Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2006 Issue
ஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம்
வளைகுடாவில் ஒய்.ஜீ. மகேந்திரனின் இரட்டை மகிழ்ச்சி
அன்னப்பூர்ணா, ஷாலினி அரங்கேற்றம்
அரங்கேற்றம் - கல்பா விசுவநாதன்
டெலாவர் தமிழ்ச் சங்கத்தின் திருமறைப் பாடல் கச்சேரி!
சன்தீப் நாராயணனின் அநாயாசமான சஞ்சரிப்புகள்
ஸ்ருதி ஸ்வர லயாவின் கோடை பிரயாணம் (Summer Tour)
- மானஸா சுரேஷ்|ஆகஸ்டு 2006|
Share:
Click Here Enlargeஜூலை 4, காலை 5 மணி. என் வீட்டில் குழுமி இருந்த எல்லோர் முகத்திலும் பரபரப்பு. ஏன்? ஸ்ருதி ஸ்வர லயாவின் முதல் சாலை பிரயாணம் தான்!. வட, தென் கலிபோர்னி யாவில் உள்ள கோவில்களில் மாணவர்களை பாடுவதற்கு, கடந்த சில மாதங்களாகவே, ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலாவதாக, ஜூலை 2ம் நாள், ஸான் ஹோசேயில் உள்ள லக்ஷ்மி கணபதி கோவிலில், பள்ளி மாணவர்கள் பாடினார் கள். இரண்டாவதாக, தென் கலிபோர்னியா வில் உள்ள கோவில்களில் பாடுவதற்கு தான், ப்ரிமாண்டிலிருந்து 5 குடும்பங்கள் கிளம்பி னோம். மற்ற குடும்பங்கள் மாலிபு கோவிலில் சந்திப்பதாக திட்டம். பிரயாணம் தொடங்கிய சற்று நேரத்தில், குழந்தைகள் தூங்கி விட்டனர். கார் ஸ்டிரியோவில், கர்நாடக சங்கீதம், கம்பீரமாக ஒலிக்க, அதனோடு Rock Music போட்டி போட, கேட்க (பார்க்கவும் தான்!) நன்றாக இருந்தது. மாலிபு கோவிலுக்கு, மதியம் வந்து சேர்ந்தோம்.

பேண்ட், சட்டையிலிருந்து பாவாடை, புடவை, பைஜாமா, குர்தா என மாறிய போது, கோவிலே விழாக் கோலம் பூண்டது!. வெங்கடேச சன்னிதியில் பாட தொடங்கி னோம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு குழுவும் தெய்வ சிந்தனை யுடன், அழகாக பாடினர். 2 1/2 மணி நேரம் போனதே தெரியவில்லை. மாலை ஐந்தரை மணிக்கு, கோவினாவில் உள்ள ஐக்கிய இந்து கோவிலுக்கு கிளம்பினோம். இலங்கை தமிழர்களால் நடத்தப்படும் இந்த கோவிலில் ஐம்பொன்னால் ஆன தெய்வங்கள் உள்ளன. குழந்தைகள் விளையாட மைதானமும் உள்ளது. எல்லோரும் சற்றும் தோய்வில்லாமல் பாடினர். கோவிலிலே, இரவு, சுவை மிக்க இலங்கை உணவு சாப்பிட்டோம். அங்கிருந்து, சில குடும்பங்கள், மீண்டும் மாலிபு கோவிலுக்கு வந்து தங்கினோம். குழந்தைகள் கண் அசர, பெரியவர்களுக்கு அப்போது தான் நேரம் துவங்கியது!. பாட்டுக்கு பாட்டு, Dumb Charades என்று அவர்கள் விளையாட, "இந்த வேலை செய், பாட்டு சாதகம் செய்" என்று கண்டிப்பாக பேசும் பெற்றோரின், மறு பக்கத்தை பார்த்தேன். காலையில், சாமி தரிசனம் செய்து, ஊருக்கு கிளம்பினோம். ஜூலை 10 அன்று, கான்கார்ட் சிவ முருகன் கோவிலில் பாடி, கோடை பிரயாணத்தை, முடித்தோம்.
இதை ஏற்பாடு செய்த அனுராதா சுரேஷக்கும், நன்றாக பாடிய மாணவர் களையும், மிருதங்கத்தில் தக்க பலம் கொடுத்த ரவீந்தர பாரதியையும், எல்லா கோவில் களுக்கும் குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்களையும், ஆதரவு தந்த கோவில் களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். பங்கு பெற்ற எல்லோரின் எண்ணம், இது மாதிரியான சாலை பிரயாணங்களை, அடிக்கடி நடத்த வேண்டும் என்பதே. அது வரை, இந்த பயணத்தை மனதில், அசை போட்டு கொண்டிருப்போம்!.

மானஸா சுரேஷ்
More

சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம்
வளைகுடாவில் ஒய்.ஜீ. மகேந்திரனின் இரட்டை மகிழ்ச்சி
அன்னப்பூர்ணா, ஷாலினி அரங்கேற்றம்
அரங்கேற்றம் - கல்பா விசுவநாதன்
டெலாவர் தமிழ்ச் சங்கத்தின் திருமறைப் பாடல் கச்சேரி!
சன்தீப் நாராயணனின் அநாயாசமான சஞ்சரிப்புகள்
Share: 




© Copyright 2020 Tamilonline