Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2006 Issue
ஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
சிரிக்க சிரிக்க
அத்தைய நாய் கடிச்சிடுத்துப்பா!
பாத்ரூம் பாத்ரூம்
- |ஆகஸ்டு 2006|
Share:
Click Here Enlargeஎன் குடும்பத்தினர் அனைவரும் வட இந்தியாவை பார்ப்பதற்கு முதல் முறையாக பயணித்தோம். என் அம்மா ரயிலில் அமர்ந்த உடன் சக பயணி களிடம் சரளமாக ஹிந்தியில் பேசலானார். அதை பார்த்த எனக்கு மிகவும் பெருமையாகவும், சந்தோஷ மாகவும் இருந்தது. அந்த நிமிடமே டெல்லியில் விசாறிப்பதற்கு, பொருள் வாங்குவதற்கு அம்மாவைத்தான் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

நாங்கள் இன்று என்ன செய்வது நாளை என்ன செய்வது என்று பட்டியலிட்டுக் கொண்டோம். நாங்கள் உறவினர் வீட்டில் தங்கினோம். அவரது வீட்டில் இரண்டு குளியல் அறை இருந்தும் ஒன்று உபயோகபடுத்தும் நிலையில் இல்லாததால் சரி செய்வதற்கு ஒருவரை அழைத்திருந்தோம். அன்று நாங்கள் ஆக்ராவை சுற்றுவதற்காக ஒரு கார் ஏற்பாடு செய்திருந்தோம். அதி காலை நான்கு மணிக்கு ஓட்டுனர் வந்து கதவை தட்டிய பொழுது, என் அம்மா அவர் யார் என்று கேட்டார். அவர் ஆங்கிலம் தெரியாததால் தான் கார் ஒட்டுனர் என்றும், 'பாத்ரூம்' உபயோகப் படுத்தவேண்டும் என்று ஹிந்தியில் கூறினார். அம்மா அவர் 'பாத்ரூம்' சரி செய்வதற்காக வந்திருக்கிரார் என்று தவறுதலாக புரிந்து கொண்டு, ஹிந்தியில், இன்று வேண்டாம் நாளை வரவும் என்றார். அவர் விடாப்பிடியாக 'பாத்ரூம் பாத்ரூம்' என்று இப்பொழுது சிறிது கத்தவே செய்தார். அம்மாவும் விடாமல் நாளைக்கு பார்த்துக்கலாம் என்று ஹிந்தியில் கூற, பின் என் அண்ணி அவரிடம் விசாரித்த பிறகுதான் எங்க ளுக்கு புரிந்தது அவர் அவசர தேவைக் காக, 'பாத்ரூம்' என்று கூறினார் என்று. சிறிது நேரம் அங்கே ஒரே சிரிப்பொலி தான், அம்மாவும் அனைவரும்.
தாமரை
More

அத்தைய நாய் கடிச்சிடுத்துப்பா!
Share: 




© Copyright 2020 Tamilonline