Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சமயம் | தகவல்.காம் | குறுக்கெழுத்துப்புதிர் | முன்னோடி | சிறுகதை
பொது | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | கதிரவனை கேளுங்கள் | சினிமா சினிமா | தமிழக அரசியல் | வாசகர் கடிதம் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
ஆசிரியர் பக்கம்
திட்டங்கள்... கனவுகள்...
- அசோகன் பி.|டிசம்பர் 2001|
Share:
ஒரு வருடம் - 12 இதழ்கள் - சில நூறு தொலைபேசி உரையாடல்கள் - பல்லாயிரம் மின்னஞ்சல்கள்; கொஞ்சம் பெருமை (கொஞ்சம் வெட்கம் - அதைப் பற்றி பின்னர்) நிறைய திட்டங்கள் கனவுகள்... Roller coasterride தான் போங்கள்!

ஒரு குறை பலமுறை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது! எழுத்து மற்றும் பிற பிழைகள் தோன்றுவது. இதற்கான முழுப் பொறுப்பும் அடியேனுடையதுதான். இந்தக் குறையைக் களைய மிகுந்த முனைப்புடன் செயல்படுவோம் என்று உறுதி கூறுகிறேன். There is no excuse but there are some explanations.

பெரும்பாலும் அமெரிக்காவிலிருந்து ஆர்வமுடைய நண்பர்கள் அவர்களது பொன்னான நேரத்தை அளிப்பதன் மூலம் மட்டுமே தென்றலுக்குச் செய்திகள்(?) வருகின்றன. இதனால் பலமுறை ஒரு குறிப்பிட்ட நாளை இன்று முதல் பக்கங்களை ஆரம்பிப்போம்; இன்றுவரை கதை, கட்டுரைகள் வரும் என்று அறுதியிட்டுச் சொல்ல இயல்வதில்லை. அதே போல் தென்றலுக்கு மிகவும் அத்தியாவசியமான விளம்பரங்களும் கடைசி நாட்கள் வரை வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் பல இதழ்கள் மீண்டும், மீண்டும் page layout மாற்ற வேண்டியிருக்கிறது. எவ்வாறாயினும் வரும் இதழ்களில் இந்தக் குறையைப் பெரிதும் களைவோம்.
உங்களில் பலர் பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள். உங்களது கல்லூரி/பள்ளி/ஊர் போன்றவை இன்று எப்படியிருக்கின்றன என்று ஒரு பகுதி ஆரம்பிக்க விரும்புகிறோம்.எனவே உங்கள் ஊர்/பள்ளி/கல்லூரி பற்றியும் அங்கு உங்களைக் கவர்ந்த, உதவிய, மறக்க முடியாதவர்களைப் பற்றியும் எழுதி அனுப்புங்கள். இன்று அவை/அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்று நாங்கள் விசாரித்தறிந்து கட்டுரை/படங்கள் வாயிலாக உங்களுடனும், உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம்.

மீண்டும் சந்திப்போம்.

உங்கள் ஆதரவை நாடும்...
பி.அசோகன்
டிசம்பர் 2001
Share: