதைக் கேட்டவர்கள் என்ன நினைத்தார்களோ?
சடகோபன் ரமேஷ் உங்களை காதலிக்கிறதாகக் குமுதத்தில் ஏப்ரல் முட்டாள் தின செய்தி வந்தது. எங்க எல்லாரையும் ஏப்ரல் பூல் பண்ணிட்டு வேற யாரையாவது காதலிச்சுக்கிட்டிருக்கீங்களா?/b>
இல்லை... (சிரிக்கிறார்) உங்களுக்குத் தெரியாமல் காதலிக்க முடியுமா?
திருமணம்?
அது ஏன் எல்லாரும் இதையே கேட்டுக்கிட்டு இருக்கீங்க. வேற கேள்வி ஏதாவது கேளுங்க. |
|
சரி அதையே கொஞ்சம் மாத்திக் கேட்கிறோம். அரேன்ஞ்டு மேரேஜா, லவ் மேரேஜா?
அதைப் பற்றி இப்போது ஒன்றும் சொல்ல முடியாது.
உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள். கூட்டுக் குடும்பம்னு சொன்னீங்களே...?
என் கூட மட்டும் 20 பேர் இருக்காங்க.
ஒரே வீட்டிலா?
ஆமாம். இப்ப இருக்கிற வீட்டில் இருபது பேர் இருக்கோம். எங்க அம்மா பாதி மராட்டி, பாதி கன்னடம். எங்கப்பா பெங்களூர். எங்கம்மா பிறந்து வளர்ந்ததெல்லாம் இலங்கையில். பாட்டி இலங்கையைச் சேர்ந்தவங்க.
அப்ப உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?
இந்தி, கன்னடம், ஆங்கிலம், தமிழ், கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் தெலுங்கு.
இப்ப என்னென்ன படத்தில் நடித்து வருகிறீர்கள்?
‘குங்குமப் பொட்டுக் கவுண்டர்’, ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘தாலி காத்த காளியம்மன்’... இன்னும் இரண்டு படங்கள் பேச்சு வார்த்தையில் இருக்கின்றன.
தமிழ்மகன் |
|
|
|
|
|
|
|