Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சிறப்புப் பார்வை | தமிழக அரசியல் | பயணம் | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | சமயம் | Events Calendar
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பிரட் டொக்லா
பிரட் இட்லி
பிரட் தயிர் வடை
அடேடே!! அடை வகைகள்
உரைப்பு அடை
அடை
தவலை அடை
பயிறு அடை
தேங்காய் அடை
பிரட்டில் பக்குவங்கள்
- சரஸ்வதி தியாகராஜன்|மார்ச் 2002|
Share:
Click Here Enlargeமாறிவரும் காலத்திற்கேற்ப நமது அன்றாட உணவு பழக்கமும் மாறிவருகிறது. அன்றைய காலம் போல் ஒவ்வொன்றையும் ரசித்து செய்வதற்குகூட நேரமில்லாமல் ஒவ்வொரு வரும் அங்கும் இங்கும் நம்முடைய தேவைக்காக அலைந்து கொண்டிருக்கிறோம்.

நாம் நம் இந்திய உணவு அதுவும் நமது தென்னிந்திய உணவு கிடைக்க சில நேரங்களில் ரொம்பவும்தான் போராட வேண்டியிருக்கிறது.

பிரட் இன்றைய அவசரமான உலகத்தில் நமக்கு காலை உணவாக மாறிவிட்டது. வெறும் பிரட்டாக சாப்பிடுவதற்கு சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். தோசை, இட்லி, உப்புமா, வடை என்று எதுவும் நமக்கு கிடைக்காமல் இருந்தாலும் நமக்கு அதிகம் கிடைக்கும் பிரட்டை கொண்டே அதை நாம் தயாரித்து சாப்பிடலாம்.

பிரட் பீஸா

தேவையான பொருட்கள்

பிரட் துண்டுகள் - 5
தக்காளி சாஸ் - 5 மேஜை கரண்டி
துருவிய சீஸ் - 5 மேஜை கரண்டி
மிளகு - 1/2 டேபிள் கரண்டி
பச்சை மிளகாய் - 3(பொடி பொடியாக நறுக்கியது)
கொடைமிளகாய் - 1(பொடி பொடியாக நறுக்கியது)
துருவிய வெங்காயம் - 2 டேபிள் கரண்டி
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை

ஒவ்வொரு பிரட் துண்டுகள் மீதும் 1 டேபிள் ஸ்பூன் அளவு தக்காளி சாஸை தடவி கொள்ளவும்.

பிறகு சீஸ், துருவிய வெங்காயம், மிளகு, பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒன்றாக தேவையான அளவு உப்பு சேர்த்து சாலட் போல் கலந்து வைக்கவும்.

ஒவ்வொரு பிரட் துண்டுகள் மீதும் மேற்குறிய சாலட்டில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வைக்கவும்.

பிறகு சிறிதளவு வெண்ணெய் எடுத்து ஒவ்வொரு காய்கறிகள் வைத்துள்ள பிரட் துண்டுகளின் மீதும் தடவவும்.

பிரட் அவனில் 350 டிகிரி உஷ்ணத்தில் பிரட் துண்டுகளை வைத்து அது பொன்னிறமாக வரும் வரை வேகவைக்கவும்.

பிறகு இதை முக்கோணவடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.

சரஸ்வதி தியாகராஜன்
More

பிரட் டொக்லா
பிரட் இட்லி
பிரட் தயிர் வடை
அடேடே!! அடை வகைகள்
உரைப்பு அடை
அடை
தவலை அடை
பயிறு அடை
தேங்காய் அடை
Share: 




© Copyright 2020 Tamilonline