|
விருது எனக்கு இரண்டாம் பட்சம்தான்! - விக்ரம் |
|
- |டிசம்பர் 2001| |
|
|
|
உயிரைக் கொடுத்து நடித்திருப்பதாகச் சிலர் பேட்டியில் சொல்லுவார்கள். சிவாஜி, கமல்ஹாசன்.. போன்ற பல கலைஞர்கள் அப்படி பெயர் வாங்கினார்கள். விக்ரம் வித்தியாச மானவர். உயிரைக் கொடுத்து நடிப்பதென்றால் கிட்டத்தட்ட அதே அர்த்தத்தில்தான் அவரு டைய நடவடிக்கைகள்.
'சேது' படத்துக்காக பதினாறுகிலோ எடை யைக் குறைத்தார். மறுபடி உடம்பு தேறி நடிப்பதற்கு இரண்டு வருடம் என்ற போதிலும் இழப்பதற்குத் தயாராக இருந்தார். இப்போது 'காசி' படத்துக்காகப் பார்வை இழந்தவராக மாறியிருக்கிறார்.
'காசி' படப்பிடிப்பில் அவரைச் சந்தித்தேன்.
''மலையாளத்தில் 'வாஸந்தியும் லட்சுமியும் பின்னே நானும்' படத்தைப் பார்த்ததுமே இதைச் சாவலாக ஏற்று நடிக்க வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டேன். ஆனால் கண்ணின் கருமணியை மேலே சொருகியபடி என்னால் சில விநாடிகள்கூட இருக்கமுடியவில்லை. கலாபவன் மணி அந்த வேடத்தில் நடித்தி ருக்கும் போது நம்மால் மட்டும் முடியாதா என்ற எண்ணம் வைராக்கியமாக மாறியது. தினமும் அதே சிந்தனை, கண்ணை மேலே பொருந்திய நிலையில் தொடர்ந்து பயிற்சி செய்தேன்.
''அதன் பிறகுதான் டைரக்டர் வினயனை அணுகி இந்தப் படத்தின் தமிழ் வடிவத்தில் நான் நடிக்கிறேன்'' என்றேன்.
அவர் வேறொரு ஐடியா சொன்னார். கலாபவன் மணியைப் போல நீங்கள் சிரமப்பட வேண்டாம். பார்வையற்றவர்கள் போன்றே தோன்றுவதற்கு கான்ட்டாக்ட்லென்ஸ் கிடைப்பதாகச் சொன்னார். நான் அதற்கு உடன்படவில்லை. அப்படி நடித்தால் ரியலிஸ்டிக்காக இருக்காது என்று மறுத்துவிட்டேன்.
'படப்பிடிப்பில் வேறு ஒரு பிரச்சனை. கண்ணை மேலே சொருகிப் கொள்வதற்கு முடிந்தது. வசனம் பேச ஆரம்பித்ததும் கண் பாவை வெளியே தெரிய ஆரம்பித்தது. பார்வையில் கவனம் செலுத்தினால் வசனம் அவுட். வசனத்தில் கவனம் செலுத்தினால் பாவை 'அவுட்'.... சாரி ' இன்'... (சிரிக்கிறார்.)
'இதனால் முதல் நாள் காட்சியை மட்டும் எடுத்துவிட்டு விட்டுவிட்டோம். பயிற்சி.. பயிற்சி...பயிற்சி. தொடர்ச்சியான பயிற்சி யால்தான் படத்தில் சரளமாக நடிக்க முடிந்தது. கண் வலி பழகிப் போய் நடிக்கவும் தயாரான நிலையில் படம் பெரும்பகுதி முடிந்துவிட்டது. இன்னொரு இன்னிங்ஸ் நடிக்கச் சொன்னால் எனக்கு அவ்வளவு சிரமம் இருக்காது என்றே தோன்றுகிறது.''
'படம் முழுக்க பார்வையற்றவராக நடித்திருப் பதால் இரக்கத்துக்குரிய கதாபாத்திரமாக உங்களை ஏற்றுக் கொள்வார்கள். ஹீரோயி ஸத்தை எதிர்பார்த்து வருகிற மக்களுக்கு இது நிறைவைத் தருமா?''
''நிச்சயமாகத் தரும். நிம்மதியான கேரக்டர் தான். ஆனால் படம் நெடுக்க 'காசி' ஒரு ரியல் ஹீரோவாக இருப்பான்.'' |
|
'சேது' படத்துக்காக எடையைக் குறைத்தீர்கள். இதில் பார்வை யற்றவராக மாறியிருக்கிறீர்கள். எதற்காக இவ்வளவு ரிஸ்க்?
மக்களோட கைத்தட்டலுக்குத்தான். 'காசி' படத்தில் நடிக்கும் போது சிலர் சொன்னார்கள். 'நீங்கள் எவ்வளவுதான் உயிரைக் கொடுத்து நடித்தாலும் உங்களுக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பில்லை. இதன் மலையாளப் படத்துக்காக ஏற்கெனவே கலாபவன் மணி தேசிய விருது பெற்றுவிட்டார். ரீமேக்காக மீண்டும் விருது தருகிற வாய்ப்பில்லை' என்றார்கள். விருது கிடைத்தால் சந்தோஷப் படுவேன்தான். அதைவிட முக்கியம் மக்களின் மனத்தில் இடம்பிடிப்பது.
'சேது' படத்துக்காக ஒரு ஓட்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இழந்து அனுபவப்பட்டுவிட்டதால் விருதைப் பற்றி பெரிதாக யோசிக்கவில்லை.
'சேது'வுக்காக 16 கிலோவை எப்படிக் குறைத்தீர்கள்?
சாப்பிடறதை சுத்தமா நிறுத்திட்டேன். வெறும் ஜூஸ் குடிப்பேன். 'லோ பிரசர்' வந்து டாக்டரெல்லாம் ரொம்ப எச்சரிக்கை பண்ணினாங்க. நான் கேட்கவே இல்லை. படம் முடியற வரைக்கும் வைராக்கி யமா இருந்தேன்.
'கேஸ்ட அவே'னு ஒரு இங்கிலீஸ் படம். அதனோட ஹீரோ, தீவுல மாட்டிக்கிறமாதிரி கதை. சாப்பாடு கிடைக்காம உடம்பு இளைச்சுப் போறதா சீன் வரும். அதற்காக ரொம்ப சயின்டிபிக் மெத்தெட்ல, ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரி தேவைனு டாக்டர்கிட்ட கேட்டு அவங்க அட்வைஸ்படி 8 கிலோ எடையைக் குறைச்சார். ஆனா நாம லோக்கல் மெத்தெட்ல வயத்த காயபோட்டு நடிச்சோம். அதற்குப் பலனா இருபதாம் நூற்றாண்டின் படம் என்றெல்லாம் எழுதி பெருமை சேர்த்தார்கள்.
அது போதாதா?''
போதும் விக்ரம்! |
|
|
|
|
|
|
|