ஜூலை 4, காலை 5 மணி. என் வீட்டில் குழுமி இருந்த எல்லோர் முகத்திலும் பரபரப்பு. ஏன்? ஸ்ருதி ஸ்வர லயாவின் முதல் சாலை பிரயாணம் தான்!. வட, தென் கலிபோர்னி யாவில் உள்ள கோவில்களில் மாணவர்களை பாடுவதற்கு, கடந்த சில மாதங்களாகவே, ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலாவதாக, ஜூலை 2ம் நாள், ஸான் ஹோசேயில் உள்ள லக்ஷ்மி கணபதி கோவிலில், பள்ளி மாணவர்கள் பாடினார் கள். இரண்டாவதாக, தென் கலிபோர்னியா வில் உள்ள கோவில்களில் பாடுவதற்கு தான், ப்ரிமாண்டிலிருந்து 5 குடும்பங்கள் கிளம்பி னோம். மற்ற குடும்பங்கள் மாலிபு கோவிலில் சந்திப்பதாக திட்டம். பிரயாணம் தொடங்கிய சற்று நேரத்தில், குழந்தைகள் தூங்கி விட்டனர். கார் ஸ்டிரியோவில், கர்நாடக சங்கீதம், கம்பீரமாக ஒலிக்க, அதனோடு Rock Music போட்டி போட, கேட்க (பார்க்கவும் தான்!) நன்றாக இருந்தது. மாலிபு கோவிலுக்கு, மதியம் வந்து சேர்ந்தோம்.
பேண்ட், சட்டையிலிருந்து பாவாடை, புடவை, பைஜாமா, குர்தா என மாறிய போது, கோவிலே விழாக் கோலம் பூண்டது!. வெங்கடேச சன்னிதியில் பாட தொடங்கி னோம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு குழுவும் தெய்வ சிந்தனை யுடன், அழகாக பாடினர். 2 1/2 மணி நேரம் போனதே தெரியவில்லை. மாலை ஐந்தரை மணிக்கு, கோவினாவில் உள்ள ஐக்கிய இந்து கோவிலுக்கு கிளம்பினோம். இலங்கை தமிழர்களால் நடத்தப்படும் இந்த கோவிலில் ஐம்பொன்னால் ஆன தெய்வங்கள் உள்ளன. குழந்தைகள் விளையாட மைதானமும் உள்ளது. எல்லோரும் சற்றும் தோய்வில்லாமல் பாடினர். கோவிலிலே, இரவு, சுவை மிக்க இலங்கை உணவு சாப்பிட்டோம். அங்கிருந்து, சில குடும்பங்கள், மீண்டும் மாலிபு கோவிலுக்கு வந்து தங்கினோம். குழந்தைகள் கண் அசர, பெரியவர்களுக்கு அப்போது தான் நேரம் துவங்கியது!. பாட்டுக்கு பாட்டு, Dumb Charades என்று அவர்கள் விளையாட, "இந்த வேலை செய், பாட்டு சாதகம் செய்" என்று கண்டிப்பாக பேசும் பெற்றோரின், மறு பக்கத்தை பார்த்தேன். காலையில், சாமி தரிசனம் செய்து, ஊருக்கு கிளம்பினோம். ஜூலை 10 அன்று, கான்கார்ட் சிவ முருகன் கோவிலில் பாடி, கோடை பிரயாணத்தை, முடித்தோம்.
இதை ஏற்பாடு செய்த அனுராதா சுரேஷக்கும், நன்றாக பாடிய மாணவர் களையும், மிருதங்கத்தில் தக்க பலம் கொடுத்த ரவீந்தர பாரதியையும், எல்லா கோவில் களுக்கும் குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்களையும், ஆதரவு தந்த கோவில் களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். பங்கு பெற்ற எல்லோரின் எண்ணம், இது மாதிரியான சாலை பிரயாணங்களை, அடிக்கடி நடத்த வேண்டும் என்பதே. அது வரை, இந்த பயணத்தை மனதில், அசை போட்டு கொண்டிருப்போம்!.
மானஸா சுரேஷ் |